Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ * - የትርጉሞች ማዉጫ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
وَلَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ— بَلْ اَحْیَآءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ۟
இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் (எதிரிகளால்) கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள். எனினும், (அதை) நீங்கள் அறியமாட்டீர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ ؕ— وَبَشِّرِ الصّٰبِرِیْنَ ۟ۙ
இன்னும், பயத்தினாலும் பசியினாலும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்களுடைய (சிறிது) நஷ்டத்தினாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே!) பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ ۙ— قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَاِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟ؕ
அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புகிறவர்கள்’’ எனக் கூறுவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۫— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ۟
அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்புகளும் கருணையும் அவர்கள் மீது இறங்குகின்றன. இன்னும், அவர்கள்தான் நேர்வழிபெற்றவர்கள் ஆவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآىِٕرِ اللّٰهِ ۚ— فَمَنْ حَجَّ الْبَیْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیْهِ اَنْ یَّطَّوَّفَ بِهِمَا ؕ— وَمَنْ تَطَوَّعَ خَیْرًا ۙ— فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِیْمٌ ۟
நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை ஆகும். ஆகவே, கஅபாவை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் அவ்விரண்டையும் சுற்றி வருவது (அவருக்கு நன்மையாகும். அது) அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் நன்மையை உபரியாகச் செய்வாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلْنَا مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی مِنْ بَعْدِ مَا بَیَّنّٰهُ لِلنَّاسِ فِی الْكِتٰبِ ۙ— اُولٰٓىِٕكَ یَلْعَنُهُمُ اللّٰهُ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ ۟ۙ
தெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியை நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَیَّنُوْا فَاُولٰٓىِٕكَ اَتُوْبُ عَلَیْهِمْ ۚ— وَاَنَا التَّوَّابُ الرَّحِیْمُ ۟
எவர்கள் (தங்கள் தவறுகளிலிருந்து திருந்தினார்களோ), மன்னிப்புக்கோரினார்களோ, (தங்களை) சீர்திருத்திக் கொண்டார்களோ, (தாங்கள் மறைத்த உண்மைகளை மக்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுடைய தவ்பாவை நான் அங்கீகரிப்பேன். நான்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவேன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீது அல்லாஹ் உடைய சாபமும், வானவர்கள்; இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
خٰلِدِیْنَ فِیْهَا ۚ— لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
அ(ந்த சாபத்)தில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள். (மறுமையில்) அவர்களுக்கு தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟۠
இன்னும், (மனிதர்களே! நீங்கள் உண்மையில் வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். பேரருளாளன், பேரன்பாளனாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ - የትርጉሞች ማዉጫ

ተርጓሚ ሸይኽ ዑመር ሸሪፍ ቢን ዐብዱሰላም

መዝጋት