Check out the new design

ترجمه‌ى معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - فهرست ترجمه‌ها


ترجمه‌ى معانی سوره: حشر   آیه:
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ— وَمَنْ یُّشَآقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
59.4. அவர்களுக்கு இவ்வாறு நேர்ந்ததற்கான காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து ஒப்பந்தங்களை முறித்து அவர்களுடன் பகைமை பாராட்டியதே. யார் அல்லாஹ்வைப் பகைப்பாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். எனவே அவனது கடுமையான தண்டனை அவனுக்கு ஏற்படும்.
تفسیرهای عربی:
مَا قَطَعْتُمْ مِّنْ لِّیْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَآىِٕمَةً عَلٰۤی اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِیُخْزِیَ الْفٰسِقِیْنَ ۟
59.5. -நம்பிக்கையாளர்களே!- பனூ நளீர் குலத்தாருடன் போரிடும்போது அல்லாஹ்வின் எதிரிகளை கோபமூட்டுவதற்காக நீங்கள் வெட்டிய பேரீச்சை மரங்களும் அல்லது அதனைக்கொண்டு பயனடைவதற்காக அவற்றின் வேர்களில் நிற்கும்படி அவற்றை விட்டுவிட்டதும் அல்லாஹ்வின் கட்டளையினால்தான். அவர்கள் எண்ணுவது போல இது பூமியில் குழப்பம் விளைவித்தல் ஆகாது. இதன் மூலம் அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாமல் ஒப்பந்தங்களை முறித்து அதனை நிறைவேற்றும் வழிகளை விட்டுவிட்டு துரோகமிழைக்கும் வழியை தேர்ந்தெடுத்துக் கொண்ட யூதர்களை இழிவுபடுத்துகிறான்.
تفسیرهای عربی:
وَمَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْهُمْ فَمَاۤ اَوْجَفْتُمْ عَلَیْهِ مِنْ خَیْلٍ وَّلَا رِكَابٍ وَّلٰكِنَّ اللّٰهَ یُسَلِّطُ رُسُلَهٗ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
59.6. பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களிலிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு திருப்பியளித்த செல்வங்களைத் தேடி நீங்கள் குதிரையிலோ, ஒட்டகத்திலோ பயணம் செய்யவில்லை. அதில் உங்களுக்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஆயினும் அல்லாஹ் தன் தூதர்களை தான் நாடியோர்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்கிறான். அவன் தன் தூதரை பனூ நளீர் குலத்தாரின்மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். அவர் அவர்களின் நகரங்களை போரின்றி வெற்றி கொண்டார். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
تفسیرهای عربی:
مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰی فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ— كَیْ لَا یَكُوْنَ دُوْلَةً بَیْنَ الْاَغْنِیَآءِ مِنْكُمْ ؕ— وَمَاۤ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ ۚ— وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟ۘ
59.7. போர் புரியாமல் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்த ஊர்வாசிகளின் செல்வங்கள் யாவும் அல்லாஹ்வுக்காகும். அவன் அவற்றை தான் நாடியவாறு பங்கிடுவான். தூதருக்கும் அவருடைய குடும்பத்தாரான பனூ ஹாஷிம் மற்றும் பனூ முத்தலிப் குடும்பத்தாருக்கும் உரியவையாகும். ஏனெனில் இது அவர்களுக்கு தர்மம் பெறுவது தடைசெய்யப்பட்டதற்கான பகரமாகும். மேலும் அவை அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழித்துணை சாதனங்களை இழந்துவிட்ட வழிப்போக்கர்களுக்கும் உரியவை. இது ஏழைகள் அல்லாமல் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகும். -நம்பிக்கையாளர்களே!- போரின்றி கைப்பற்றப்பட்ட செல்வங்களில் தூதர் உங்களுக்கு அளித்தவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவன் தண்டிப்பதில் கடுமையானவன். ஆகவே அவனது தண்டனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
تفسیرهای عربی:
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِیْنَ الَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاَمْوَالِهِمْ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّیَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟ۚ
59.8. இந்த செல்வங்களில் ஒரு பகுதி தங்களின் செல்வங்களையும் பிள்ளைகளையும் விட்டுவிட வற்புறுத்தப்பட்ட அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்த ஏழைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து சிறப்பிக்க வேண்டும் என்றும் மறுமையில் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைய வேண்டும் என்றும் அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்கிறார்கள். இந்தப் பண்புகளைப் பெற்றவர்கள்தாம் உண்மையில் நம்பிக்கையில் உறுதியானவர்களாவர்.
تفسیرهای عربی:
وَالَّذِیْنَ تَبَوَّءُو الدَّارَ وَالْاِیْمَانَ مِنْ قَبْلِهِمْ یُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَیْهِمْ وَلَا یَجِدُوْنَ فِیْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَیُؤْثِرُوْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۫ؕ— وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟ۚ
59.9. முஹாஜிர்கள் - புலம்பெயர்ந்தவர்கள் வருவதற்கு முன்னரே மதீனாவில் வசித்த அன்சாரிகள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மக்காவிலிருந்து தங்களின்பால் புலம்பெயர்ந்து வந்தவர்களை நேசிக்கிறார்கள். அவர்கள் போரின்றி கிடைத்த செல்வங்களிலிருந்து தங்களுக்கு வழங்கப்படாமல் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டால் தங்களின் உள்ளங்களில் அவர்களைக் குறித்து குரோதமோ, பொறாமையோ கொள்வதில்லை. அவர்கள் உலக விஷயங்களில் தங்களைவிட புலம்பெயர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குகிறார்கள். அவர்கள் ஏழைகளாக, தேவையுடையோராக இருந்தாலும் சரியே. யாருடைய உள்ளங்களையெல்லாம் அல்லாஹ் செல்வத்தின்மீதுள்ள மோகத்திலிருந்து பாதுகாத்து அவர்கள் அவனுடைய பாதையில் செலவு செய்கிறார்களோ அவர்கள்தாம் அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
تفسیرهای عربی:
از فواید آیات در این صفحه:
• فعل ما يُظنُّ أنه مفسدة لتحقيق مصلحة عظمى لا يدخل في باب الفساد في الأرض.
1. பெரும் நலவொன்றை அடைவதற்கு தீயகாரியமெனக் கருதப்படும் ஒரு விடயத்தைச் செய்வது பூமியில் குழப்பம் விளைவிக்கும் விடயங்களில் சேரமாட்டாது.

• من محاسن الإسلام مراعاة ذي الحاجة للمال، فَصَرَفَ الفيء لهم دون الأغنياء المكتفين بما عندهم.
2. பணத் தேவையுள்ளோரைக் கவனத்தில் கொள்வது இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அதனால்தான் போரின்றி கிடைத்த செல்வங்களை போதுமானளவு சொத்தைப் பெற்றுள்ள பணக்காரர்களுக்கு வழங்காமல் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

• الإيثار منقبة عظيمة من مناقب الإسلام ظهرت في الأنصار أحسن ظهور.
3. பிறரை முற்படுத்தும் பண்பு இஸ்லாம் சிறப்பித்த பெரும் சிறப்புக்குரிய ஒரு காரியமாகும். அன்சாரிகளிடம் அது மிகத்தெளிவாக அது வெளிப்பட்டது.

 
ترجمه‌ى معانی سوره: حشر
فهرست سوره‌ها شماره‌ى صفحه
 
ترجمه‌ى معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - فهرست ترجمه‌ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن