Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: زُخرُف   آیه:
وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ ۙ— اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ ۟
43.23. -தூதரே!- இவர்கள் பொய்ப்பித்து தங்கள் முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதை ஆதாரமாகக் கொண்டது போன்றே நாம் எந்த ஊருக்கும் அவர்களை அச்சமூட்டுவதற்காக அனுப்பிய தூதர்கள் தங்களின் சமூகங்களிடம் வந்தபோது அவர்களில் வசதிபடைத்தவர்களான அவர்களின் தலைவர்கள், பெரியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களின் முன்னோர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம். திட்டமாக அவர்களின் அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்.” எனவே இவ்வாறு கூறுவதில் உம் சமூகத்தினர் முதலாமவர்கள் அல்ல.
تفسیرهای عربی:
قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰی مِمَّا وَجَدْتُّمْ عَلَیْهِ اٰبَآءَكُمْ ؕ— قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
43.24. அவர்களின் தூதர் அவர்களிடம் கேட்டார்: “நான் நீங்கள் இருந்துகொண்டிருக்கும் உங்கள் முன்னோர்களின் மார்க்கத்தைவிட சிறந்த ஒன்றைக் கொண்டு வந்தாலும் நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்களா?” அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் கொண்டுவந்துள்ள தூதையும் உமக்கு முன்னர் வந்த தூதர்கள் கொண்டுவந்ததையும் நாங்கள் நிராகரிப்பவர்களாகவே இருப்போம்.”
تفسیرهای عربی:
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟۠
43.25. எனவே உமக்கு முன்னர் தூதர்களை பொய்ப்பித்த அந்த சமூகங்களை நாம் தண்டித்து அவர்களை அழித்துவிட்டோம். தங்களின் தூதர்களை பொய்ப்பித்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அவர்களின் முடிவு வேதனைமிக்கதாகவே இருந்தது.
تفسیرهای عربی:
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِیْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ۟ۙ
43.26. -தூதரே!- இப்ராஹீம் தம் தந்தையிடமும் சமூகத்திடமும் கூறியதை நினைவு கூர்வீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் சிலைகளைவிட்டு விலகிவிட்டேன்.”
تفسیرهای عربی:
اِلَّا الَّذِیْ فَطَرَنِیْ فَاِنَّهٗ سَیَهْدِیْنِ ۟
43.27. ஆனால் என்னைப் படைத்த அல்லாஹ்வைத் தவிர. நிச்சயமாக அவன் எனக்குப் பயனளிக்கக்கூடிய அவனது உறுதியான மார்க்கத்தின்பால் பின்பற்ற வழிகாட்டுவான்.”
تفسیرهای عربی:
وَجَعَلَهَا كَلِمَةً بَاقِیَةً فِیْ عَقِبِهٖ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
43.28. இப்ராஹீம் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவ வாரத்தையை தமக்குப் பிறகு நிலையாக ஆக்கி தம் சந்ததிகளிடம் விட்டுச் சென்றார். எனவே அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவகை்காது அவனை ஒருமைப்படுத்துவோர் அவர்களில் இருந்துகொண்டே இருப்பார்கள். அது, அவர்கள் இணைவைப்பு மற்றும் பாவங்களைவிட்டு அல்லாஹ்வின்பால் பாவமன்னிப்பின்பால் திரும்ப வேண்டும் என்பதன் பொருட்டாகும்.
تفسیرهای عربی:
بَلْ مَتَّعْتُ هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی جَآءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِیْنٌ ۟
43.29. நான் இந்த பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்களை உடனடியாக அழித்துவிடவில்லை. மாறாக குர்ஆனும் தெளிவுபடுத்தக்கூடிய தூதர் முஹம்மதும் அவர்களிடம் வரும்வரை உலகில் அவர்களையும் அதற்கு முன் அவர்களின் முன்னோர்களையும் வாழ விட்டேன்.
تفسیرهای عربی:
وَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ ۟
43.30. சந்தேகமற்ற சத்தியமான இந்த குர்ஆன் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது சூனியமாகும். இதைக் கொண்டு முஹம்மது நம்மை சூனியத்திற்குள்ளாக்குகிறார். நிச்சயமாக நாங்கள் அதனை நிராகரிக்கின்றோம். அதன்மீது ஒருபோதும் நம்பிக்கைகொள்ளமாட்டோம்.”
تفسیرهای عربی:
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الْقَرْیَتَیْنِ عَظِیْمٍ ۟
43.31. “இந்த குர்ஆன் அநாதையும் ஏழையுமாகிய முஹம்மது மீது இறக்கப்படுவதற்குப் பதிலாக மக்காவில் அல்லது தாயிஃபில் இருக்கின்ற இரு மகத்தான (மனிதர்களான வலீத் இப்னு உக்பா, உர்வா இப்னு மஸ்வூத் அத்தகபீ ஆகிய இருவரில்) ஒருவருக்கு இறக்கப்பட்டிருக்க வேண்டாமா” என்று பொய்ப்பிக்கும் இணைவைப்பாளர்கள் கேட்கிறார்கள்.
تفسیرهای عربی:
اَهُمْ یَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ ؕ— نَحْنُ قَسَمْنَا بَیْنَهُمْ مَّعِیْشَتَهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِیًّا ؕ— وَرَحْمَتُ رَبِّكَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
43.32. -தூதரே!- தாங்கள் விரும்பியவர்களுக்கு அளித்து விரும்பியவர்களுக்கு தடுத்துக் கொள்வதற்கு, உம் இறைவனின் அருளை அவர்களா பங்கீடு செய்கிறார்கள்? அல்லது அல்லாஹ்வா? உலகில் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை நாமே அவர்களிடையே பங்கிட்டுள்ளோம். அவர்களில் சிலர் சிலருக்கு ஊழியம் செய்வதற்காக அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும் ஆக்கியுள்ளோம். உம் இறைவன் மறுமையில் தன் அடியார்களுக்கு வழங்கும் அருளானது அவர்கள் சேர்த்துவைக்கும் அழியக்கூடிய இவ்வுலகின் இன்பங்களைவிடச் சிறந்ததாகும்.
تفسیرهای عربی:
وَلَوْلَاۤ اَنْ یَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَعَلْنَا لِمَنْ یَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُیُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَیْهَا یَظْهَرُوْنَ ۟ۙ
43.33. மனிதர்கள் அனைவரும் நிராகரித்து ஒரு சமூகமாகி விடுவார்கள் என்று மட்டும் இல்லாதிருக்குமானால் நாம் அல்லாஹ்வை நிராகரிப்பவர்களின் வீட்டின் முகடுகளை வெள்ளியால் ஆக்கி அவர்களுக்காக அவற்றில் ஏறிச் செல்லும் படிகளையும் ஆக்கியிருப்போம்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• التقليد من أسباب ضلال الأمم السابقة.
1. குருட்டுத்தனமான பின்பற்றுதலே முன்சென்ற சமூகங்களின் வழிகேட்டிற்கான காரணிகளில் ஒன்றாகும்.

• البراءة من الكفر والكافرين لازمة.
2. நிராகரிப்பு மற்றும் நிராகரிப்பாளர்களிடமிருந்து விலகிவிடுவது கட்டாயமாகும்.

• تقسيم الأرزاق خاضع لحكمة الله.
3.வாழ்வாதாரப் பங்கீடு அல்லாஹ்வின் ஞானத்துக்கு உட்பட்டதாகும்.

• حقارة الدنيا عند الله، فلو كانت تزن عنده جناح بعوضة ما سقى منها كافرًا شربة ماء.
4.அல்லாஹ்விடத்தில் உலகின் அற்பத்தன்மை. அவனிடத்தில் அது கொசுவின் இறக்கை அளவு பெறுமதியுடைதாக இருந்தாலும், அதிலிருந்து நிராகரிப்பாளனுக்கு ஒரு மிடர் நீரையும் புகட்டியிருக்கமாட்டான்.

 
ترجمهٔ معانی سوره: زُخرُف
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن