Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Simoore.: Simoore rewɓe   Aaya.:
وَالّٰتِیْ یَاْتِیْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَیْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ— فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِی الْبُیُوْتِ حَتّٰی یَتَوَفّٰهُنَّ الْمَوْتُ اَوْ یَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِیْلًا ۟
4.15. உங்கள் பெண்களில் திருமணம் முடித்த முடிக்காத யாரேனும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு எதிராக நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய முஸ்லிமான நான்கு ஆண் சாட்சிகளைத் தேடுங்கள். அவர்கள் ‘அந்தப் பெண்கள் விபச்சாரம் புரிந்தார்கள்’ என்று சாட்சிகூறினால் அந்தப் பெண்களுக்குத் தண்டனையாக அவர்கள் மரணிக்கும்வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு வேறொரு வழியை ஏற்படுத்தும்வரை அவர்களை வீடுகளில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். (பின்னர் அல்லாஹ் அவர்களுக்கான வழியைத் தெளிவுபடுத்தினான், அவர்கள் திருமணமாகதவர்களாக இருந்தால் அவர்கள்மீது நூறு கசையடிகள் அடிக்கப்பட்டு ஒரு வருடம் நாடுகடத்தப்பட வேண்டும். அவர்கள் திருமணமானவர்களாக இருந்தால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்).
Tafsiraaɗe Aarabu ɗen:
وَالَّذٰنِ یَاْتِیٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ— فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ؕ— اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِیْمًا ۟
4.16. திருமணம் முடித்த முடிக்காத ஆண்களில் விபச்சாரம் புரிபவர்களையும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் நாவால், கரங்களால் தண்டியுங்கள். அவர்கள் திருந்தி தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டால் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். ஏனெனில் பாவமன்னிப்புக் கோரியவர் பாவம் செய்யாதவரைப் போலாவார். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.இது விபச்சாரம் புரிந்தவர்கள் விஷயத்தில் ஆரம்பத்தில் இறக்கப்பட்ட கட்டளையாகும். பின்னர் அல்லாஹ் இதனை ரத்துசெய்து திருமணமாகாதவனுக்கு கசையடியும் நாடுகடத்தலும் திருமணமானவனுக்கு கல்லெறிவதும் விதிக்கப்பட்டது.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِنَّمَا التَّوْبَةُ عَلَی اللّٰهِ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ یَتُوْبُوْنَ مِنْ قَرِیْبٍ فَاُولٰٓىِٕكَ یَتُوْبُ اللّٰهُ عَلَیْهِمْ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
4.17. பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறியாமல் பாவங்களில் ஈடுபட்டு - மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்ததுதான் - பின்னர் தங்கள் இறைவனிடம் மரணவேளை வருவதற்கு முன்னரே திரும்பிவிடுபவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கையைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். இவர்களின் குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். அல்லாஹ் தன் படைப்பினங்களின் நிலைகளைக் குறித்து நன்கறிந்தவன். தனது நிர்ணயத்தில், சட்டங்களில் ஞானம்மிக்கவன்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَلَیْسَتِ التَّوْبَةُ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ۚ— حَتّٰۤی اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّیْ تُبْتُ الْـٰٔنَ وَلَا الَّذِیْنَ یَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ؕ— اُولٰٓىِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
4.18. பாவமன்னிப்புக் கோராமல் மரணவேளை நெருங்கும்வரை பாவங்களில் நிலைத்திருந்து இறுதியில், “நான் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். நிராகரிப்பில் நிலைத்திருந்து இறந்துவிடுபவரின் பாவமன்னிப்புக் கோரிக்கையையும் அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான். மரணம்வரும்வரை பாவங்களில் நிலைத்திருப்பவர்கள், நிராகரித்த நிலையில் மரணிப்பவர்கள் ஆகியோருக்காக நாம் வேதனைமிக்க தண்டனையை தயார்படுத்தி வைத்துள்ளோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ— وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ۚ— وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ— فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا ۟
4.19. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களின் தந்தையரிடமிருந்து சொத்தை வாரிசாகப் பெறுவதுபோல் அவர்களின் மனைவியரை வாரிசாகப் பெறுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வதோ, நீங்கள் விரும்புபவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பதோ, அவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதோ கூடாது. நீங்கள் வெறுக்கும் உங்கள் மனைவியரை அவர்களுக்கு அளித்த மணக்கொடை மற்றும் ஏனையவற்றை திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தடுத்துவைத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானதல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமான விபச்சாரத்தில் ஈடுபட்டாலே தவிர. அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் அளித்த மணக்கொடையை திரும்பப் பெறுவதற்காக நெருக்கடியளிப்பதற்காக தடுத்து வைத்துக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. உங்கள் பெண்களுக்கு நோவினை கொடுக்காமலும் உபகாரம் புரிந்தும் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். உலக காரியம் ஒன்றுக்காக நீங்கள் அவர்களை வெறுத்தால் அவர்களைச் சகித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வெறுக்கும் விஷயத்தில் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் வைத்திருக்கலாம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• ارتكاب فاحشة الزنى من أكثر المعاصي خطرًا على الفرد والمجتمع؛ ولهذا جاءت العقوبات عليها شديدة.
1. விபச்சாரம் தனிமனிதன்மீதும் சமூகத்தின்மீதும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய பாவங்களில் ஒன்றாகும். எனவேதான் அதற்கான தண்டனையும் கடுமையாக இருக்கின்றது.

• لطف الله ورحمته بعباده حيث فتح باب التوبة لكل مذنب، ويسر له أسبابها، وأعانه على سلوك سبيلها.
2. அல்லாஹ் தன் அடியார்களுக்காக பாவமன்னிப்பின் வாசலை திறந்தே வைத்துள்ளான். அதனுடைய காரணிகளையும் இலகுபடுத்தியுள்ளான். அந்த வழியில் செல்வதற்கு உதவியும் புரிந்துள்ளான். இது அல்லாஹ் தன் அடியார்கள்மீது பொழிந்த பெருங்கருணையாகும்.

• كل من عصى الله تعالى بعمد أو بغير عمد فهو جاهل بقدر من عصاه جل وعلا، وجاهل بآثار المعاصي وشؤمها عليه.
3. வேண்டுமென்றோ தற்செயலாகவோ பாவங்களில் ஈடுபடும் அனைவரும் தான் மாறுசெய்துகொண்டிருக்கும் அல்லாஹ்வின் தகுதியையும் பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும் அறியாதவரே.

• من أسباب استمرار الحياة الزوجية أن يكون نظر الزوج متوازنًا، فلا يحصر نظره فيما يكره، بل ينظر أيضا إلى ما فيه من خير، وقد يجعل الله فيه خيرًا كثيرًا.
4. மணவாழ்க்கை உறுதியாக நிலைத்திருக்க கணவன் சமநிலைப் பார்வையுடையவனாக இருக்கவேண்டும். அவன் தான் வெறுக்கும் விஷயத்தை மாத்திரம் கவனிக்காது. மனைவியின் நல்லவிடயங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சிலவேளை அல்லாஹ் அதில் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.

 
Firo maanaaji Simoore.: Simoore rewɓe
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu