Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əd-Duxan   Ayə:
اِنَّ یَوْمَ الْفَصْلِ مِیْقَاتُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
44.40. நிச்சயமாக அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளிக்கும் மறுமை நாள் படைப்புகள் அனைத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட நாளாகும். அந்நாளில் அவர்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டுவான்.
Ərəbcə təfsirlər:
یَوْمَ لَا یُغْنِیْ مَوْلًی عَنْ مَّوْلًی شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ۙ
44.41. அந்ந நாளில் எந்த உறவினரும் தன் உறவினருக்கோ எந்த நண்பரும் தன் நண்பருக்கோ பயனளிக்க முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நிச்சயமாக அந்நாளில் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விடமே இருக்கும். அதனை வேறு எவரும் வாதிட சக்திபெறமாட்டார்கள்.
Ərəbcə təfsirlər:
اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ؕ— اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
44.42. ஆயினும் மக்களில் அல்லாஹ் யார் மீது கருணை காட்டினானோ அவர்களைத் தவிர. நிச்சயமாக அவர் தாம் செய்த நற்செயல்களைக் கொண்டு பயனடைவார். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது அடியார்களில் தவ்பா செய்பவர்களின் மீது கருணை காட்டுபவன்.
Ərəbcə təfsirlər:
اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِ ۟ۙ
44.43. அல்லாஹ் மறுமையைக் குறித்து குறிப்பிட்ட பிறகு மனிதர்கள் தங்களின் கூலிக்கேற்ப பல பிரிவினர்களாகப் பிரிந்துவிடுவார்கள் என்பதையும் குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் நரகத்தின் அடித்தளத்தில் முளைப்பித்த ஸக்கூம் மரமே (அது)
Ərəbcə təfsirlər:
طَعَامُ الْاَثِیْمِ ۟
44.44. நிராகரிப்பாளனான பெரும் பாவியின் உணவாகும். அதன் மோசமான கனிகளிலிருந்து அவன் உண்பான்.
Ərəbcə təfsirlər:
كَالْمُهْلِ ۛۚ— یَغْلِیْ فِی الْبُطُوْنِ ۟ۙ
44.45. அது கருப்பு எண்ணெய்யைப் போலிருக்கும். அதன் கடுமையான சூட்டினால் அவர்களின் வயிறுகளில் அது கொதிக்கும்.
Ərəbcə təfsirlər:
كَغَلْیِ الْحَمِیْمِ ۟
44.46. அது கடும் சூடான நீர் கொதிப்பதைப் போன்றிருக்கும்.
Ərəbcə təfsirlər:
خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰی سَوَآءِ الْجَحِیْمِ ۟ۙ
44.47. நரகத்தின் காவலர்களிடம் கூறப்படும்: “அவனைப் பிடித்து நரகத்தின் நடுப்பகுதிக்கு பலவந்தமாக இழுத்துச் செல்லுங்கள்.
Ərəbcə təfsirlər:
ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِیْمِ ۟ؕ
44.48. பின்னர் வேதனைக்குள்ளாகப்படும் அவன் தலை மீது கொதிக்கும் நீரைக் கொட்டுங்கள். வேதனையிலிருந்து அவன் விடுபட்டுவிடக்கூடாது.
Ərəbcə təfsirlər:
ذُقْ ۖۚ— اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْكَرِیْمُ ۟
44.49. இழிவுபடுத்தும் விதமாக அவனிடம் கூறப்படும்: “வேதனைமிக்க இந்த தண்டனையை சுவைத்துப் பார். நிச்சயமாக நீ உன்பக்கம் நெருங்க முடியாத பலமானவனாகவும் உன் சமூகத்தில் சங்கையானவனாகவும் இருக்கின்றாய்.
Ərəbcə təfsirlər:
اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ ۟
44.50. நிச்சயமாக இந்த வேதனையைத்தான் நீங்கள் மறுமையில் நிகழும் என்பதில் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அதனைக் காண்பதின் மூலம் இப்போது சந்தேகம் உங்களைவிட்டு முழுவதுமாக அகன்றுவிட்டது.
Ərəbcə təfsirlər:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ مَقَامٍ اَمِیْنٍ ۟ۙ
44.51. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்கள் எல்லா வகையான தீங்குகளைவிட்டும் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள்.
Ərəbcə təfsirlər:
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚۙ
44.52. தோட்டங்களிலும் ஓடக்கூடிய நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
Ərəbcə təfsirlər:
یَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِیْنَ ۟ۚۙ
44.53. சுவனத்தில் அவர்களுக்கு மெல்லிய மற்றும் கனமான பட்டாடைகள் அணிவிக்கப்படும். அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாகவே இருப்பார்கள். ஒருவர் மற்றவரின் பிடரியைப் பார்க்க மாட்டார்கள்.
Ərəbcə təfsirlər:
كَذٰلِكَ ۫— وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟ؕ
44.54. நாம் அவர்களை மேற்கூறப்பட்வற்றைக் கொண்டு கண்ணியப்படுத்தியது போன்று சுவனத்தில் விசாலமான கண்களையுடைய அதனுடைய கருப்புப் பகுதி கடும் கருப்பாகவும் அதன் வெள்ளைப் பகுதி கடும் வெள்ளையாகவும் இருக்கக்கூடிய அழகிய பெண்களை அவர்களுக்கு மணமுடித்து வைப்போம்.
Ərəbcə təfsirlər:
یَدْعُوْنَ فِیْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِیْنَ ۟ۙ
44.55. தாங்கள் விரும்புகின்ற ஒவ்வொரு வகையான பழத்தையும் கொண்டுவருவதற்காக தங்களுக்குப் பணிவிடை செய்பவர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். அவை முடிந்துவிடும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சமற்றவர்களாக இருப்பார்கள்.
Ərəbcə təfsirlər:
لَا یَذُوْقُوْنَ فِیْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰی ۚ— وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟ۙ
44.56. அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். உலகில் ஏற்பட்ட முதல் மரணத்தைத் தவிர வேறு மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள். அவர்களின் இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துவிட்டான்.
Ərəbcə təfsirlər:
فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
44.57. இது உம் இறைவன் அவர்களின் மீது அருள்புரியும் பொருட்டாகும். அவ்வாறு மேற்கூறப்பட்ட -சுவனத்தில் நுழையச்செய்து நரகை விட்டும் பாதுகாப்பதே- மகத்தான வெற்றியாகும். இதற்கு இணையான வேறு வெற்றி இல்லை.
Ərəbcə təfsirlər:
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
44.58. -தூதரே!- அவர்கள் அறிவுரை பெறும்பொருட்டு நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை உமது மொழியான அரபியில் இறக்கி இலகுபடுத்தியுள்ளோம்.
Ərəbcə təfsirlər:
فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ۟۠
44.59. உமக்கு வரக்கூடிய உதவியையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அழிவையும் எதிர்பார்ப்பீராக. நிச்சயமாக அவர்களும் உமக்கு அழிவு ஏற்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• الجمع بين العذاب الجسمي والنفسي للكافر.
1. நிராகரிப்பாளன் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒன்றுசேர வேதனைக்குள்ளாகப்படுவான்.

• الفوز العظيم هو النجاة من النار ودخول الجنة.
2. பெரும் வெற்றியென்பது நரகிலிருந்து தப்பி சுவனத்தில் நுழைவதாகும்.

• تيسير الله لفظ القرآن ومعانيه لعباده.
3. அல்குர்ஆனின் வார்த்தையையும் கருத்துக்களையும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு இலகுபடுத்தியுள்ளான்.

 
Mənaların tərcüməsi Surə: əd-Duxan
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq