للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: نوح   آية:
یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا ۟ۙ
71.11. நிச்சயமாக நீங்கள் இவ்வாறு செய்தால் அல்லாஹ் தேவையான சமயங்களில் உங்கள்மீது தொடர்ந்து மழை பொழியச் செய்வான். எனவே பஞ்சம் உங்களைப் பீடிக்காது.
التفاسير العربية:
وَّیُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَیَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّیَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًا ۟ؕ
71.12. உங்களின் செல்வங்களையும் பிள்ளைகளையும் அதிகரிக்கச்செய்து தருவான். உங்களுக்காக நீங்கள் பழம் உண்ணும் தோட்டங்களை ஏற்படுத்துவான். மேலும் நீங்களும் நீரருந்தி உங்கள் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கும் நீர் புகட்டும் ஆறுகளையும் ஏற்படுத்துவான்.
التفاسير العربية:
مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا ۟ۚ
71.13. என் சமூகமே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் அல்லாஹ்வின் மகத்துவத்தை அஞ்சுவதில்லையா? எவ்வித பொருட்டுமின்றி அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுகிறீர்களே?
التفاسير العربية:
وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا ۟
71.14. அவன் உங்களை விந்தாக, இரத்தக்கட்டியாக, சதைத்துண்டாக பல கட்டங்களாகப் படைத்தான்.
التفاسير العربية:
اَلَمْ تَرَوْا كَیْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۟ۙ
71.15. அவன் ஏழு வானங்களையும் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
التفاسير العربية:
وَّجَعَلَ الْقَمَرَ فِیْهِنَّ نُوْرًا وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ۟
71.16. அவன் கீழ்வானத்தில் சந்திரனை அமைத்து அதைப் பூமியிலுள்ளவர்களுக்காக பிரகாசமாக அமைத்துள்ளான். சூரியனை பிரகாசம் அளிக்கக்கூடியதாக அமைத்துள்ளான்.
التفاسير العربية:
وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۟ۙ
71.17. அல்லாஹ்தான் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் பூமியிலிருந்து உங்களைப் படைத்தான். பின்னர் நீங்கள் அது உங்களுக்கு உண்டாக்கும் விளைச்சல்களிலிருந்து உண்கிறீர்கள்.
التفاسير العربية:
ثُمَّ یُعِیْدُكُمْ فِیْهَا وَیُخْرِجُكُمْ اِخْرَاجًا ۟
71.18. பின்னர் நீங்கள் மரணித்தபிறகு உங்களை பூமியில் திரும்பக் கொண்டு செல்வான். பின்னர் அதிலிருந்து உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான்.
التفاسير العربية:
وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًا ۟ۙ
71.19. அல்லாஹ் உங்களுக்காக பூமியை வாழ்வதற்கேற்ப வசதியாக விரித்து வைத்துள்ளான்.
التفاسير العربية:
لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا ۟۠
71.20. அது நீங்கள் அதன் விசாலமான பாதைகளில் சென்று அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
التفاسير العربية:
قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِیْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ یَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۟ۚ
71.21. நூஹ் கூறினார்: “என் இறைவா! உன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்ற என் கட்டளையில் நிச்சயமாக என் சமூகத்தினர் எனக்கு மாறுசெய்துவிட்டனர். அவர்களில் தாழ்ந்தவர்கள் சொத்து மற்றும் பிள்ளைப் பாக்கியம் மூலம் நீ அருள் புரிந்த தங்களின் தலைவர்களைப் பின்பற்றினார்கள். நீ அவர்களுக்கு அளித்த அருட்கொடைகள் அவர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறெதையும் அதிகரிக்கவில்லை.
التفاسير العربية:
وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا ۟ۚ
71.22. அவர்களின் தலைவர்கள் தங்களில் தாழ்ந்தவர்களை நூஹிற்கு எதிராகத் தூண்டிவிட்டு பெரும் சூழ்ச்சிகளைச் செய்தார்கள்.
التفاسير العربية:
وَقَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۙ۬— وَّلَا یَغُوْثَ وَیَعُوْقَ وَنَسْرًا ۟ۚ
71.23. அவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களிடம் கூறினார்கள்: “உங்களின் தெய்வங்களை வணங்குவதை விட்டுவிடாதீர்கள். வத்து, சுவாவு, யகூசு யவூக்கு, நஸ்ர் ஆகிய தெய்வங்களை வணங்குவதையும் விட்டுவிடாதீர்கள்.
التفاسير العربية:
وَقَدْ اَضَلُّوْا كَثِیْرًا ۚ۬— وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا ضَلٰلًا ۟
71.24. இந்த சிலைகளைக்கொண்டு அவர்கள் மக்களில் ஏராளமானோரை வழிகெடுத்துவிட்டார்கள். -என் இறைவா!- நிராகரிப்பிலும் பாவங்களிலும் நிலைத்திருந்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு சத்தியத்தை விட்டு வழிகேட்டைத்தவிர வேறெதையும் அதிகப்படுத்தி விடாதே.
التفاسير العربية:
مِمَّا خَطِیْٓـٰٔتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا ۙ۬— فَلَمْ یَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا ۟
71.25. தாம் செய்த பாவங்களின் காரணமாக அவர்கள் உலகில் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டார்கள். மரணித்தபிறகு நேரிடையாக நரகத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வைத் தவிர தங்களை மூழ்குவதிலிருந்தும் நெருப்பிலிருந்தும் காப்பாற்றக்கூடிய எவரையும் அவர்கள் பெறவில்லை.
التفاسير العربية:
وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَی الْاَرْضِ مِنَ الْكٰفِرِیْنَ دَیَّارًا ۟
71.26. “ஏற்கனவே நம்பிக்கைகொண்டவர்களைத் தவிர இனி உம் சமூகத்தில் யாரும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்” என்று அல்லாஹ் நூஹிற்கு அறிவித்தபோது அவர் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! பூமியில் எந்த நடமாடும் நிராகரிப்பாளனையும் விட்டுவைக்காதே.
التفاسير العربية:
اِنَّكَ اِنْ تَذَرْهُمْ یُضِلُّوْا عِبَادَكَ وَلَا یَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا ۟
71.27. -எங்கள் இறைவா!- நிச்சயமாக நீ அவர்களுக்கு இன்னும் அவகாசம் அளித்தால் நம்பிக்கைகொண்ட உன் அடியார்களை அவர்கள் வழிகெடுப்பார்கள். உனக்குக் கட்டுப்படாத பாவிகளையும் உன் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாத கடும் நிராகரிப்பாளர்களையும்தாம் அவர்கள் பெற்றெடுப்பார்கள்.
التفاسير العربية:
رَبِّ اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِمَنْ دَخَلَ بَیْتِیَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا تَبَارًا ۟۠
71.28. என் இறைவா! என் பாவங்களையும் என் பெற்றோரின் பாவங்களையும் நம்பிக்கைகொண்டவராக என்வீட்டில் நுழைந்தவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக. நம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு அழிவையும் இழப்பையும் தவிர வேறெதையும் நீ அதிகப்படுத்திவிடாதே.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• الاستغفار سبب لنزول المطر وكثرة الأموال والأولاد.
1. பாவமன்னிப்புக் கோருவது மழை பொழிவதற்கும் பிள்ளைகளும் செல்வங்களும் அதிகரிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.

• دور الأكابر في إضلال الأصاغر ظاهر مُشَاهَد.
2. சிறியவர்களை வழிகெடுப்பதில் பெரியவர்களின் பங்கு நாம் காணக்கூடிய வெளிப்படையான ஒன்றுதான்.

• الذنوب سبب للهلاك في الدنيا، والعذاب في الآخرة.
3. பாவங்கள் இவ்வுலகில் அழிவிற்கும் மறுமையில் வேதனைக்கும் காரணமாக அமைகின்றன.

 
ترجمة معاني سورة: نوح
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق