Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əl-Bəqərə   Ayə:
وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ— فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
2.234. உங்களில் மரணமடைகின்றவர்களின் மனைவியர் கர்ப்பம் தரிக்காமல் இருந்தால் நான்கு மாதங்களும், பத்துநாட்களும் கட்டாயமாக காத்திருக்க வேண்டும். அந்த காலஇடைவெளியில் அவள் கணவனின் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது; தன்னை அலங்கரித்துக்கொள்ளவோ மணமுடித்துக்கொள்ளவோ கூடாது. அந்தத் தவணையை நிறைவுசெய்துவிட்டால், அவர்கள் மீது தடைசெய்யப்பட்டிருந்தவற்றை மார்க்கவரையறைக்குட்பட்டு செய்தால் பொறுப்பாளர்களே! உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். வெளிப்படையான, அந்தரங்கமான உங்களுடைய செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.
Ərəbcə təfsirlər:
وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَكْنَنْتُمْ فِیْۤ اَنْفُسِكُمْ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ۬— وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِیْۤ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠
2.235. கணவனை இழந்தோ விவாகரத்து செய்யப்பட்டோ இத்தாவில் காத்திருக்கும் பெண்களிடம் நேரிடையாக அல்லாமல் சாடைமாடையாக உங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதிலோ (உதாரணமாக, உன்னுடைய தவணை முடிந்துவிட்டால் எனக்குத் தகவல் தெரிவி) உங்கள் உள்ளத்தில் அந்தப் பெண்களை மணமுடிக்க வேண்டும் என்று ஆசைகொள்வதிலோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்களின் மீது உங்களுக்குள்ள கடுமையான விருப்பத்தினால் அவர்களை நீங்கள் நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் வெளிப்படையாக இன்றி சாடையாக உங்களது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு அனுமதித்துள்ளான். அவ்வாறின்றி இத்தாவில் காத்திருக்கும்போது அவர்களிடம் இரகசியமாக வாக்களிக்கவும் வேண்டாம்; திருமண ஒப்பந்தம் செய்யவும் வேண்டாம். அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆசைகளையும் அவன் அறிவான்.எனவே எச்சரிக்கையாக இருங்கள். அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டுவிடாதீர்கள். அறிந்துகொள்ளுங்கள், தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன்; அவன் சகிப்புத்தன்மைமிக்கவன்; அவசரப்பட்டு தண்டித்துவிட மாட்டான்.
Ərəbcə təfsirlər:
لَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِیْضَةً ۖۚ— وَّمَتِّعُوْهُنَّ ۚ— عَلَی الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَی الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ— مَتَاعًا بِالْمَعْرُوْفِ ۚ— حَقًّا عَلَی الْمُحْسِنِیْنَ ۟
2.236. நீங்கள் மணமுடித்துக்கொண்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதற்கும் மணக்கொடையை நிர்ணயிப்பதற்கும் முன்னரே அவர்களை விவாகரத்து செய்வது தவறல்ல. இந்த நிலமையில் அவர்களுக்கு நீங்கள் மணக்கொடை அளிப்பதும் அவசியமற்றது. ஆனால் உங்களின் வசதிக்கேற்ப அவர்கள் பயன்பெற்று மனதை தேற்றிக்கொள்ளும் அளவு பொருளைஅவர்களுக்கு அளித்துவிட வேண்டும். இவ்வாறு வழங்குவது தமது நடவடிக்கைகளில் நல்லோர்கள் மீது அவசியமாகும்.
Ərəbcə təfsirlər:
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِیْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ یَّعْفُوْنَ اَوْ یَعْفُوَا الَّذِیْ بِیَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ— وَاَنْ تَعْفُوْۤا اَقْرَبُ لِلتَّقْوٰی ؕ— وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَیْنَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
2.237. நீங்கள் மணக்கொடையை நிர்ணயித்து மணமுடித்துக் கொண்ட பெண்களுடன் உடலுறவுகொள்வதற்கு முன்னரே அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் நிர்ணயித்துக்கொண்ட மணக்கொடையில் பாதியை வழங்குவது உங்கள்மீது கடமையாகும். விரும்பினால் அந்தப் பெண்கள் -தெளிவுள்ளவர்களாக இருந்தால்- விட்டுக்கொடுத்துவிடலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட முழுத்தொகையையும் ஆண்கள் வழங்கிவிடலாம். நீங்கள் உங்களிடையே உரிமைகளில் விட்டுக்கொடுத்துக்கொள்வதுதான் இறையச்சத்திற்கு மிகவும் நெருக்கமானது. மக்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்வதை, உரிமைகளில் விட்டுக்கொடுப்பதை விட்டுவிடாதீர்கள். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதற்காக நற்காரியங்களில் முழுமூச்சுடன் செயல்படுங்கள்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• مشروعية العِدة على من توفي عنها زوجها بأن تمتنع عن الزينة والزواج مدة أربعة أشهر وعشرة أيام.
1. கணவன் இறந்துவிட்டால் மனைவி நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இத்தாவில் காத்திருக்க வேண்டும். அந்த காலஇடைவெளியில் அவள் தன்னை அலங்கரித்துக்கொள்ளவோ திருமணம் செய்துகொள்ளவோ கூடாது.

• معرفة المؤمن باطلاع الله عليه تَحْمِلُه على الحذر منه تعالى والوقوف عند حدوده.
2.அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவன் அவனை அல்லாஹ் கண்கானித்துக்கொடிருக்கிறான் என்று அறிந்துவைத்திருப்பது அவனது வரம்புகளை மீறாது எச்சரிக்கையாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

• الحث على المعاملة بالمعروف بين الأزواج والأقارب، وأن يكون العفو والمسامحة أساس تعاملهم فيما بينهم.
3. தம்பதிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு இடையிலான நடவடிக்கைகள்; பரஸ்பரம் புரிந்துணர்வு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பது இன்றியமையாததாகும்.

 
Mənaların tərcüməsi Surə: əl-Bəqərə
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq