Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əs-Saff   Ayə:

அஸ்ஸப்

Surənin məqsədlərindən:
حثّ المؤمنين لنصرة الدين.
மார்க்கத்திற்கு உதவுமாறு விசுவாசிகளைத் தூண்டுதல்

سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
61.1. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்றவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பிலும், நிர்ணயத்திலும், சட்டத்திலும் அவன் ஞானம் மிக்கவன்.
Ərəbcə təfsirlər:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ ۟
61.2. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டவர்களே! உங்களில் ஒருவர் வாளினால் போரிடாமல் தாக்காமல் நான் வாளினால் போரிட்டேன் தாக்கினேன் என, உண்மையிலேயே நீங்கள் செய்யாத ஒன்றை ஏன் செய்ததாகக் கூறுகிறீர்கள்?
Ərəbcə təfsirlər:
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ ۟
61.3. நீங்கள் செய்யாததை அவ்வாறு கூறுவது அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரிய ஒன்றாகும். தான் கூறுவதை தனது செயலில் நிரூபித்து அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்துகொள்வதே ஒரு முஃமினுக்கு தகுமானதாகும்.
Ərəbcə təfsirlər:
اِنَّ اللّٰهَ یُحِبُّ الَّذِیْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْیَانٌ مَّرْصُوْصٌ ۟
61.4. நிச்சயமாக அல்லாஹ் தன் திருப்தியை நாடி தன் பாதையில் உறுதியான கட்டடத்தைப் போன்று ஓரணியில் நின்று போரிடக்கூடிய நம்பிக்கையாளர்களை நேசிக்கிறான்.
Ərəbcə təfsirlər:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِیْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ ؕ— فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟
61.5. தூதரே! மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூர்வீராக. “என் சமூகமே! நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் அறிந்திருந்தும் ஏன் என் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?” அவர்கள் அவர் கொண்டுவந்த சத்தியத்தைப் புறக்கணித்தபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை சத்தியம், உறுதித்தன்மையை விட்டும் திருப்பிவிட்டான். அல்லாஹ் தனக்குக் கட்டுப்படாத சமூகத்திற்கு அவன் சத்தியத்தின்பால் வழிகாட்டமாட்டான்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• مشروعية مبايعة ولي الأمر على السمع والطاعة والتقوى.
1. ஆட்சித்தலைவர் கூறுவதைக் கேட்டு, வழிப்பட்டு, இறையச்சம் என்பவற்றுக்காக அவரிடம் பைஅத் (ஒப்பந்தம்) செய்யலாம்.

• وجوب الصدق في الأفعال ومطابقتها للأقوال.
2. கூறுபவற்றுக்கு ஏற்ப நடந்து தனது செயலில் உண்மைத் தன்மையைப் பேணுவது கடமையாகும்.

• بيَّن الله للعبد طريق الخير والشر، فإذا اختار العبد الزيغ والضلال ولم يتب فإن الله يعاقبه بزيادة زيغه وضلاله.
3 அல்லாஹ் அடியானுக்கு நலவு, தீமை ஆகியவற்றின் வழியைத் தெளிவுபடுத்தியுள்ளான். அடியான் வழிகேட்டைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து மீளவில்லையெனில் அவனது வழிகேட்டை அதிகரிக்கச் செய்து அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான்.

 
Mənaların tərcüməsi Surə: əs-Saff
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq