للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: البقرة   آية:
لَیْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِیّٖنَ ۚ— وَاٰتَی الْمَالَ عَلٰی حُبِّهٖ ذَوِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ۙ— وَالسَّآىِٕلِیْنَ وَفِی الرِّقَابِ ۚ— وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ ۚ— وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ— وَالصّٰبِرِیْنَ فِی الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِیْنَ الْبَاْسِ ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ صَدَقُوْا ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟
2.177. கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ வெறுமனே முன்னோக்குவதும் அதில் முரண்பட்டுக்கொள்வதும் அல்லாஹ்வுக்குப் பிடித்தமான நன்மை அல்ல. உண்மையில் நன்மை என்பது, ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் வானவர்கள் அனைவரின் மீதும் இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தின்மீதும், பாகுபாடின்றி தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கைகொள்வதும், செல்வத்தின்மீது மோகம் இருந்தும் அதை உறவினர்களுக்காக, அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, குடும்பத்தையும் நாட்டையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக, மக்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட வறியவர்களுக்காக, அடிமைகளையும் கைதிகளையும் விடுதலை செய்வதற்காக செலவு செய்வதும், அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகையை முழுமையாகக் கடைப்பிடிப்பதும், கடமையாக்கப்பட்ட ஸகாத்தை வழங்குவதும், வாக்குறுதி அளித்தால் அதை முழுமையாக நிறைவேற்றுவதும், வறுமை, நோய் போன்றவற்றை சகித்துக்கொள்வதும், போர் உக்கிரமடையும் போது விரண்டோடாமல் பொறுமையாக இருப்பதும் ஆகும். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள்தாம் தங்களுடைய ஈமானிலும் செயல்பாடுகளிலும் அல்லாஹ்வுக்கு உண்மையாக இருப்பவர்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள்.
التفاسير العربية:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَیْكُمُ الْقِصَاصُ فِی الْقَتْلٰی ؕ— اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُ بِالْاُ ؕ— فَمَنْ عُفِیَ لَهٗ مِنْ اَخِیْهِ شَیْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَیْهِ بِاِحْسَانٍ ؕ— ذٰلِكَ تَخْفِیْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ؕ— فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟ۚ
2.178. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! வேண்டுமென்றே, அநியாயமாக மற்றவர்களை கொலை செய்யக்கூடியவர்கள் விஷயத்தில் கொலையாளியின் குற்றத்திற்குப் பகரமாக அவனும் கொல்லப்பட வேண்டும் என்று உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவன் சுதந்திரமானவனுக்குப் பகரமாக கொல்லப்படுவான், அடிமை அடிமைக்குப் பகரமாக கொல்லப்படுவான், பெண் பெண்ணுக்குப் பகரமாக கொல்லப்படுவாள். கொலைசெய்யப்பட்டவர் இறப்பதற்கு முன்னால் கொன்றவனை மன்னித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டவரின் பொறுப்பாளர் ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு அவனை மன்னித்துவிட்டால் - மன்னிப்பவர் ஈட்டுத் தொகையைப் பெறுவதில் சொல்லிக்காட்டாது நோவினை செய்யாது நல்லமுறையில் நடந்துகொள்ளட்டும். கொன்றவனும் தாமதமின்றி சிறந்தமுறையில் ஈட்டுத்தொகையை அளித்துவிடட்டும். இந்த மன்னிப்பும், ஈட்டுத்தொகையும் இறைவன் உங்களுக்கு அளித்த சலுகையும் இந்த சமூகத்தின்மீது பொழிந்து கருணையுமாகும். மன்னித்து, ஈட்டுத்தொகையும் பெற்றுவிட்டு கொன்றவன்மீது யாரேனும் வரம்புமீறினால் அவருக்கு அல்லாஹ்விடமிருந்து வேதனைமிக்க தண்டனை உண்டு.
التفاسير العربية:
وَلَكُمْ فِی الْقِصَاصِ حَیٰوةٌ یّٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟
2.179. அல்லாஹ் உங்களுக்கு விதித்த இந்த பழிவாங்குதலில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது. அதனால் உங்களது உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உங்களுக்கு மத்தியில் நிகழும் அநியாயங்கள் தடுக்கப்படும். அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, அவனது கட்டளையின்படி செயல்படும், அவனை அஞ்சும் அறிவாளிகள் இந்த விஷயத்தை உணர்ந்துகொள்வார்கள்.
التفاسير العربية:
كُتِبَ عَلَیْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَیْرَا ۖۚ— ١لْوَصِیَّةُ لِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ بِالْمَعْرُوْفِ ۚ— حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟ؕ
2.180. நீங்கள் மரண வேளையை நெருங்கிவிட்டால், நீங்கள் ஏராளமான செல்வங்களை விட்டுச் செல்பவர்களாக இருந்தால் தாய்தந்தையருக்கும், உறவினருக்கும் - இறைவன் விதித்தபடி - மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமின்றி உயில் எழுதிவிடுங்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள்மீது கட்டாயக் கடமையாகும். இது வாரிசுரிமை தொடர்பாக வசனங்கள் இறங்குவதற்கு முன்னுள்ள சட்டமாகும். வாரிசுரிமை தொடர்பான வசனங்கள் இறங்கிய பிறகு யார் எந்தளவு அனந்தரம் பெறுவார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.
التفاسير العربية:
فَمَنْ بَدَّلَهٗ بَعْدَ مَا سَمِعَهٗ فَاِنَّمَاۤ اِثْمُهٗ عَلَی الَّذِیْنَ یُبَدِّلُوْنَهٗ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ؕ
2.181. இந்த உயிலை தெளிவாக அறிந்தபின்னர் கூட்டிக் குறைப்பதன் மூலமோ தடுப்பதன் மூலமோ யாராவது மாற்றிவிட்டால் அந்த பாவம் மாற்றியவரையே சாரும். உயில் உரிமையாளர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ், அடியார்கள் பேசுவதை செவியேற்பவனாகவும் அவர்களின் செயல்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவர்களது எந்தவோரு விடயமும் அவனை விட்டும் தப்பமுடியாது.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• البِرُّ الذي يحبه الله يكون بتحقيق الإيمان والعمل الصالح، وأما التمسك بالمظاهر فقط فلا يكفي عنده تعالى.
1. அல்லாஹ் விரும்பும் நன்மை என்பது ஈமானையும் நற்செயலையும் உறுதிப்படுத்துவதைக் கொண்டே இருக்கும். அதை விட்டுவிட்டு வெளிப்படையான விஷயங்களை மாத்திரம் பற்றிக்கொள்வது அல்லாஹ்விடத்தில் பயனளிக்காது.

• من أعظم ما يحفظ الأنفس، ويمنع من التعدي والظلم؛ تطبيق مبدأ القصاص الذي شرعه الله في النفس وما دونها.
2. உயிர் மற்றும் உடலுறுப்புக்களில் அல்லாஹ் விதித்த பழிவாங்கும் சட்டத்தைச் செயல்படுத்துவதால் உயிர்கள் பாதுகாக்கப்படுகிறது, அநியாயமும் வரம்பு மீறலும் தடுக்கப்படுகிறது.

• عِظَمُ شأن الوصية، ولا سيما لمن كان عنده شيء يُوصي به، وإثمُ من غيَّر في وصية الميت وبدَّل ما فيها.
3. உயில் எழுதுவதின் முக்கியத்துவம் தெளிவாகிறது. குறிப்பாக உயில் எழுத வேண்டியவற்றை தம்மிடம் வைத்திருப்பவர். இறந்தவர் எழுதிய உயிலை மாற்றுவதும் பாரிய குற்றமாகும்.

 
ترجمة معاني سورة: البقرة
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق