Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əl-Mumtəhənə   Ayə:
لَقَدْ كَانَ لَكُمْ فِیْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ ؕ— وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠
60.6. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்ப்பவரே இந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவார். யார் இந்த அழகிய முன்மாதிரியை புறக்கணிப்பாரோ அவர் அறிந்துகொள்ளட்டும் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைவிட்டும் தேவையற்றவன்; அவர்களின் வழிப்படுதல் அவனுக்குத் தேவையில்லை. எல்லா நிலையிலும் அவனே புகழுக்குரியவன்.
Ərəbcə təfsirlər:
عَسَی اللّٰهُ اَنْ یَّجْعَلَ بَیْنَكُمْ وَبَیْنَ الَّذِیْنَ عَادَیْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً ؕ— وَاللّٰهُ قَدِیْرٌ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
60.7. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்கள் நிராகரிப்பாளர்களான எதிரிகளுக்கு இஸ்லாத்தின் பக்கம் வழிகாட்டி உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் அன்பை ஏற்படுத்தலாம். அப்போது அவர்கள் உங்களின் மார்க்க சகோதரர்களாக ஆகிவிடுவார்கள். அவர்களின் உள்ளங்களை நம்பிக்கைகொள்ளும்படி திருப்பிவிடுவதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Ərəbcə təfsirlər:
لَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ لَمْ یُقَاتِلُوْكُمْ فِی الدِّیْنِ وَلَمْ یُخْرِجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْۤا اِلَیْهِمْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்களுடன் போர்புரிந்து உங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றாதோருக்கு அவர்களுக்குரிய கடமைகளைச் செய்து உபகாரம் புரிவதையும் நீதமாக நடப்பதையும் அல்லாஹ் தடைசெய்யமாட்டான். தான், தனது குடும்பம், பொறுப்பில் உள்ளோர் ஆகியோரின் விடயத்தில் நீதியாக நடந்துகொள்வோரை அல்லாஹ் விரும்புகின்றான்.
Ərəbcə təfsirlər:
اِنَّمَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ قَاتَلُوْكُمْ فِی الدِّیْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰۤی اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ ۚ— وَمَنْ یَّتَوَلَّهُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
60.9. நிச்சயமாக நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக உங்களுடன் போரிட்டு உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றியோர், அதற்கு உதவியோர் ஆகியோருடன் நட்பு கொள்வதையே அவன் உங்களுக்குத் தடைசெய்கிறான். உங்களில் யாரெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்வார்களோ அவர்கள்தாம் அழிவிற்கான காரணங்களைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களாவர்.
Ərəbcə təfsirlər:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ— اَللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِهِنَّ ۚ— فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَی الْكُفَّارِ ؕ— لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ یَحِلُّوْنَ لَهُنَّ ؕ— وَاٰتُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ— وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَلْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ— ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ— یَحْكُمُ بَیْنَكُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
60.10. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நம்பிக்கைகொண்ட பெண்கள் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் அவர்கள் உண்மையாகவே நம்பிக்கைகொண்டுள்ளார்களா என்பதை சோதித்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ்வே நன்கறிந்தவன். அவர்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவை எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. இவ்வாறு சோதித்ததற்குப் பிறகு அவர்கள் நம்பிக்கைகொண்ட பெண்கள்தாம் என்பதை நீங்கள் அறிந்துகொண்டால் அவர்களை நிராகரிப்பாளர்களாக இருக்கும் அவர்களின் கணவர்களிடம் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு நிராகரிப்பாளர்களை மணமுடித்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதல்ல. நிராகரிப்பாளர்கள் நம்பிக்கைகொண்ட பெண்களை மணமுடித்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் கணவர்கள் செலவழித்த மணக்கொடைகளை அந்தக் கணவர்களுக்கு அளித்துவிடுங்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்களின் இத்தா காலஅளவு நிறைவடைந்த பிறகு மணக்கொடைகளை அளித்து அவர்களை நீங்கள் மணந்துகொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. யாருடைய மனைவி நிராகரிப்பவளாக இருக்கிறாளோ அல்லது இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறாளோ அவளை மனைவியாக வைத்துக்கொள்ளவேண்டாம். ஏனெனில் அவள் நிராகரித்ததனால் இருவருடைய இருந்த திருமண உறவு முறிந்துவிட்டது. நிராகரிப்பாளர்களிடம் மதம்மாறிச் சென்ற உங்கள் மனைவிக்கு நீங்கள் வழங்கிய மணக்கொடைகளைக் கேளுங்கள். நிராகரிப்பாளர்களும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு அவர்கள் அளித்த மணக்கொடைகளைக் கேட்கட்டும். இவ்வாறு மேற்கூறப்பட்டவாறு இரு சாராரும் மணக்கொடைகளை திருப்பியளிப்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். அவன் தன் அடியார்களின் நிலைகளையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தன் அடியார்களுக்கு அவன் வழங்கிய சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.
Ərəbcə təfsirlər:
وَاِنْ فَاتَكُمْ شَیْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَی الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِیْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْا ؕ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
60.11. ஒரு வேளை உங்களின் பெண்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி நிராகரிப்பாளர்களிடம் சென்றுவிட்டால், நீங்கள் அந்த நிராகரிப்பாளர்களிடம் அவர்களுக்கு செலவழித்த மணக்கொடைகளைக் கேட்டும் அவர்கள் உங்களுக்கு கொடுக்கவில்லையெனில் நீங்கள் நிராகரிப்பாளர்களிடமிருந்து போர்ச் செல்வங்களைக் கைப்பற்றினால் உங்களில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய பெண்களின் கணவர்களுக்கு அவர்கள் செலவழித்த மணக்கொடைகளை அளித்துவிடுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• في تصريف الله القلب من العداوة إلى المودة، ومن الكفر إلى الإيمان إشارة إلى أن قلوب العباد بين إصبعين من أصابعه سبحانه، فليطلب العبد منه الثبات على الإيمان.
1. அல்லாஹ் உள்ளங்களை பகைமையிலிருந்து நட்பிற்கும் நிராகரிப்பிலிருந்து நம்பிக்கையை நோக்கியும் திருப்பிவிடுவது, உள்ளங்கள் அவனின் இரு விரல்களுக்கிடையில் இருக்கின்றன என்பதையே குறிக்கின்றது. எனவே அடியான் அல்லாஹ்விடமே நம்பிக்கையில் உறுதியைக் கோர வேண்டும்.

• التفريق في الحكم بين الكفار المحاربين والمسالمين.
2. போரிடக்கூடிய நிராகரிப்பாளர்களுக்கும் சமாதானம் பேணக்கூடிய நிராகரிப்பாளர்களுக்குமிடையே சட்டத்தில் வேறுபாடு உள்ளது.

• حرمة الزواج بالكافرة غير الكتابية ابتداءً ودوامًا، وحرمة زواج المسلمة من كافر ابتداءً ودوامًا.
3. வேதக்காரர்களல்லாத நிராகரித்த பெண்களை மணமுடிப்பதும் (அவர்களுடன் வாழ்வை) தொடர்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். முஸ்லிமான் பெண் ஒரு காபிரை திருமணம் செய்வதும் அதேபோன்று அதில் தொடர்ந்து இருப்பதும் தடைசெய்யப்பட்டதாகும்.

 
Mənaların tərcüməsi Surə: əl-Mumtəhənə
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq