Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - ભાષાંતરોની યાદી

XML CSV Excel API
Please review the Terms and Policies

શબ્દોનું ભાષાંતર સૂરહ: યૂસુફ   આયત:
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِیْ ۚ— اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّیْ ؕ— اِنَّ رَبِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
“நான் என் ஆன்மாவை தூய்மைப்படுத்த மாட்டேன். (தவறுகளை விட்டு நீங்கியது என்று உயர்வாகப் பேசமாட்டேன்.) என் இறைவன் அருள் புரிந்ததைத் தவிர (மற்ற) ஆன்மா(க்கள் அனைத்தும் மனிதனை) பாவத்திற்கு அதிகம் தூண்டக்கூடியதே. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” (என்று யூஸுஃப் கூறினார்).
અરબી તફસીરો:
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِیْ ۚ— فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْیَوْمَ لَدَیْنَا مَكِیْنٌ اَمِیْنٌ ۟
“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்” என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூஸுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்” என்று கூறினார்.
અરબી તફસીરો:
قَالَ اجْعَلْنِیْ عَلٰی خَزَآىِٕنِ الْاَرْضِ ۚ— اِنِّیْ حَفِیْظٌ عَلِیْمٌ ۟
“நாட்டின் கஜானாக்கள் மீது (பொறுப்பாளராக) என்னை ஆக்குவீராக. நிச்சயமாக நான் பாதுகாப்பவன், நன்கறிந்தவன்” என்று (யூஸுஃப்) கூறினார்.
અરબી તફસીરો:
وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ۚ— یَتَبَوَّاُ مِنْهَا حَیْثُ یَشَآءُ ؕ— نُصِیْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
இவ்வாறே யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம் அவர் தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகின்றோம். நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
અરબી તફસીરો:
وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சுகின்றவர்களாக இருந்தவர்களுக்கு திட்டமாக மறுமையின் கூலிதான் மேலானது.
અરબી તફસીરો:
وَجَآءَ اِخْوَةُ یُوْسُفَ فَدَخَلُوْا عَلَیْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟
யூஸுஃபுடைய சகோதரர்கள் வந்தார்(கள்); அவரிடம் (அவர்கள்) நுழைந்தார்கள். அவர் அவர்களை அறிந்தார். அவர்கள் அவரை அறியாதவர்களாக இருந்தனர்.
અરબી તફસીરો:
وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِیْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِیْكُمْ ۚ— اَلَا تَرَوْنَ اَنِّیْۤ اُوْفِی الْكَیْلَ وَاَنَا خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
(யூஸுஃப்) அவர்களுடைய சாமான்களை அவர்களுக்கு தயார்படுத்திய போது, (மறுமுறை வரும் சமயம்) உங்கள் தந்தை மூலமாக உங்களுக்குள்ள ஒரு சகோதரனை என்னிடம் கொண்டு வாருங்கள். நிச்சயமாக நான் (உங்களுக்கு) அளவையை முழுமையாக்குவதையும் விருந்தளிப்பவர்களில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கூறினார்.
અરબી તફસીરો:
فَاِنْ لَّمْ تَاْتُوْنِیْ بِهٖ فَلَا كَیْلَ لَكُمْ عِنْدِیْ وَلَا تَقْرَبُوْنِ ۟
நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு என்னிடம் அறவே (உணவு) அளவை இல்லை. இன்னும் என்னை நெருங்காதீர்கள்” என்று கூறினார்.
અરબી તફસીરો:
قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفٰعِلُوْنَ ۟
“நாங்கள் அவருடைய தந்தையிடம் அவரை தொடர்ந்து கேட்போம். நிச்சயமாக நாங்கள் (அதை) செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள்.
અરબી તફસીરો:
وَقَالَ لِفِتْیٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِیْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ یَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمْ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
(பின்னர் யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வையுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பினால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும். (ஆகவே, இப்படி செய்யுங்கள்)” என்று கூறினார்.
અરબી તફસીરો:
فَلَمَّا رَجَعُوْۤا اِلٰۤی اَبِیْهِمْ قَالُوْا یٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَیْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட மேல் அதிகம் கொடுக்க) எங்களுக்கு அளவை தடுக்கப்பட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்பவர்கள்தான்” என்று கூறினர்.
અરબી તફસીરો:
 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: યૂસુફ
સૂરતોની યાદી પૃષ્ઠ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - ભાષાંતરોની યાદી

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

બંધ કરો