Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Simoore.: Simoore anfaali   Aaya.:
اِذْ تَسْتَغِیْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّیْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُرْدِفِیْنَ ۟
8.9. பத்ரு உடைய நாளில் அல்லாஹ்விடம் உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் உதவி தேடியதை நினைவுகூருங்கள். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான். ஒருவரையொருவர் பின்தொடர்ந்து வந்த ஆயிரம் வானவர்களைக் கொண்டு அவன் உங்களுக்கு உதவிசெய்தான்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ؕ— وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
8.10. -நம்பிக்கையாளர்களே!- வானவர்களைக் கொண்டு உதவி புரிவதை அவன் உங்கள் எதிரிக்கு எதிராக உங்களுக்கு அவன் உதவி செய்வான் என்ற நற்செய்தியாகவே ஆக்கியுள்ளான். மேலும் வெற்றியை உறுதியாக நம்பி உங்கள் உள்ளங்கள் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவும் அவ்வுதவியைச் செய்தான். வெற்றி ஆள் பலம் ஆயுத பலத்தைக் கொண்டல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்தே வெற்றி கிடைக்கிறது. அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தான் வழங்கும் சட்டங்களில், அமைத்த விதிகளில், அவன் ஞானம்மிக்கவன்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ
8.11. -நம்பிக்கையாளர்களே!- அவன் உங்களுக்கு ஏற்பட்ட எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போக்க, சிறு தூக்கத்தை அளித்ததை நினைவுகூருங்கள். அழுக்குகளிலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஷைத்தானின் ஊசலாட்டங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும் போரின் போது உங்கள் உடல்கள் நிலைத்து நிற்க உங்களின் உள்ளங்களையும் உறுதிப்படுத்துவதற்காகவும் மணல் நிலத்தை ஈரப்படுத்தி உங்கள் பாதங்கள் புதைந்துவிடாதவாறு அதனை உறுதிப்படுத்துவதற்காகவும் அவன் வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கினான்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَی الْمَلٰٓىِٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْا ؕ— سَاُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ ۟ؕ
8.12. -தூதரே!- பத்ரில் நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவதற்காக அனுப்பப்பட்ட வானவர்களுக்கு உம் இறைவன் அறிவிப்பு செய்தான்: -“வானவர்களே!- உதவி மற்றும் ஆதரவின் மூலம் நான் உங்களுடன் இருக்கின்றேன். எதிரிகளுக்கு எதிரான போரில் நம்பிக்கையாளர்களின் உறுதிகளைப் பலப்படுத்துங்கள். நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் நான் கடுமையான பயத்தை ஏற்படுத்திவிடுவேன். எனவே -நம்பிக்கையாளர்களே!- நிராகரிப்பாளர்களின் கழுத்துகளை அவர்கள் இறப்பதற்காக வெட்டுங்கள். அவர்கள் போர் செய்ய முடியாதவாறு செயலிழந்து செல்வதற்காக அவர்களின் ஒவ்வொரு மூட்டுக்களையும் உறுப்புக்களையும் தாக்குங்கள்.”
Tafsiraaɗe Aarabu ɗen:
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ— وَمَنْ یُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
8.13. நிராரிப்பாளர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மற்றும் உறுப்புக்கள் தாக்கப்படுவதற்கான காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்குக் கட்டளையிடப்பதை அவர்கள் செயல்படுத்தவுமில்லை; தடுக்கப்பட்டதை விட்டு தவிர்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் யார் அல்லாஹ்வுடைய கட்டளைக்கும் தூதரின் கட்டளைக்கும் மாறாகச் செயல்படுகிறாரோ நிச்சயமாக அல்லாஹ் இவ்வுலகில் அவர்களை கைதிகளாகப் பிடித்தும் கொலைசெய்தும் மறுவுலகில் நெருப்பைக்கொண்டும் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.
Tafsiraaɗe Aarabu ɗen:
ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِیْنَ عَذَابَ النَّارِ ۟
8.14. -அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்வோரே!- இந்த உலகில் விரைவான இந்த வேதனையைச் சுவையுங்கள். நீங்கள் நிராகரிப்பிலும் பிடிவாதத்திலும் நிலைத்திருந்து இறந்து விட்டால் மறுவுலகில் நெருப்பினாலான வேதனையும் உள்ளது.
Tafsiraaɗe Aarabu ɗen:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ ۟ۚ
8.15. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! போரில் இணைவைப்பாளர்களை அண்மையில் சந்தித்தால் பின்வாங்கி புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். மாறாக அவர்களுக்கு முன்னிலையில் உறுதியாக நில்லுங்கள். பொறுமையுடன் அவர்களை எதிர்கொள்ளுங்கள். அல்லாஹ் தன் உதவியைக் கொண்டு உங்களுடன் இருக்கின்றான்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَمَنْ یُّوَلِّهِمْ یَوْمَىِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَیِّزًا اِلٰی فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
8.16. ஒரு திட்டத்தின்படி பின்வாங்கி திருப்பித் தாக்குதல் அல்லது உதவி படைகளுடன் சேர்ந்து கொள்ளுதல் ஆகிய காரணங்களின்றி உங்களில் யாரெல்லாம் புறங்காட்டி ஓடிவிடுவார்களோ அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தோடு திரும்பிவிட்டார்கள். அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். மறுமையில் அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அது இருப்பிடங்களில் மோசமான இருப்பிடமாகும்.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• في الآيات اعتناء الله العظيم بحال عباده المؤمنين، وتيسير الأسباب التي بها ثبت إيمانهم، وثبتت أقدامهم، وزال عنهم المكروه والوساوس الشيطانية.
1. வசனங்களில் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களின் நிலமையை அல்லாஹ் நன்கு கவனித்துக் கொண்டே உள்ளான் என்ற விடயம் உள்ளடங்கியுள்ளது. அவன் அவர்களின் ஈமானையும் பாதங்களையும் உறுதிப்படுத்தி, கெடுதிகள், ஷைத்தானின் ஊசலாட்டங்கள் அவர்களை விட்டும் அகன்றுவிடும் காரணிகளை இலகுபடுத்தினான்.

• أن النصر بيد الله، ومن عنده سبحانه، وهو ليس بكثرة عَدَدٍ ولا عُدَدٍ مع أهمية هذا الإعداد.
2. ஆள் பலம், ஆயுத பலம் என்பன முக்கியமானதாக இருந்தாலும் வெற்றியேற்படுவது அதன் மூலமாக அல்ல. அது அல்லாஹ்வின் கைவசம் உள்ளதாகும். அவன் புறத்திலிருந்தே வெற்றி கிடைக்கிறது.

• الفرار من الزحف من غير عذر من أكبر الكبائر.
3. காரணமின்றி போரில் புறங்காட்டி ஓடுவது மிகப் பெரும் பாவமாகும்.

• في الآيات تعليم المؤمنين قواعد القتال الحربية، ومنها: طاعة الله والرسول، والثبات أمام الأعداء، والصبر عند اللقاء، وذِكْر الله كثيرًا.
4. வசனங்களில் நம்பிக்கையாளர்களுக்கு போரின் விதிமுறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில: அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட வேண்டும், எதிரிகளுக்கு முன்னால் உறுதியாக நிற்க வேண்டும், பொறுமையுடன் அவர்களை எதிர்கொள்ள வேண்டும், அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர வேண்டும்.

 
Firo maanaaji Simoore.: Simoore anfaali
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu