Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e haala Taamil - Umar Shariif * - Loowdi firooji ɗi

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Firo maanaaji Simoore.: Simoore nagge   Aaya.:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
நிச்சயமாக எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ— وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ— وَّلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟۠
அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் செவியின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) பெரிய தண்டனை உண்டு.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۟ۘ
இன்னும், “நாங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
یُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ— وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟ؕ
அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்களைத் தாமே தவிர (பிறரை) ஏமாற்றவில்லை. இன்னும், (இதை) அவர்கள் உணர மாட்டார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ— فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟ — بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟
அவர்களின் உள்ளங்களில் ஒரு (சந்தேக) நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் (சந்தேக) நோயை அதிகப்படுத்தினான். இன்னும், அவர்கள் பொய் கூறுபவர்களாக இருக்கின்ற காரணத்தால் துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ— قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ۟
இன்னும், பூமியில் விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “நாங்களெல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்” என்று கூறுகிறார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ ۟
அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் விஷமிகள்.” எனினும், அவர்கள் (அதை) உணர மாட்டார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ ۟
இன்னும், “(இந்த தூதரை உண்மையாக பின்பற்றிய) மக்கள் (-நபித்தோழர்கள்) நம்பிக்கை கொண்டது போன்று (நீங்களும்) நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள்.” எனினும், அவர்கள் (அதை) அறிய மாட்டார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ— قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ— اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ۟
இன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய மனித) ஷைத்தான்களிடம் சென்று (அவர்களுடன்) தனிமையில் இருந்தாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்களெல்லாம் (அவர்களை) கேலி செய்பவர்கள்தான்” என்று கூறுகிறார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். இன்னும், அவர்களுடைய அட்டூழியத்தில் அவர்கள் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டுவைக்கிறான்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی ۪— فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
அவர்கள் எத்தகையோர் என்றால் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கினார்கள். ஆகவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
 
Firo maanaaji Simoore.: Simoore nagge
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e haala Taamil - Umar Shariif - Loowdi firooji ɗi

Eggi nde ko Seek Umar Sariif ɓii Abdu Salaam.

Uddu