Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ * - የትርጉሞች ማዉጫ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

የይዘት ትርጉም ምዕራፍ: ዩኑስ   አንቀጽ:
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ— اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதி காண்பிப்பீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்கி இருப்பதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். ஆகவே, உங்கள் (விருப்பப்படி) காரியத்தை முடிவு செய்யுங்கள்; இன்னும், (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்). பிறகு, உங்கள் காரியம் உங்களுக்கு மறைவானதாக குழப்பமானதாக ஆகிவிட வேண்டாம். பிறகு, என் மீது (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். இன்னும், (அதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நூஹ்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاِنْ تَوَلَّیْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۙ— وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
“ஆக, நீங்கள் (புறக்கணித்து) விலகினால், (எனக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. இன்னும், முஸ்லிம்களில் நான் இருக்க வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன்” (என்று நூஹ் கூறினார்).
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَكَذَّبُوْهُ فَنَجَّیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟
ஆக, (அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். இன்னும், அவர்களை வாரிசுகளாக ஆக்கினோம். இன்னும், நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு (மோசமாக) இருந்தது என்று கவனிப்பீராக!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟
பிறகு, அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். ஆக, அவர்கள் (பல) அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்க(ளுடைய மூதாதைக)ள் பொய்ப்பித்தவற்றை இவர்களும் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. எல்லை மீறியவர்களின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
பிறகு, இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் கர்வம் கொண்டனர். இன்னும், அவர்கள் குற்றம் புரிகின்ற சமுதாயமாக இருந்தனர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِیْنٌ ۟
ஆக, அவர்களுக்கு நம்மிடமிருந்து உண்மை வந்தபோது, “நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்” என்று கூறினார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ— اَسِحْرٌ هٰذَا ؕ— وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
மூஸா கூறினார்: “உண்மையைப் பார்த்து, - அது உங்களிடம் வந்தபோது (-அதை சூனியம் என்று) கூறுகிறீர்களா? சூனியமா இது? சூனியக்காரர்கள் (ஒருபோதும்) வெற்றி பெறமாட்டார்கள்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِیَآءُ فِی الْاَرْضِ ؕ— وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِیْنَ ۟
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் மூதாதையர்களை நாங்கள் எதில் கண்டோமோ அதிலிருந்து எங்களை நீர் திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள் இருவருக்கும் தலைமைத்துவம் (பெருமை, ஆதிக்கம்) ஆகிவிட வேண்டும் என்பதற்காக நீர் எங்களிடம் வந்தீரா? இன்னும், நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
 
የይዘት ትርጉም ምዕራፍ: ዩኑስ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ - የትርጉሞች ማዉጫ

ተርጓሚ ሸይኽ ዑመር ሸሪፍ ቢን ዐብዱሰላም

መዝጋት