Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Aaya.: (175) Simoore.: Simoore nagge
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ— فَمَاۤ اَصْبَرَهُمْ عَلَی النَّارِ ۟
2.175. மக்களுக்குத் தேவையான கல்வியை மறைக்கக்கூடிய இவர்கள் உண்மையான கல்வியை மறைத்தபோது, நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் அல்லாஹ்வின் மன்னிப்பிற்குப் பதிலாக அவனுடைய தண்டனையையும் வாங்கிக் கொண்டார்கள். அவர்களை நரகத்தில் தள்ளுவதற்கு காரணமான விஷயங்களில் ஈடுபடுவதை எவ்வளவு அருமையாக சகித்துக் கொள்கிறார்கள்!? தம்மால் சகித்துக்கொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் வேதனையை அவர்கள் பொருட்படுத்தவில்லைபோலும்.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• أكثر ضلال الخلق بسبب تعطيل العقل، ومتابعة من سبقهم في ضلالهم، وتقليدهم بغير وعي.
1. அறிவைப் பயன்படுத்தாமல் வழிகேட்டில் தமக்கு முன்னுள்ளவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றியதனால்தான் பெரும்பாலான மக்கள் வழிதவறினார்கள்.

• عدم انتفاع المرء بما وهبه الله من نعمة العقل والسمع والبصر، يجعله مثل من فقد هذه النعم.
2. அல்லாஹ் வழங்கிய அறிவு, செவிப்புலன், பார்வை போன்ற அருட்கொடைகளைக் கொண்டு பயனடையாதவர்கள் அவற்றைத் இழந்தவர்களைப் போலாவர்.

• من أشد الناس عقوبة يوم القيامة من يكتم العلم الذي أنزله الله، والهدى الذي جاءت به رسله تعالى.
3. மறுமையில் மனிதர்களில் கடுமையான தண்டனைக்கு ஆளாகக்கூடியவர்கள் அல்லாஹ் இறக்கிய கல்வியையும் தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலையும் மறைத்தவர்கள்தாம்.

• من نعمة الله تعالى على عباده المؤمنين أن جعل المحرمات قليلة محدودة، وأما المباحات فكثيرة غير محدودة.
4. தடைசெய்யப்பட்டதை குறைவாகவும் அனுமதிக்கப்பட்டதை அதிகமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளது, தன்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு அவன் வழங்கிய அருட்கொடையாகும்.

 
Firo maanaaji Aaya.: (175) Simoore.: Simoore nagge
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu