Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Ayah: (3) Surah: Al-Māidah
حُرِّمَتْ عَلَیْكُمُ الْمَیْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّیَةُ وَالنَّطِیْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّیْتُمْ ۫— وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ— ذٰلِكُمْ فِسْقٌ ؕ— اَلْیَوْمَ یَىِٕسَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ دِیْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ— اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا ؕ— فَمَنِ اضْطُرَّ فِیْ مَخْمَصَةٍ غَیْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ ۙ— فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
5.3. அறுக்கப்படாமல் தாமாகச் செத்த பிராணி, வழிந்தோடிய இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரில் அறுக்கப்பட்டது, கழுத்து நெறிபட்டு செத்தது, அடிபட்டு செத்தது, உயரமான இடத்திலிருந்து விழுந்து செத்தது, கொம்பால் முட்டப்பட்டு செத்தது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். சிங்கம், புலி, ஓநாய் போன்ற மிருகங்களால் கடித்து குதறப்பட்டு செத்தவையும் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை சாவதற்கு முன்னரே நீங்கள் அவற்றை முறையாக அறுத்துவிட்டால் அவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். சிலைகளுக்காக பலியிடப்பட்டவற்றையும் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். ''செய்யவும்'' அல்லது ''செய்ய வேண்டாம்'' என்று எழுதப்பட்ட கற்கள் அல்லது அம்புகளின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் உங்களுக்குப் பங்கீடு செய்யப்பட்ட மறைவானவற்றை அறிந்துகொள்ள முயற்சிப்பதையும் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். தடைசெய்யப்பட்ட இந்த காரியங்களில் ஈடுபடுவது அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாகும். இன்று இஸ்லாத்தின் பலத்தைக் கண்ட நிராகரிப்பாளர்கள் உங்களை அதனை விட்டும் திருப்பிவிட முடியும் என்பதில் நம்பிக்கையிழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். இன்றைய தினம் உங்களின் மார்க்கமான இஸ்லாத்தை நான் பரிபூரணப்படுத்திவிட்டேன். உங்கள்மீது பொழிந்த வெளிப்படையான, அந்தரங்கமான அருட்கொடையையும் முழுமைப்படுத்திவிட்டேன். உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே இதைத்தவிர வேறு மார்க்கத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எவரேனும் பசியின் காரணமாக நிர்ப்பந்திக்கப்பட்டு பாவம்செய்ய விரும்பாமல் இறந்தவற்றை உண்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• تحريم ما مات دون ذكاة، والدم المسفوح، ولحم الخنزير، وما ذُكِرَ عليه اسْمٌ غير اسم الله عند الذبح، وكل ميت خنقًا، أو ضربًا، أو بسقوط من علو، أو نطحًا، أو افتراسًا من وحش، ويُستثنى من ذلك ما أُدرِكَ حيًّا وذُكّيَ بذبح شرعي.
1. அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர்கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெறிபட்டு அல்லது அடிபட்டு அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து அல்லது கொம்பால் முட்டப்பட்டு அல்லது மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டு செத்தவை ஆகியவை யாவும் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் இறப்பதற்கு முன் அறுக்கப்பட்டவை விதிவிலக்கானவையாகும்.

• حِلُّ ما صاد كل مدرَّبٍ ذي ناب أو ذي مخلب.
2. பயிற்றுவிக்கப்பட்ட கூரிய பற்களையுடைய அல்லது நகங்களையுடைய வேட்டைப்பிராணிகள் வேட்டையாடியவையும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

• إباحة ذبائح أهل الكتاب، وإباحة نكاح حرائرهم من العفيفات.
3. வேதக்காரர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளை உண்ணலாம். அவர்களிலுள்ள சுதந்திரமான, கற்பொழுக்கமுள்ள பெண்களை மணமுடித்துக் கொள்ளவும் முடியும்.

 
Terjemahan makna Ayah: (3) Surah: Al-Māidah
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup