Check out the new design

ترجمه‌ى معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - فهرست ترجمه‌ها


ترجمه‌ى معانی سوره: احزاب   آیه:
قُلْ لَّنْ یَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
33.16. -தூதரே!- நீர் இவர்களிடம் கூறுவீராக: “மரணத்திற்கு அஞ்சியோ, கொல்லப்படுவோம் என்றோ நீங்கள் போரிலிருந்து பின்வாங்கி ஓடுவது உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. ஏனெனில் தவணைகள் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. உங்கள் நேரம் வராததனால் நீங்கள் பின்வாங்கி ஓடிவிட்டால் அதற்குப்பிறகு குறைவான காலமே அன்றி நிச்சயமாக உங்களால் வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது.”
تفسیرهای عربی:
قُلْ مَنْ ذَا الَّذِیْ یَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ؕ— وَلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
33.17. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் வெறுக்கும் மரணத்தை, கொலையை அல்லாஹ் அளிக்க நாடினால் யார்தான் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்ற முடியும்? அல்லது நீங்கள் விரும்பும் பாதுகாப்பையும் நலனையும் அவன் உங்களுக்கு அளிக்க நாடினால் யாராலும் அதனை விட்டும் உங்களைத் தடுக்க முடியாது.” இந்த நயவஞ்சகர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர தங்களது விடயங்களை பொறுப்பெடுக்கும் பொறுப்பாளனையோ அவனுடைய வேதனையிலிருந்து காப்பாற்றும் உதவியாளனையோ பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
تفسیرهای عربی:
قَدْ یَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِیْنَ مِنْكُمْ وَالْقَآىِٕلِیْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَیْنَا ۚ— وَلَا یَاْتُوْنَ الْبَاْسَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
33.18. அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போர் புரிவதை விட்டும் மற்றவர்களைத் தடுப்பவர்களையும் தங்களின் சகோதரர்களிடம், “எங்களின்பால் வந்து விடுங்கள். அவருடன் சேர்ந்து போர்புரிந்து கொல்லப்பட்டு விடாதீர்கள். நீங்கள் கொல்லப்பட்டு விடுவீர்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் அறிவான். பின்வாங்கச் செய்யும் இவர்கள் மிக அரிதாகவே போரில் பங்கு கொள்கிறார்கள். அதுவும் தங்களுக்கு ஏற்படும் இழிவை தடுப்பதற்காக. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்வதற்காக அல்ல.
تفسیرهای عربی:
اَشِحَّةً عَلَیْكُمْ ۖۚ— فَاِذَا جَآءَ الْخَوْفُ رَاَیْتَهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ تَدُوْرُ اَعْیُنُهُمْ كَالَّذِیْ یُغْشٰی عَلَیْهِ مِنَ الْمَوْتِ ۚ— فَاِذَا ذَهَبَ الْخَوْفُ سَلَقُوْكُمْ بِاَلْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَی الْخَیْرِ ؕ— اُولٰٓىِٕكَ لَمْ یُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْ ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
33.19. -நம்பிக்கையாளர்கள் கூட்டமே!- அவர்கள் உங்களின் விஷயத்தில் கஞ்சர்களாக இருக்கிறார்கள். தங்களின் செல்வங்களால் உங்களுக்கு உதவுவதில்லை. தமது உயிர்களில் ஆசை உள்ளவர்கள். எனவே உங்களுடன் சேர்ந்து போரிடுவதில்லை. நேசத்திலும் அவர்கள் கஞ்சர்கள். அதனால்தான் உங்களை அவர்கள் நேசிப்பதுமில்லை. -தூதரே!- எதிரிகளை சந்திக்கும் போது பயம் ஏற்பட்டால் மரண வேதனையில் சிக்குண்டு கிடப்பவன் பார்ப்பதைப்போல கோழைத்தனத்தினால் அவர்களின் விழிகள் பிதுங்குவதை நீர் காணலாம். அச்சம் நீங்கி அமைதி ஏற்பட்டுவிட்டால் போர்ச் செல்வங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கூரான வார்த்தைகளை நாவினால் கூறி உங்களுக்குத் தொல்லை தருகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் உண்மையில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்கிவிட்டான். இவ்வாறு வீணாக்குவது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது.
تفسیرهای عربی:
یَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ یَذْهَبُوْا ۚ— وَاِنْ یَّاْتِ الْاَحْزَابُ یَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِی الْاَعْرَابِ یَسْاَلُوْنَ عَنْ اَنْۢبَآىِٕكُمْ ؕ— وَلَوْ كَانُوْا فِیْكُمْ مَّا قٰتَلُوْۤا اِلَّا قَلِیْلًا ۟۠
33.20. நபியவர்களுடனும் நம்பிக்கையாளர்களுடனும் போரிடத் திரண்டிருக்கும் படைகள் நிச்சயமாக நம்பிக்கையாளர்களை அடியோடு அழிக்காமல் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் என்று இந்தக் கோழைகள் எண்ணிக் கொண்டுள்ளனர். ஒருவேளை மீண்டும் படைகள் வந்துவிட்டால் மதீனாவில் இருந்து வெளியேறி நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உங்கள் எதிரிகள் உங்களுடன் போர்செய்த பின் என்ன நடந்தது என உங்கள் செய்திகளை அறிய விரும்புவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் உங்களுடன் இருந்தாலும் பெரிதாகப் போரிடப் போவதில்லை. எனவே அவர்களைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள்.
تفسیرهای عربی:
لَقَدْ كَانَ لَكُمْ فِیْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِیْرًا ۟ؕ
33.21. அல்லாஹ்வின் தூதர் சொன்ன, செய்த அனைத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர் போரில் நேரிடையாக பங்கு பெற்றுள்ளார். அதன் பின்னரும் நீங்கள் அவரது உயிரைவிட உங்களின் உயிர்களை பெரிதாக எண்ணுகிறீர்களா? அல்லாஹ் வழங்கும் கூலியிலும் அவனது அருளிலும் மறுமையின் மீதும் ஆதரவு வைத்து அதற்காக செயல்பட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறக்கூடியவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்கிறார்கள். மறுமையை நம்பாமல், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூறாமல் இருப்பவர்கள் அல்லாஹ்வின் தூதரை முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
تفسیرهای عربی:
وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ— قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَصَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ ؗ— وَمَا زَادَهُمْ اِلَّاۤ اِیْمَانًا وَّتَسْلِیْمًا ۟ؕ
33.22. நம்பிக்கையாளர்கள் ஒன்றுதிரண்டு வந்த படைகளைக் கண்டபோது கூறினார்கள்: “இந்த சோதனைகளும் உதவியும்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தவை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள். அதுவே நிகழ்ந்துள்ளது. படைகளைக் கண்ணால் கண்ட அவர்களின் அல்லாஹ் மீதான நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் இன்னும் அதிகமாகியது.
تفسیرهای عربی:
از فواید آیات در این صفحه:
• الآجال محددة؛ لا يُقَرِّبُها قتال، ولا يُبْعِدُها هروب منه.
1. தவணைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. போர் அவற்றை விரைவாகக் கொண்டுவந்துவிடாது. தப்பி ஓடுதல் அவற்றைத் தூரப்படுத்திவிடாது.

• التثبيط عن الجهاد في سبيل الله شأن المنافقين دائمًا.
2. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய விடாமல் தடுப்பது நயவஞ்சகர்களின் வழக்கமாகும்.

• الرسول صلى الله عليه وسلم قدوة المؤمنين في أقواله وأفعاله.
3. நபியவர்கள் தனது சொல்லிலும் செயலிலும் நம்பிக்கையாளர்களின் முன்மாதிரி.

• الثقة بالله والانقياد له من صفات المؤمنين.
4. அல்லாஹ்வின் மீது உறுதிபூண்டு அவனுக்குக் கட்டுப்படல் நம்பிக்கையாளர்களின் பண்புகளாகும்.

 
ترجمه‌ى معانی سوره: احزاب
فهرست سوره‌ها شماره‌ى صفحه
 
ترجمه‌ى معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - فهرست ترجمه‌ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن