Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: جاثیه   آیه:
اَفَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰی عِلْمٍ وَّخَتَمَ عَلٰی سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰی بَصَرِهٖ غِشٰوَةً ؕ— فَمَنْ یَّهْدِیْهِ مِنْ بَعْدِ اللّٰهِ ؕ— اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
45.23. -தூதரே!- தன் மனஇச்சையைப் பின்பற்றி அதற்கு மாற்றமே செய்யாது வணங்கப்படும் இறைவனைப் போன்று ஆக்கிக் கொண்டவனை நீர் பார்ப்பீராக. அல்லாஹ் தன்னுடைய அறிவின் பிரகாரம் வழிகெடுத்துவிட்டான். ஏனெனில் அவன் வழிகெடுக்கப்படுவதற்குத் தகுதியானவன். அல்லாஹ் அவனுடைய உள்ளத்தில் முத்திரையிட்டுவிட்டான். எனவே அதனால் பயனடையும் வண்ணம் செவியேற்க முடியாது. அல்லாஹ் அவனுடைய பார்வையில் சத்தியத்தைப் பார்ப்பதை விட்டும் தடுக்கும் ஒரு திரையை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ அவனை யார்தான் சத்தியத்தின்பால் நேர்வழிபெறச் செய்யமுடியும்? மன இச்சையைப் பின்பற்றுவதன் பாதிப்பையும், அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுவதன் பயனையும் நீங்கள் நினைவுகூற மாட்டீர்களா?
تفسیرهای عربی:
وَقَالُوْا مَا هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا یُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ ۚ— وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ— اِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
45.24. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நம்முடைய இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. அதற்குப் பிறகு எந்த வாழ்க்கையும் இல்லை. ஒரு தலைமுறை மனிதர்கள் மரணிக்கிறார்கள். அவர்கள் திரும்பி வருவதில்லை. இன்னும் சில தலைமுறைகள் வாழ்கிறார்கள். இரவு, பகல் மாறிமாறி வருவதே நம்மை மரணிக்கச் செய்கின்றது.” மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிப்பதற்கு அவர்களிடம் எந்த அறிவும் இல்லை. அவர்கள் யூகம்தான் கொள்கிறார்கள். யூகம் எந்த உறுதியையும் அளிப்பதில்லை.
تفسیرهای عربی:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
45.25. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இணைவைப்பாளர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் தூதரிடமும் அவருடைய தோழர்களிடமும் “மரணித்ததன் பின்னால் மீண்டும் உயிகொடுத்து எழுப்பப்படுவோம்” என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களை உயிரோடு கொண்டுவாருங்கள்” என்று கூறுவதைத் தவிர அவர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இருப்பதில்லை.
تفسیرهای عربی:
قُلِ اللّٰهُ یُحْیِیْكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یَجْمَعُكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
45.26. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் உங்களைப் படைத்து உயிர்ப்பிக்கின்றான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்கின்றான். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு மறுமை நாளில் விசாரணைக்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். நிச்சயமாக அந்த நாள் வருவதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் இதனை அறியமாட்டார்கள். எனவேதான் நற்செயல்களைக் கொண்டு அந்த நாளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை.
تفسیرهای عربی:
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یَوْمَىِٕذٍ یَّخْسَرُ الْمُبْطِلُوْنَ ۟
45.27. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவையிரண்டிலும் அவனைத் தவிர வேறு எதுவும் வணங்கப்படுவதற்குத் தகுதியானவையல்ல. அல்லாஹ் மரணித்தவர்களை விசாரணைக்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் மறுமை நாளில் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கிக்கொண்டிருந்த, சத்தியத்தை அசத்தியமாக்கவும் அசத்தியத்தை சத்தியமாக்கவும் முயற்சி செய்துகொண்டிருந்த அசத்தியவாதிகள் நஷ்டமடைந்து விடுவார்கள்.
تفسیرهای عربی:
وَتَرٰی كُلَّ اُمَّةٍ جَاثِیَةً ۫ؕ— كُلُّ اُمَّةٍ تُدْعٰۤی اِلٰی كِتٰبِهَا ؕ— اَلْیَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
45.28. -தூதரே!- அந்த நாளில் ஒவ்வொரு சமூகமும் தமக்கு நிகழப்போவதை எதிர்பார்த்துக் கொண்டு முழந்தாளிட்டுக் கிடக்கும். ஒவ்வொரு சமூகமும் வானவர்கள் பதிவுசெய்து பாதுகாத்த செயல்பதிவேடுகளை நோக்கி அழைக்கப்படும். -மனிதர்களே!- இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நன்மை மற்றும் தீமைகளுக்கு கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
تفسیرهای عربی:
هٰذَا كِتٰبُنَا یَنْطِقُ عَلَیْكُمْ بِالْحَقِّ ؕ— اِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
45.29. இது எமது வானவர்கள் உங்களின் செயல்களைப் பதிவுசெய்த ஏடாகும். உங்களுக்கு எதிராக உண்மையான சாட்சி கூறும். அவற்றை வாசியுங்கள். நிச்சயமாக நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களை பதிவுசெய்யுமாறு நாம் கண்காணிக்கும் வானவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தோம்.
تفسیرهای عربی:
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُدْخِلُهُمْ رَبُّهُمْ فِیْ رَحْمَتِهٖ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟
45.30. நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களை அவர்களின் இறைவன் தன் அருளால் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய இந்த கூலியே தெளிவான வெற்றியாகும். அதற்கு இணையான வேறு வெற்றி இல்லை.
تفسیرهای عربی:
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا ۫— اَفَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
45.31. அல்லாஹ்வை நிராகரித்தவர்களிடம் அவர்களைப் கண்டிக்கும் விதமாகக் கூறப்படும்: “என் வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்பட்ட வேளை, அவற்றின் மீது கர்வம் கொண்டு, நீங்கள் நிராகரித்து பாவங்கள் புரியும் குற்மிழைக்கும் சமூகமாக இருந்தீர்களல்லவா?!”
تفسیرهای عربی:
وَاِذَا قِیْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَیْبَ فِیْهَا قُلْتُمْ مَّا نَدْرِیْ مَا السَّاعَةُ ۙ— اِنْ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَیْقِنِیْنَ ۟
45.32. “நிச்சயமாக அல்லாஹ் -தன் அடியார்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்களுக்குக் கூலி வழங்குவான் என்று- அவன் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். மறுமை நாள் உண்டு என்பது சந்தேகம் இல்லாத உண்மையாகும். எனவே அதற்காக செயல்படுங்கள்” என்று உங்களிடம் கூறப்பட்டால் “மறுமை நாள் என்னவென்பதை நாங்கள் அறிய மாட்டோம். அது ஒருவேளை நிகழலாம் என்ற பலவீனமான எண்ணத்தையே நாங்கள் கொண்டுள்ளோம். அது நிகழும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவோராக இல்லை” என்று கூறுகிறீர்கள்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• اتباع الهوى يهلك صاحبه، ويحجب عنه أسباب التوفيق.
1. மனஇச்சையைப் பின்பற்றுவனை அது அழித்துவிடும். திருந்தும் வாய்ப்புக்கான காரணிகளை அவனை விட்டும் தடுத்துவிடும்.

• هول يوم القيامة.
2. மறுமை நாளின் பயங்கரம்.

• الظن لا يغني من الحق شيئًا، خاصةً في مجال الاعتقاد.
3. யூகம் எந்த உறுதியையும் தராது. அதுவும் குறிப்பாக கொள்கை விஷயங்களில்.

 
ترجمهٔ معانی سوره: جاثیه
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن