للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: هود   آية:
فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهَا حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۙ۬— مَّنْضُوْدٍ ۟ۙ
11.82. லூதுடைய சமூகத்தை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்த போது அவர்களின் ஊர்களைத் உயர்த்தி தலைகீழாகப் புரட்டி மாற்றி விட்டோம். வரிசையாக அடுக்கப்பட்ட சுட்ட களிமண் கற்களை அவர்கள் மீது தொடர்ந்து பொழியச் செய்தோம்.
التفاسير العربية:
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ ؕ— وَمَا هِیَ مِنَ الظّٰلِمِیْنَ بِبَعِیْدٍ ۟۠
11.83. அந்த கற்கள் அல்லாஹ்வினால் பிரத்யேக அடையாளமிடப்பட்ட கற்களாகும். அந்த கற்கள் குறைஷிகள் மற்றும் இன்னபிற அநியாயக்காரர்களை விட்டும் தூரமாக இல்லை. மாறாக அது அண்மையிலேயே உள்ளது. அல்லாஹ் அதனை எப்பொழுது அவர்கள் மீது இறக்க நாடுவானோ அப்போது இறங்கி விடும்.
التفاسير العربية:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— وَلَا تَنْقُصُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ اِنِّیْۤ اَرٰىكُمْ بِخَیْرٍ وَّاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ مُّحِیْطٍ ۟
11.84. மத்யனை நோக்கி அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. மக்களுக்காக நிறுத்தால் அல்லது எடைபோட்டால் நிறுவையையும் அளவையையும் குறைத்து விடாதீர்கள். உங்களுக்கு விசாலமான வாழ்வாதாரமும் அருட்கொடைகளும் வழங்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். பாவங்களின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மாற்றிவிடாதீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அடையும், சூழ்ந்துகொள்ளும் நாளின் வேதனையை அஞ்சுகிறேன். அதிலிருந்து நீங்கள் எங்கும் தப்பி ஓட முடியாது. ஒதுங்கும் இடத்தை பெற்றுக்கொள்ளவும் முடியாது”
التفاسير العربية:
وَیٰقَوْمِ اَوْفُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
11.85. சமூகமே! நீங்கள் மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தால் அல்லது நிறுத்துக் கொடுத்தால் அளவையையும் நிறுவையையும் நியாயமாக முழுமைப்படுத்துங்கள். அளவை நிறுவையில் குறைசெய்தல், ஏமாற்றுதல், மோசடிசெய்தல் ஆகியவற்றினால் மக்களின் உரிமைகளில் எதனையும் குறைத்துவிடாதீர்கள். கொலை மற்றும் இன்னபிற பாவங்களின் மூலம் உலகில் குழப்பம் விளைவிக்காதீர்கள்.
التفاسير العربية:
بَقِیَّتُ اللّٰهِ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۚ۬— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟
11.86. மோசடி செய்து, பூமியில் குழப்பம் விளைவித்து பெறும் செல்வத்தைவிட மக்களுக்கு நியாயமாக அளிக்க வேண்டியதை அளித்த பிறகு மிஞ்சியிருக்கும் செல்வமே அதிகம் பயனளிக்கக்கூடியது; பெருகக்கூடியது. நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மீதமுள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள். நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு உங்களைக் கண்காணிப்பவன் அல்ல. மறைவானதையும் இரகசியமானதையும் அறிந்தவனே உங்களின் கண்காணிப்பாளன் ஆவான்.
التفاسير العربية:
قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ— اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ ۟
11.87. ஷுஐபின் சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் அல்லாஹ்வுக்காக தொழும் தொழுகையா, எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த சிலைகளை வணங்குவதையும், எங்களின் செல்வங்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும், அவற்றைப் பெருக்குவதையும் நாம் விட்டுவிட வேண்டும் என்று உம்மை சொல்லத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர் அறிவாளியாகவும் விவரம் உள்ளவராகவும் இருக்கின்றீர். இந்த அழைப்பிற்கு முன்னர் உம்மை நாங்கள் அறிவாளியாகத்தானே அறிந்துள்ளோம். உமக்கு என்னவாயிற்று?
التفاسير العربية:
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَرَزَقَنِیْ مِنْهُ رِزْقًا حَسَنًا ؕ— وَمَاۤ اُرِیْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰی مَاۤ اَنْهٰىكُمْ عَنْهُ ؕ— اِنْ اُرِیْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ؕ— وَمَا تَوْفِیْقِیْۤ اِلَّا بِاللّٰهِ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ اُنِیْبُ ۟
11.88. ஷுஐப் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: -“சமூகமே!- நான் என் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரத்தையும் அகப்பார்வையையும் பெற்றிருந்து அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் தூய்மையான அருட்கொடையையும் வழங்கியிருந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை எனக்குக் கூறுங்கள். நான் உங்களை ஒரு விஷயத்தை விட்டும் தடுத்து விட்டு அதற்கு மாறாக செயல்பட விரும்பவில்லை. உங்கள் இறைவனான அல்லாஹ் ஒருவனின் பக்கம் உங்களை அழைப்பதன் மூலம் என்னால் இயன்றவரை நான் உங்களை சீர்திருத்தம் செய்வதையே விரும்புகிறேன். அல்லாஹ்வே அதற்கான பாக்கியம் அளிக்க முடியும். என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்ப வேண்டும்.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• من سنن الله إهلاك الظالمين بأشد العقوبات وأفظعها.
1. அநியாயக்காரர்களை இழிவான, பயங்கரமான வேதனையால் அழிப்பதும் அல்லாஹ்வின் வழிமுறைகளில் உள்ளவைதான்.

• حرمة نقص الكيل والوزن وبخس الناس حقوقهم.
2. அளவையிலும் நிறுவையிலும் மோசடிசெய்து மக்களின் உரிமைகளைப் பறிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும்.

• وجوب الرضا بالحلال وإن قل.
3. ஹலாலானவற்றைக் கொண்டே திருப்தியடைய வேண்டும். அது குறைவாக இருந்தாலும் சரியே.

• فضل الأمر بالمعروف والنهي عن المنكر، ووجوب العمل بما يأمر الله به، والانتهاء عما ينهى عنه.
4. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் சிறப்பு. அல்லாஹ்வின் ஏவலின் படி செயற்படுவதும் அவன் தடுத்தவற்றைத் தவிர்ந்து கொள்வதும் அவசியமாகும்.

 
ترجمة معاني سورة: هود
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق