Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Simoore.: Simoore al-araaf   Aaya.:

அல்அஃராப்

Hino jeyaa e paandale simoore nden:
انتصار الحق في صراعه مع الباطل، وبيان عاقبة المستكبرين في الدنيا والآخرة.
அசத்தியத்துடனான போராட்டத்தில் சத்தியம் வெற்றிபெறுதலும், ஈருலகிலும் ஆணவமுடையோரின் முடிவைத் தெளிவுபடுத்தலும்

الٓمّٓصٓ ۟ۚ
7.1. பார்க்க அல்பகரா என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
كِتٰبٌ اُنْزِلَ اِلَیْكَ فَلَا یَكُنْ فِیْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
7.2. தூதரே! கண்ணியமிக்க குர்ஆன் அல்லாஹ் உம்மீது இறக்கிய வேதமாகும். எனவே உமது நெஞ்சில் அது குறித்து இறுக்கமோ சந்தேகமோ ஏற்பட்டு விட வேண்டாம். நீர் மக்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் ஆதாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுவதற்காகவும் இதனை அல்லாஹ் உம்மீது இறக்கியுள்ளான். ஏனெனில் நம்பிக்கையாளர்கள்தாம் நினைவூட்டலைக் கொண்டு பயனடைவார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ؕ— قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟
7.3. மனிதர்களே! உங்கள் இறைவன் உங்கள் மீது இறக்கிய வேதத்தையும் தூதரின் வழிமுறையையும் பின்பற்றுங்கள். ஷைத்தான்கள் அல்லது தீய பாதிரிகள் ஆகியோரில் நீங்கள் நண்பர்களாகக் கருதுவோரின் மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். அவர்களது மன இச்சைகள் கூறுவதற்காக அல்லாஹ் இறக்கியதை விட்டு விட்டு அவர்களை நேசம் கொள்கிறீர்கள். நீங்கள் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் சத்தியத்தை விட்டு விட்டு மற்றவற்றிற்கு முன்னுரிமை அளித்திருக்க மாட்டீர்கள்; உங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டிருப்பீர்கள்; அதனைத் தவிர மற்றவற்றை விட்டிருப்பீர்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَكَمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا فَجَآءَهَا بَاْسُنَا بَیَاتًا اَوْ هُمْ قَآىِٕلُوْنَ ۟
7.4. நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உறுதியாக நிலைத்திருந்த எவ்வளவோ ஊர்களை நம் வேதனையால் அழித்திருக்கின்றோம். அவர்கள் இரவிலோ பகலிலோ அலட்சியத்தில் ஆழ்ந்திருந்த போது கடுமையான நம்முடைய வேதனை அவர்கள் மீது இறங்கியது. அவர்களால் வேதனையை விட்டும் தங்களைக் காத்துக் கொள்ளவும் முடியவில்லை; அவர்களின் பொய்யான தெய்வங்களும் அவர்களைக் காப்பாற்றவில்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَآءَهُمْ بَاْسُنَاۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
7.5. வேதனை இறங்கிய பிறகு அல்லாஹ்வை நிராகரித்த தங்களின் அக்கிரமத்தை ஒத்துக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَلَنَسْـَٔلَنَّ الَّذِیْنَ اُرْسِلَ اِلَیْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِیْنَ ۟ۙ
7.6. மறுமை நாளில், எந்தெந்த சமூகங்களின்பால் தூதர்களை அனுப்பினோமோ அவர்களிடம், ‘தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்?’ என்று நிச்சயம் விசாரிப்போம். தூதர்கள் தங்களின் தூதை நிறைவேற்றினார்களா? அவர்களது சமூகங்கள் அவர்களுக்கு என்ன பதிலளித்தன என்று தூதர்களிடமும் விசாரித்தே தீருவோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَلَنَقُصَّنَّ عَلَیْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَآىِٕبِیْنَ ۟
7.7. படைப்புகள் அனைவரும், நமது அறிவுடனே இவ்வுலகில் செய்த செயல்கள் குறித்து நாம் அவர்களிடம் எடுத்துரைப்போம். அவர்களின் செயல்கள் அனைத்தையும் நாம் நன்கறிந்தவர்களாக இருந்தோம். எதுவும் நம்மை விட்டு மறைவாக இல்லை. எந்த நேரத்திலும் நாம் அவர்களை விட்டு மறைந்தும் இருக்கவில்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَالْوَزْنُ یَوْمَىِٕذِ ١لْحَقُّ ۚ— فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
7.8. மறுமை நாளில் செயல்கள் அனைத்தும் எவ்வித அநீதியுமின்றி நீதியுடன் எடைபோடப்படும். எவர்களது நன்மையின் எடைத்தட்டு தீமையின் எடைத்தட்டை விட கனமாகி விடுமோ அவர்கள்தாம் விரும்பியதைப் பெற்று பயத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாவர்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَظْلِمُوْنَ ۟
7.9. எவர்களது தீமையின் எடைத்தட்டு நன்மையின் எடைத்தட்டைவிட கனமாகிவிடுமோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்தன் காரணமாக மறுமை நாளில் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்தி இழப்படைபவார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِی الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ ؕ— قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟۠
7.10. ஆதமின் மக்களே! நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் நீங்கள் வாழ்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினோம். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது உங்கள் மீது கடமையாயிருந்தது. ஆனாலும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்தினீர்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖۗ— فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— لَمْ یَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟
7.11. மனிதர்களே! நாம் உங்களின் தந்தை ஆதமைப் படைத்தோம். பின்னர் அவருக்கு அழகிய தோற்றமும் வடிவமும் கொடுத்தோம். பின்னர் அவரைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு அவருக்கு சிரம்பணியுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர. அவன் கர்வம் மற்றும் பிடிவாதம் காரணமாக சிரம்பணிய மறுத்தான்.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• من مقاصد إنزال القرآن الإنذار للكافرين والمعاندين، والتذكير للمؤمنين.
1. குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்று, நிராகரிப்பாளர்களுக்கும் பிடிவாதக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்வதும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுவதுமாகும்.

• أنزل الله القرآن إلى المؤمنين ليتبعوه ويعملوا به، فإن فعلوا ذلك كملت تربيتهم، وتمت عليهم النعمة، وهُدُوا لأحسن الأعمال والأخلاق.
2. நம்பிக்கையாளர்கள் குர்ஆனைப் பின்பற்றி அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் குர்ஆனை இறக்கியுள்ளான். அவர்கள் இவ்வாறு செய்துவிட்டால் அவர்களின் தர்பியா முழுமையடைந்துவிடும்; அருட்கொடைகள் நிறைவடைந்துவிடும். நற்செயல்களின் மற்றும் நற்பண்புகளின் பக்கம் அவர்கள் வழிகாட்டப்படுவார்கள்.

• الوزن يوم القيامة لأعمال العباد يكون بالعدل والقسط الذي لا جَوْر فيه ولا ظلم بوجه.
3. மறுமை நாளில் அடியார்களின் செயல்கள் அனைத்தும் நியாயமாக எடைபோடப்படும். எந்த அநீதியும் இழைக்கப்படாது.

• هَيَّأ الله الأرض لانتفاع البشر بها، بحيث يتمكَّنون من البناء عليها وحَرْثها، واستخراج ما في باطنها للانتفاع به.
4. மனிதன் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் பூமியைத் தயார்படுத்தியுள்ளான். அவன் அங்கு வீடுகளை அமைக்கவும், பயிரிடவும், பயன்பெறுவதற்காக அதன் உள்ளே உள்ளவற்றை எடுக்கவும் முடியும்.

 
Firo maanaaji Simoore.: Simoore al-araaf
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu