Check out the new design

ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی سوره: نمل   آیه:
اَمَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَمَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ— ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
27.64. கருவறைகளில் கட்டம் கட்டமாக படைக்க ஆரம்பித்து பின்னர் அதனை மரணிக்கச்செய்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புபவன் யார்? தன் புறத்திலிருந்து இறக்கப்படும் மழை மூலம் வானிலிருந்தும் தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் பூமியிலிருந்தும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நிச்சயமாக நாங்கள்தாம் சத்தியத்தில் இருக்கின்றோம் என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் இணைவைப்புக்கு ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”
تفسیرهای عربی:
قُلْ لَّا یَعْلَمُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَیْبَ اِلَّا اللّٰهُ ؕ— وَمَا یَشْعُرُوْنَ اَیَّانَ یُبْعَثُوْنَ ۟
27.65. -தூதரே!- நீர் கூறுவீராக: “வானங்களில் இருக்கும் வானவர்களோ பூமியில் இருக்கும் மனிதர்களோ மறைவானவற்றை அறிய மாட்டார்கள். அல்லாஹ் ஒருவனே அதனை அறிவான். அவர்கள் கூலி கொடுக்கப்படுவதற்காக எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதை அல்லாஹ்வைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் அறியமாட்டார்கள்.
تفسیرهای عربی:
بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِی الْاٰخِرَةِ ۫— بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْهَا ۫— بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ۟۠
27.66. மறுமை பற்றி அவர்கள் தொடராக தெரிந்து அதனை உறுதியாக அவர்கள் நம்பிவிட்டார்களா? இல்லை, அவர்கள் மறுமையைக்குறித்து சந்தேகத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். மாறாக, அவர்களின் பார்வைகள் அதனைப் புரிந்துகொள்வதை விட்டும் குருடாகிவிட்டன.
تفسیرهای عربی:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا ءَاِذَا كُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَىِٕنَّا لَمُخْرَجُوْنَ ۟
27.67. நிராகரிப்பாளர்கள் மறுப்புத் தெரிவித்தவர்களாக கூறுகிறார்கள்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டாலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமா?
تفسیرهای عربی:
لَقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَآؤُنَا مِنْ قَبْلُ ۙ— اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
27.68. இதற்கு முன்னர் நாங்களும் எங்கள் முன்னோர்களும் மீண்டும் எழுப்பப்படுவோம் என்று வாக்களிக்கப்பட்டோம். ஆனால் அந்த வாக்குறுதி நிகழ்வதை நாம் காணவில்லை. எங்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதி முன்னோர்கள் தங்களின் புத்தகங்களில் எழுதி வைத்துள்ள அவர்களின் கட்டுக் கதைகளேயாகும்.
تفسیرهای عربی:
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟
27.69. -தூதரே!- மறுமை நாளை மறுக்கும் இந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “பூமியில் பயணம் செய்து மறுமை நாளை பொய்ப்பித்த குற்றவாளிகளின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதனை அவர்கள் மறுத்ததால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்.
تفسیرهای عربی:
وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُنْ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟
27.70. உம்முடைய அழைப்பை இணைவைப்பாளர்கள் புறக்கணிக்கும் காரணத்தால் நீர் கவலை கொள்ளாதீர். அவர்கள் உமக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளால் உமது நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்வான்.
تفسیرهای عربی:
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
27.71. உம் சமூகத்தில் மறுமை நாளை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “தண்டனை இறங்கும் என்ற உங்களது கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீரும் நம்பிக்கையாளர்களும் எங்களுக்கு எச்சரித்த அவ்வேதனை எப்போது நிகழும்?”
تفسیرهای عربی:
قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِیْ تَسْتَعْجِلُوْنَ ۟
27.72. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் அவசரமாக வேண்டிய வேதனையின் சில பகுதிகள் உங்களை நெருங்கியருக்கக் கூடும்.”
تفسیرهای عربی:
وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟
27.73. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களின் மீது பேரருள் புரிபவன். அதனால்தான் அவன் அவர்கள் நிராகரிப்பு, பாவங்கள் என்பவற்றைச் செய்துகொண்டிருந்தும் அவர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் விட்டுவிடுகிறான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ் தங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில்லை.
تفسیرهای عربی:
وَاِنَّ رَبَّكَ لَیَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
27.74. நிச்சயமாக உம் இறைவன் தன் அடியார்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும் வெளிப்படுத்துவதையும் அறிவான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
تفسیرهای عربی:
وَمَا مِنْ غَآىِٕبَةٍ فِی السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
27.75. வானத்திலோ, பூமியிலோ மக்களை விட்டும் மறைவாக இருக்கின்ற ஒவ்வொன்றும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
تفسیرهای عربی:
اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَقُصُّ عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَكْثَرَ الَّذِیْ هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
27.76. நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டுக் கொண்டிருந்த பல விஷயங்களை எடுத்துரைக்கிறது. அவர்களின் நெறிபிறழ்வுகளை தெளிவுபடுத்துகிறது.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• علم الغيب مما اختص به الله، فادعاؤه كفر.
1. மறைவான அறிவு அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானதாகும். அது தனக்குமிருப்பதாக வாதிடுவது நிராகரிப்பாகும்.

• الاعتبار بالأمم السابقة من حيث مصيرها وأحوالها طريق النجاة.
2. முந்தையை சமூகங்களின் முடிவு, நிலமைகள் என்பவற்றைக்கொண்டு படிப்பினை பெறுவது பாதுகாப்புக்கான வழியாகும்.

• إحاطة علم الله بأعمال عباده.
3. அடியார்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் அறிவு சூழ்ந்துள்ளது.

• تصحيح القرآن لانحرافات بني إسرائيل وتحريفهم لكتبهم.
4. இஸ்ரவேலர்களின் நெறிபிறழ்வுகளையும் அவர்களது வேதங்களின் திரிபுகளையும் அல்குர்ஆன் சரிசெய்தல்.

 
ترجمهٔ معانی سوره: نمل
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - ترجمه‌ى تاميلى كتاب مختصر در تفسير قرآن كريم - لیست ترجمه ها

مرکز تفسیر و پژوهش‌های قرآنی آن را منتشر كرده است.

بستن