للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: الحجرات   آية:
وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰی تَخْرُجَ اِلَیْهِمْ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
49.5. -தூதரே!- உம் மனைவியரின் அறைகளுக்குப் பின்னாலிருந்து உம்மை அழைக்கும் இவர்கள் நீர் வெளியேறும்வரை உம்மை அழைக்காமல் பொறுமையாக இருந்து நீர் வெளியேறி வந்தவுடன் தாழ்ந்த குரலில் உம்முடன் உரையாடியிருந்தால் அது அவர்களுக்கு அறைகளுக்கப் பின்னால் இருந்து உம்மை அழைப்பதை விட சிறந்ததாக அமைந்திருக்கும். ஏனனில் அதில்தான் கண்ணியம் இருக்கிறது. அவர்களிலும் ஏனையோரிலும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை அறியாமையினால் செய்ததனால் அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
التفاسير العربية:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَیَّنُوْۤا اَنْ تُصِیْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰی مَا فَعَلْتُمْ نٰدِمِیْنَ ۟
49.6. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! பாவி ஒருவன் ஒரு சமூகத்தைக் குறித்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால் அந்த செய்தியின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கொள்ளுங்கள். நீங்கள் -அந்தச் செய்தியை ஆராயாமல் நம்பினால்- உண்மை நிலவரம் தெரியாமல் ஒரு சமூகத்தின்மீது தீங்கிழைத்து விடுவீர்கள் என்ற அச்சமுண்டு என்பதால் அவசரப்பட்டு அதனை உண்மைப்படுத்திவிடாதீர்கள். இல்லையெனில் பின்னர் அவனது செய்தி பொய் என்று தெளிவானவுடன் நீங்கள் செய்த செயலுக்காக வருத்தப்படக்கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்.
التفاسير العربية:
وَاعْلَمُوْۤا اَنَّ فِیْكُمْ رَسُوْلَ اللّٰهِ ؕ— لَوْ یُطِیْعُكُمْ فِیْ كَثِیْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَلٰكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَیْكُمُ الْاِیْمَانَ وَزَیَّنَهٗ فِیْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَیْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْیَانَ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الرّٰشِدُوْنَ ۟ۙ
49.7. -நம்பிக்கையாளர்களே!- நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார். அவருக்கு வஹி இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே பொய் கூறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என அவருக்கு வஹீ வந்துவிடும். அவர் உங்களுக்கு நன்மைதரக்கூடியவற்றை நன்கறிந்தவர். பெரும்பாலான உங்களின் கருத்துகளுக்கு அவர் கீழ்ப்படிந்தால் அவர் உங்களுக்கு விரும்பாத சிரமத்தில் நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள். ஆயினும் அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நம்பிக்கையை பிரியமாக்கி உங்கள் உள்ளங்களில் அதனை அழகாக்கியுள்ளான். அதனால் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். நிராகரிப்பையும் அவனுக்குக் கட்டுப்படாமல் இருப்பதையும் பாவங்கள் புரிவதையும் அவன் உங்களுக்கு வெறுப்பாக்கி வைத்துள்ளான். இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் நேரான வழியில் செல்லக்கூடியவர்களாவர்.
التفاسير العربية:
فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
49.8. -உங்களின் உள்ளங்களில் நலவை அழகுபடுத்தி தீமையை வெறுப்பூட்டிய- இந்த ஏற்பாடு நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது சொரிந்த அருளேயாகும். தன் அடியார்களில் தனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களை அவன் நன்கறிவான். ஆகவே அவர்களுக்குப் பாக்கியம் அளிக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய பொருத்தமான இடத்தில் வைக்கும் ஞானமுடையவன்.
التفاسير العربية:
وَاِنْ طَآىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِیْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَیْنَهُمَا ۚ— فَاِنْ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَی الْاُخْرٰی فَقَاتِلُوا الَّتِیْ تَبْغِیْ حَتّٰی تَفِیْٓءَ اِلٰۤی اَمْرِ اللّٰهِ ۚ— فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَیْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
49.9. -நம்பிக்கையாளர்களே!- நம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் இரு பிரிவினரையும் தமது முரண்பாட்டில் அல்லாஹ்வுடைய மார்க்க தீர்ப்பின் பக்கம் வருமாறு அழைத்து அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள். அவர்களில் ஒரு பிரிவினர் சமாதானத்தை மறுத்து வரம்பு மீறினால் வரம்புமீறிய அந்த பிரிவினருடன் அவர்கள் அல்லாஹ்வுடைய தீர்ப்பின்பால் திரும்பும் வரை போரிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய தீர்ப்பின் பக்கம் திரும்பிவிட்டால் அவர்களிடையே நீதியோடும் நியாயத்தோடும் சமாதானம் செய்து வையுங்கள். அவர்களிடையே நீங்கள் அளிக்கும் தீர்ப்பில் நீதி செலுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் தங்களின் தீர்ப்பில் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.
التفاسير العربية:
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَیْنَ اَخَوَیْكُمْ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟۠
49.10. நிச்சயமாக நம்பிக்கையாளர்களே மார்க்க அடிப்படையில் சகோதரர்களாவர். -நம்பிக்கையாளர்களே!- இஸ்லாமிய சகோதரத்துவம் முரண்பட்டுக்கொள்ளும் இரு சகோதரர்களிடையே சமாதானம் செய்து வைப்பதை வேண்டுகிறது. உங்கள்மீது கருணை காட்டப்படும்பொருட்டு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள்.
التفاسير العربية:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ ۚ— وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ ؕ— بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ ۚ— وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
49.11. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்ட சமூகம் அல்லாஹ்விடத்தில் சிறந்த சமூகமாக இருக்கலாம். அல்லாஹ்விடத்தில் பெற்றுள்ள நிலையே கவனத்தில்கொள்ளப்படும். பெண்கள் மற்ற பெண்களை பரிகாசம் செய்ய வேண்டாம். பரிகாசம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்கள் சகோதரர்களைக் குறைகூறாதீர்கள். அவர்கள் உங்களைப் போன்றவர்களாவர். நபியவர்களின் வருகைக்கு முன் அன்சாரிகளில் சிலர் செய்துகொண்டிருந்தது போன்று நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றவர் வெறுக்கும் தீய பட்டப்பெயர் சூட்டி அழைக்க வேண்டாம். உங்களில் அவ்வாறு செய்பவர் பாவியாவார். நம்பிக்கைகொண்ட பிறகு பாவம் செய்வது மோசமான பண்பாகும். இந்த பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோராதவர்கள்தாம் தாம் செய்த பாவங்களின் காரணமாக அழிவின் வழிகளில் தம்மை இட்டுச்சென்று தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களாவர்.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• وجوب التثبت من صحة الأخبار، خاصة التي ينقلها من يُتَّهم بالفسق.
1. செய்திகளில் குறிப்பாக தீயவன் என சந்தேகத்துக்குள்ளானவர் கொண்டுவரும் தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்வது கட்டாயமாகும்.

• وجوب الإصلاح بين من يتقاتل من المسلمين، ومشروعية قتال الطائفة التي تصر على الاعتداء وترفض الصلح.
2. முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பது கட்டாயமாகும். சமாதானத்தை மறுத்து வரம்புமீறலில் நிலைத்திருக்கும் கூட்டத்துடன் போர்புரிவது அனுமதிக்கப்பட்டதாகும்.

• من حقوق الأخوة الإيمانية: الصلح بين المتنازعين والبعد عما يجرح المشاعر من السخرية والعيب والتنابز بالألقاب.
3. ஈமானிய சகோதரத்துவத்தின் கடமைகள்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரிடையே சமாதானம் செய்துவைப்பது, பரிகாசம், குறைகூறல், தீய பட்டப்பெயர் சூட்டுதல் ஆகிய உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல்.

 
ترجمة معاني سورة: الحجرات
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق