للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: الزمر   آية:
وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
39.48. அவர்கள் சம்பாதித்த இணைவைப்பு, பாவங்களின் தீயவிளைவுகள் அவர்களுக்கு முன்னால் வெளிப்பட்டுவிடும். எந்தத் தண்டனையைக்கொண்டு எச்சரிக்கப்படும் போது அவர்கள் உலகில் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துவிடும்.
التفاسير العربية:
فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَا ؗ— ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّا ۙ— قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ ؕ— بَلْ هِیَ فِتْنَةٌ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
39.49. நிராகரிக்கும் மனிதனுக்கு நோயோ, வறுமையோ, அது போன்றதோ, ஏற்பட்டுவிட்டால் நாம் அவனுக்கு ஏற்பட்ட அத்துன்பத்தைப் போக்குவதற்காக நம்மிடம் அவன் பிரார்த்தனை செய்கிறான். பின்னர் நாம் அவனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருட்கொடையை வழங்கினால் “நிச்சயமாக நான் இதற்குத் தகுதியானவன் என்பதனால்தான் அல்லாஹ் எனக்கு இதனை அளித்துள்ளான்” என்று கூறுகிறான். உண்மையில் இது அவனுக்கு சோதனையாகவும் விட்டுப்பிடிப்பதாகவும் இருக்கின்றது. ஆயினும் நிராகரிப்பாளர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்துகொள்வதில்லை. அல்லாஹ் தங்களுக்கு அருளியதைக்கொண்டு ஏமாந்து விடுகிறார்கள்.
التفاسير العربية:
قَدْ قَالَهَا الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
39.50. அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நிராகரிப்பாளர்களும் இவ்வாறுதான் கூறினார்கள். அவர்கள் சம்பாதித்த செல்வங்களோ, பதவியோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை.
التفاسير العربية:
فَاَصَابَهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا ؕ— وَالَّذِیْنَ ظَلَمُوْا مِنْ هٰۤؤُلَآءِ سَیُصِیْبُهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا ۙ— وَمَا هُمْ بِمُعْجِزِیْنَ ۟
39.51. அவர்கள் சம்பாதித்த இணைவைப்பு மற்றும் பாவங்களின் தீய விளைவுகள் அவர்களைப் பிடித்துக்கொண்டன. இணைவைத்தும், பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்ட இவர்கள் முன்சென்றவர்களைப் போன்று தாங்கள் சம்பாதித்தவற்றின் தீயவிளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பிவிடவோ அவனை வெல்லவோ முடியாது.
التفاسير العربية:
اَوَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
39.52. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும்பொருட்டு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான் என்பதையும் தான் நாடியவர்களுக்கு அவர்கள் பொறுமையை மேற்கொள்கிறார்களா அல்லது இறைவிதிக்கு எதிராக கோபம் கொள்கிறார்களா என்பதைச் சோதிக்கும்பொருட்டு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான் என்பதையும் இந்த இணைவைப்பாளர்கள் அறிந்துகொள்ளாமல்தான் தமது அக்கருத்தைக் கூறுகின்றனரா? நிச்சயமாக வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்படுவதிலும் அதில் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதிலும் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு அல்லாஹ்வின் திட்டங்களை அறிவிக்கும் சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் அவர்கள்தாம் சான்றுகளைக்கொண்டு பயனடைகிறார்கள். ஆனால் நிராகரிப்பாளர்கள் அவற்றைப் புறக்கணித்தவாறு அவற்றைக் கடந்து செல்கின்றார்கள்.
التفاسير العربية:
قُلْ یٰعِبَادِیَ الَّذِیْنَ اَسْرَفُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ یَغْفِرُ الذُّنُوْبَ جَمِیْعًا ؕ— اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
39.53. -தூதரே!- அல்லாஹ்வுக்கு இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களின் மீதே வரம்பு மீறிய என் அடியார்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் அருளையும் தங்களின் பாவத்துக்கான மன்னிப்பு கிடைப்பதையும் விட்டு நிராசையடைந்து விடாதீர்கள். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுகிறான். நிச்சயமாக அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
التفاسير العربية:
وَاَنِیْبُوْۤا اِلٰی رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟
39.54. மறுமை நாளின் வேதனை உங்களை அடையும் முன்னரே பாவமன்னிப்பு மற்றும் நற்செயல்களின் மூலம் உங்கள் இறைவனின் பக்கம் திரும்புங்கள். அவனுக்கு அடிபணியுங்கள். தண்டனை இறங்கிய பின்னர், உங்களுக்கு உதவிசெய்து வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடிய உங்களின் சிலைகளையோ குடும்பத்தினரையோ நீங்கள் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள்.
التفاسير العربية:
وَاتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۟ۙ
39.55. உங்கள் இறைவன் தன் தூதர் மீது இறக்கியதில் சிறந்ததான குர்ஆனைப் பின்பற்றுங்கள். நீங்கள் பாவமன்னிப்புக்குத் தயாராகுவதற்கு வாய்ப்பின்றி நீங்கள் உணராத விதத்தில் திடீரென வேதனை உங்களை வந்தடையும் முன்னரே அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள்.
التفاسير العربية:
اَنْ تَقُوْلَ نَفْسٌ یّٰحَسْرَتٰی عَلٰی مَا فَرَّطْتُ فِیْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السّٰخِرِیْنَ ۟ۙ
39.56. இவற்றை நீங்கள் செயல்படுத்துங்கள். மறுமை நாளில் எவரும் பின்வருமாறு கடுமையாக கைசேதப்பட்டு புலம்புவதைத் தவிர்ப்பதற்காக: “நிராகரித்து பாவங்கள் புரிந்து அல்லாஹ்வின் விஷயத்தில் குறைபாடு செய்து, விசுவாசம்கொண்டு வழிபடுபவர்களை பரிகாசம் செய்த ஆத்மாவின் கைசேதமே! நான் னே!”
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• النعمة على الكافر استدراج.
1. நிராகரிப்பாளனுக்கு வழங்கப்படும் அருட்கொடை விட்டுப் பிடிப்பதாகும்.

• سعة رحمة الله بخلقه.
2. படைப்பினங்கள் மீது அல்லாஹ்வின் அருள் விசாலமானது.

• الندم النافع هو ما كان في الدنيا، وتبعته توبة نصوح.
3. உலகில் கைசேதப்பட்டு தூய தவ்பாவுக்கு வழிவகுப்பதே பயனுள்ள கைசேதமாகும்.

 
ترجمة معاني سورة: الزمر
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق