Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ * - የትርጉሞች ማዉጫ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

የይዘት ትርጉም ምዕራፍ: አል ሉቅማን   አንቀጽ:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؗ— كُلٌّ یَّجْرِیْۤ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
நிச்சயமாக அல்லாஹ் பகலில் இரவை நுழைத்து (இரவை சுருக்கி)விடுகிறான்; இரவில் பகலை நுழைத்து (பகலை சுருக்கி)விடுகிறான்; சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான்; எல்லாம் ஒரு குறிப்பிட்ட தவணையின் பக்கம் ஓடுகின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் (எல்லோரும்) செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் என்பதையும் நீர் கவனிக்கவில்லையா?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُ ۙ— وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟۠
அது, (-மேற்கூறப்பட்ட அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்; இன்னும், நிச்சயமாக அவனை அன்றி அவர்கள் அழைப்பவை (-வணங்குபவை) பொய்யானவை; இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்ற காரணத்தால் ஆகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلَمْ تَرَ اَنَّ الْفُلْكَ تَجْرِیْ فِی الْبَحْرِ بِنِعْمَتِ اللّٰهِ لِیُرِیَكُمْ مِّنْ اٰیٰتِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
நிச்சயமாக கப்பல்கள் கடலில் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா? பெரிய பொறுமையாளர்கள், அதிகம் நன்றி செலுத்துபவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا غَشِیَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬— فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ ؕ— وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ ۟
(பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கிறார்கள், - வழிபாடுகளை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில். ஆக, அவர்களை அவன் கரைக்கு காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கிறார்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கிறார்கள். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகிறார்கள்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக் கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் தவிர நமது அத்தாட்சிகளை மறுக்க மாட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا یَوْمًا لَّا یَجْزِیْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ ؗ— وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَیْـًٔا ؕ— اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۥ— وَلَا یَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟
மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை, தன் மகனை விட்டும் (தண்டனையை) தடுக்க மாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (தண்டனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். இன்னும், ஏமாற்றக் கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ— وَیُنَزِّلُ الْغَیْثَ ۚ— وَیَعْلَمُ مَا فِی الْاَرْحَامِ ؕ— وَمَا تَدْرِیْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ— وَمَا تَدْرِیْ نَفْسٌ بِاَیِّ اَرْضٍ تَمُوْتُ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟۠
நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான் மறுமையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்ற) அறிவு இருக்கிறது. அவன்தான் மழையை இறக்குகிறான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகிறான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
 
የይዘት ትርጉም ምዕራፍ: አል ሉቅማን
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ - የትርጉሞች ማዉጫ

ተርጓሚ ሸይኽ ዑመር ሸሪፍ ቢን ዐብዱሰላም

መዝጋት