Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: حدید   آیه:
یَوْمَ تَرَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ یَسْعٰی نُوْرُهُمْ بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ بُشْرٰىكُمُ الْیَوْمَ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ۚ
57.12. நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் நிலையில் நீர் காணும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இன்றைய தினம் உங்களுக்கு சுவனங்களைக் கொண்டு நற்செய்தி உண்டாகட்டும். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அந்தக் கூலியே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.
تفسیرهای عربی:
یَوْمَ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِیْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْ ۚ— قِیْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًا ؕ— فَضُرِبَ بَیْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌ ؕ— بَاطِنُهٗ فِیْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُ ۟ؕ
57.13. நயவஞ்சகம் கொண்ட ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளர்களைப் பார்த்து “நம்பிக்கையாளர்களே! உங்களின் ஒளியிலிருந்து பாலத்தைக் கடப்பதற்கு உதவி பெறும் பொருட்டு எங்களுக்காகக் காத்திருங்கள்” என்று கூறும் நாளில் அவர்களிடம் பரிகாசமாகக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் பிரகாசிக்கக்கூடிய ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” அவர்களிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒரு கதவு இருக்கும். நம்பிக்கையாளர்களின் பக்கத்தில் இருக்கும் அதன் உட்புறத்தில் அருள் இருக்கும். நயவஞ்சகர்களின் பக்கத்தில் இருக்கும் அதன் வெளிப்புறத்தில் வேதனை இருக்கும்.
تفسیرهای عربی:
یُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ؕ— قَالُوْا بَلٰی وَلٰكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِیُّ حَتّٰی جَآءَ اَمْرُ اللّٰهِ وَغَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟
57.14. நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களை பின்வருமாறு கூறியவர்களாக அழைப்பார்கள்: “நாங்கள் இஸ்லாத்தை ஏற்று, வழிப்பட்டு உங்களுடன் இருக்கவில்லையா?” அதற்கு நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக. நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். ஆயினும் நயவஞ்சகத்தால் உங்களுக்கு நீங்களே அழிவை ஏற்படுத்தி சோதனைக்குள்ளாகிவிட்டீர்கள். நம்பிக்கையாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு உங்களின் நிராகரிப்பை வெளிப்படுத்தலாம் என்று நீங்கள் காத்திருந்தீர்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வான் என்பதிலும் நீங்கள் மரணித்தபிறகு உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதிலும் சந்தேகம் கொண்டீர்கள். பொய்யான உங்களின் எதிர்பார்ப்புகள் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டன. அந்த நிலையிலேயே நீங்கள் மரணித்தும் விட்டீர்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் ஷைத்தான் உங்களை ஏமாற்றி விட்டான்.”
تفسیرهای عربی:
فَالْیَوْمَ لَا یُؤْخَذُ مِنْكُمْ فِدْیَةٌ وَّلَا مِنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— مَاْوٰىكُمُ النَّارُ ؕ— هِیَ مَوْلٰىكُمْ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
57.15 -நயவஞ்சகர்களே!- இன்றைய தினம் உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கு உங்களிடம் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. அல்லாஹ்வை வெளிப்படையாக நிராகரித்தவர்களிடமும் எந்த ஈட்டுத் தொகையும் பெறப்படாது. உங்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகமே சேருமிடமாகும். அது உங்களுக்குத் தகுதியானது. நீங்களும் அதற்குத் தகுதியானவர்கள். அது மிகவும் மோசமான சேருமிடமாகும்.
تفسیرهای عربی:
اَلَمْ یَاْنِ لِلَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ ۙ— وَلَا یَكُوْنُوْا كَالَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَیْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ ؕ— وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
57.16. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும் அவன் குர்ஆனில் இறக்கிய வாக்குறுதி மற்றும் எச்சரிக்கையினாலும் உருகுவதற்கும் நிம்மதியடைவதற்குமான நேரம் வரவில்லையா? தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களைப்போன்றும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களைப்போன்றும் அவர்கள் இறுகிய உள்ளங்களைப் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் தூதர்கள் அனுப்பப்படுவதற்குமான இடைவெளி நீண்டுவிட்ட காரணத்தால் அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்களில் அதிகமானோர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் பாவங்கள் புரிபவர்களாகவே இருக்கின்றார்கள்.
تفسیرهای عربی:
اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ— قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
57.17. அறிந்துகொள்ளுங்கள், நிச்சயாமாக அல்லாஹ்தான் வறண்ட பூமியை தாவரங்களால் உயிர்ப்பிக்கச் செய்கிறான். -மனிதர்களே!- நீங்கள் விளங்கிக்கொள்ளும்பொருட்டும் வறண்ட பூமியை உயிர்ப்பித்தவன் நீங்கள் மரணித்ததன் பின்பு மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் உள்ளம் கடினமானதன் பின்பு அதனை மென்மையாக்கவும் ஆற்றலுடையவன் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டும் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய சான்றுகளையும் ஆதாரங்களையும் நாம் உங்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம்.
تفسیرهای عربی:
اِنَّ الْمُصَّدِّقِیْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِیْمٌ ۟
57.18. நிச்சயமாக தங்களின் செல்வங்களில் சிலவற்றை சொல்லிக்காட்டாமலும் தொல்லையில்லாமலும் மனத்திருப்தியுடன் தர்மம் செய்யக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் செயல்களுக்கு பல மடங்கு கூலி உண்டு. ஒரு நன்மைக்கு அதைப்போன்று பத்து முதல் எழுநூறு என்று பல மடங்குவரை நன்மை வழங்கப்படும். அத்துடன் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியும் உண்டு.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• امتنان الله على المؤمنين بإعطائهم نورًا يسعى أمامهم وعن أيمانهم.
1. நம்பிக்கையாளர்களுக்கு முன்னாலும் வலப்புறமும் இலங்கிக்கொண்டிருக்கும் ஒளியை வழங்கி அவர்கள் மீது அல்லாஹ் அருள் பொழிந்துள்ளான்.

• المعاصي والنفاق سبب للظلمة والهلاك يوم القيامة.
2. பாவங்களும் நயவஞ்சகமும் மறுமை நாளின் இருளுக்கும் அழிவுக்கும் காரணமாகும்.

• التربُّص بالمؤمنين والشك في البعث، والانخداع بالأماني، والاغترار بالشيطان: من صفات المنافقين.
3. நம்பிக்கையாளர்களுக்கு (தீங்கு வரும் என்று) எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதைக்குறித்து சந்தேகம்கொள்வது, (பொய்யான) எதிர்பார்ப்புகளைக் கொண்டு ஏமாறுவது, ஷைத்தானால் ஏமாற்றமடைவது ஆகியவை நயவஞ்சகர்களின் பண்புகளாகும்.

• خطر الغفلة المؤدية لقسوة القلوب.
4. இருகிய உள்ளத்தின்பால் கொண்டுசெல்லும் அலட்சியத்தின் விபரீதம்.

 
ترجمهٔ معانی سوره: حدید
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن