Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Simoore.: Simoore roɓo   Aaya.:

அல்இஸ்ரா

Hino jeyaa e paandale simoore nden:
تثبيت الله لرسوله صلى الله عليه وسلم وتأييده بالآيات البينات، وبشارته بالنصر والثبات.
பல்வேறு தெளிவான அத்தாட்சிகள் மூலம் அல்லாஹ் தனது தூதரை உறுதிப்படுத்துவதோடு வெற்றியை கொண்டு நன்மாராயம் கூறுதல்

سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
17.1. அல்லாஹ் தூய்மையானவன் மகத்தானவன். ஏனெனில் வேறு யாராலும் செய்வதற்கு ஆற்றலில்லாததை செய்வதற்கு அவன் ஆற்றலுள்ளவன். அவனே தன் அடியார் முஹம்மதை உடலோடும் ஆன்மாவோடும் விழித்த நிலையில் இரவின் ஒரு பகுதியில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பழங்களினாலும் பயிர்களினாலும் நபிமார்களின் இல்லங்களினாலும் நாம் அருள்செய்த பைத்துல் முகத்தஸை நோக்கி தன் வல்லமையை அறிவிக்கக்கூடிய சில சான்றுகளைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றான். நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். செவியேற்கப்படும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் பார்க்கக்கூடியவன். பார்க்கப்படக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِیْ وَكِیْلًا ۟ؕ
17.2. நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாக ஆக்கினோம். நாம் அவர்களிடம் கூறினோம்: “என்னைத் தவிர யாரையும் உங்கள் விவகாரங்களை ஒப்படைக்கும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மாறாக என்னையே சார்ந்திருங்கள்.”
Tafsiraaɗe Aarabu ɗen:
ذُرِّیَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؕ— اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا ۟
17.3. நூஹுடன் வெள்ளத்திலிருந்து தப்புவதற்கு நாம் அருள்புரிந்தவர்களின் சந்ததியிலுள்ளவர்களே நீங்கள். எனவே இந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனை வழிப்பட்டு அவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த விஷயத்தில் நூஹைப் பின்பற்றுங்கள். நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றிசெலுத்தக்கூடியவராக இருந்தார்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَقَضَیْنَاۤ اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ فِی الْكِتٰبِ لَتُفْسِدُنَّ فِی الْاَرْضِ مَرَّتَیْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِیْرًا ۟
17.4. நிச்சயமாக அவர்கள் பூமியில் பாவங்கள் மற்றும் கர்வத்தினால் இருமுறை குழப்பம் விளைவிப்பார்கள்; மக்களின் மீது ஆதிக்கம்கொண்டு எல்லை கடந்து அநீதி, அட்டூழியம் செய்வார்கள் என்று நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு தவ்ராத்தில் அறிவித்தோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰىهُمَا بَعَثْنَا عَلَیْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّیَارِ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا ۟
17.5. அவர்கள் மூலம் முதல் குழப்பம் நிகழ்ந்து விட்டால் நாம் பெரும் வலிமையான சில நம் அடியார்களை அவர்கள் மீது சாட்டிவிடுவோம். அவர்கள் இவர்களை கொன்று குவிப்பார்கள். ஓட ஓட விரட்டுவார்கள். நகரத்தின் மத்தியில் புகுந்து காண்பவற்றையெல்லாம் நாசம் செய்து அலைவார்கள். அவ்வாறு சந்தேகம் இல்லாமல் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
Tafsiraaɗe Aarabu ɗen:
ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَیْهِمْ وَاَمْدَدْنٰكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِیْرًا ۟
17.6. பின்னர் -இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பிய போது உங்கள் மீது சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை மீண்டும் வழங்கினோம். உங்களின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு பிள்ளைகள் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின்னரும் உங்களுக்கு செல்வங்களையும் பிள்ளைகளையும் வழங்கி உதவி செய்தோம். உங்களின் எதிரிகளைவிட உங்களைப் பெரும் எண்ணிக்கையினராக ஆக்கினோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُمْ ۫— وَاِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕ— فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ لِیَسُوْٓءٗا وُجُوْهَكُمْ وَلِیَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّلِیُتَبِّرُوْا مَا عَلَوْا تَتْبِیْرًا ۟
17.7. -இஸ்ராயீலின் மக்களே!- நீங்கள் நன்மையான செயல்களைச் சிறந்த முறையில் நிறைவேற்றினால் அவற்றால் ஏற்படும் பலன் உங்களுக்குத்தான். உங்களின் செயல்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். நீங்கள் தீய செயல்களைச் செய்தால் அவற்றால் ஏற்படும் விளைவு உங்களைத்தான் பாதிக்கும். உங்களின் நற்செயல்கள் அவனுக்குப் பயனளிப்பதுமில்லை; உங்களின் தீய செயல்கள் அவனைப் பாதிப்பதுமில்லை. இரண்டாவது குழப்பம் நிகழ்ந்தால் உங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பல்வேறு இழிவுகளை அவர்கள் உங்களை அனுபவிக்கச் செய்து அவமானத்தை உங்கள் முகங்களில் வெளிப்படையாகத் தெரியச் செய்யவும் அவர்கள் முதன் முதலில் பைத்துல் முகத்தஸில் நுழைந்தவாறு மீண்டும் நுழைந்து அதனை நாசம் செய்யவும் அவர்களால் தாம் வெற்றிகொண்ட இடங்களையெல்லாம் அடியோடு அழித்துவிடவும் உங்களின் எதிரிகளை உங்கள் மீது சாட்டிவிடுவோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• في قوله: ﴿الْمَسْجِدِ الْأَقْصَا﴾: إشارة لدخوله في حكم الإسلام؛ لأن المسجد موطن عبادةِ المسلمين.
1. (அல்மஸ்ஜிதுல் அக்ஸா) என்ற வார்ததைப் பிரயோகம் அது இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் பள்ளிவாயில்கள் முஸ்லிம்களின் வணங்கும் இடமாகும்.

• بيان فضيلة الشكر، والاقتداء بالشاكرين من الأنبياء والمرسلين.
2. நன்றிசெலுத்தல், நன்றிசெலுத்திய நபிமார்களை, இறைத்தூதர்களைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் சிறப்பு தெளிவாகிறது.

• من حكمة الله وسُنَّته أن يبعث على المفسدين من يمنعهم من الفساد؛ لتتحقق حكمة الله في الإصلاح.
3. அல்லாஹ்வின் இறைநியதி மற்றும் நோக்கத்தில் உள்ளவைதான், சீர்திருத்தத்தில் தனது நோக்கம் நிறைவேறுவதற்காக குழப்பவாதிகளை அவர்களின் குழப்பத்தை விட்டும் தடுக்கக் கூடியவர்களை அனுப்புகிறான்.

• التحذير لهذه الأمة من العمل بالمعاصي؛ لئلا يصيبهم ما أصاب بني إسرائيل، فسُنَّة الله واحدة لا تتبدل ولا تتحول.
4. இஸ்ராயீலின் மக்களுக்கு ஏற்பட்டதைப் போன்று இந்த சமுதாயத்துக்கும் ஏற்படாமலிருக்க பாவங்கள் செய்வதை விட்டும் அவர்களை எச்சரிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வழிமுறை ஒன்றே. அது மாறுவதில்லை.

 
Firo maanaaji Simoore.: Simoore roɓo
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu