Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: روم   آیه:
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآئِ الْاٰخِرَةِ فَاُولٰٓىِٕكَ فِی الْعَذَابِ مُحْضَرُوْنَ ۟
30.16. அல்லாஹ்வையும் நம் தூதர் மீது இறக்கிய நம் வசனங்களையும் மறுமை நாளில் எழுப்படுவதையும் விசாரணையையும் நிராகரித்தவர்கள் வேதனைக்காக கொண்டுவரப்படுவார்கள். அதனோடு அவர்கள் சேர்ந்திருப்பார்கள்.
تفسیرهای عربی:
فَسُبْحٰنَ اللّٰهِ حِیْنَ تُمْسُوْنَ وَحِیْنَ تُصْبِحُوْنَ ۟
30.17. மாலை நேரத்தை அடையும்போதும் மஃரிப் மற்றும் இஷா தொழுகை நேரங்கள், காலை நேரத்தை அடையும்போதும் ஃபஜ்ர் தொழுகை நேரம் ஆகியவற்றில் அல்லாஹ்வை துதிபாடுங்கள்.
تفسیرهای عربی:
وَلَهُ الْحَمْدُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِیًّا وَّحِیْنَ تُظْهِرُوْنَ ۟
30.18. புகழனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியது. வானங்களில் வானவர்களும் பூமியில் படைப்புகளும் அவனைப் புகழ்கிறார்கள். மாலை வேளை நுழையும்போதான அஸர் தொழுகையின் போதும் லுஹர் வேளை நுழையும் போதும் அவனை துதிபாடுங்கள்.
تفسیرهای عربی:
یُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَیُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ— وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟۠
30.19. அவன் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான்; உதாரணமாக, விந்திலிருந்து மனிதனை, முட்டையிலிருந்து குஞ்சை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான்; உதாரணமாக மனிதனிலிருந்து விந்தையும் கோழியிலிருந்து முட்டையையும் வெளிப்படுத்துகிறான். பூமி வறண்ட பின்னரும் அதில் மழை பொழிந்து விளையச் செய்து அதனை உயிர்ப்பிக்கிறான். பூமியை விளையச் செய்து உயிர்ப்பிக்கப்படுவதைப் போலவே நீங்கள் விசாரணைக்காகவும் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்.
تفسیرهای عربی:
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ ۟
30.20. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: -மனிதர்களே!- அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் உங்களையும் அதிலிருந்தே உருவாக்கியமை. பின்னர் நீங்கள் இனப்பெருக்கத்தின் மூலம் பல மனிதர்களாகப் பெருகி விட்டீர்கள். பூமியின் கிழக்கு, மேற்கு என பல திசைகளிலும் பரவி விட்டீர்கள்.
تفسیرهای عربی:
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَیْهَا وَجَعَلَ بَیْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
30.21. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: -ஆண்களே!- அவன் உங்களுக்காக உங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்காக அவர்களிடம் உங்களின் மனம் அமைதிபெற வேண்டி உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்குத் துணைகளை படைத்துள்ளான். உங்களுக்கிடையேயும் அவர்களிடையேயும் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்டவற்றில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் தங்களின் சிந்தனையைச் செயற்படுத்துவதனால் பயனடைபவர்கள்.
تفسیرهای عربی:
وَمِنْ اٰیٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْعٰلِمِیْنَ ۟
30.22. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: வானங்களையும் பூமியையும் படைத்ததும், உங்களின் மொழி மற்றும் நிறங்களின் வேற்றுமைகளும். நிச்சயமாக (மேலே) கூறப்பட்டவற்றில் அறிவுடையோருக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன.
تفسیرهای عربی:
وَمِنْ اٰیٰتِهٖ مَنَامُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ وَابْتِغَآؤُكُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
30.23. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: உங்களின் வேலையின் களைப்பைப் போக்குவதற்காக இரவிலும் பகலிலும் உங்களின் உறக்கம். நீங்கள் உங்கள் இறைவனின்பால் வாழ்வாதாரத்தை தேடிச் செல்வதற்காக பகலை ஏற்படுத்தியுள்ளமையும் அவனுடைய அத்தாட்சியே. நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்கும் மக்களுக்கு சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன.
تفسیرهای عربی:
وَمِنْ اٰیٰتِهٖ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَیُحْیٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
30.24. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: அவன் உங்களுக்கு வானத்தில் மின்னலை காண்பிக்கிறான், அதில் இடியின் அச்சத்தையும் மழையின் எதிர்பார்ப்பையும் இணைத்துவைத்துள்ளான். வானத்திலிருந்து மழையை இறக்கி வறண்ட பூமியை அதில் தாவரங்களை முளைக்கச் செய்து உயிர்ப்பிக்கிறான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் விளங்கிக் கொள்ளும் மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் விசாரணைக்காகவும் கூலி பெறுவதற்காகவும் மரணித்ததன் பின் எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகக்கொள்வார்கள்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• إعمار العبد أوقاته بالصلاة والتسبيح علامة على حسن العاقبة.
1. அடியான் தன் நேரங்களை அல்லாஹ்வைத் தொழுவதற்கும் அவனைப் புகழ்வதற்கும் செலவிடுவது அவனுடைய நல்ல முடிவிற்கான அடையாளமாகும்.

• الاستدلال على البعث بتجدد الحياة، حيث يخلق الله الحي من الميت والميت من الحي.
2. அல்லாஹ் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் இவைகள் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகும்.

• آيات الله في الأنفس والآفاق لا يستفيد منها إلا من يُعمِل وسائل إدراكه الحسية والمعنوية التي أنعم الله بها عليه.
3. உயிர்களிலும் பிரபஞ்சத்திலும் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை தங்களுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட புலனுணர்வுகளையும் உள்ரங்கமான சாதனங்களையும் செயற்படுத்துபவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

 
ترجمهٔ معانی سوره: روم
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن