Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አት-ተውባህ   አንቀፅ:
ثُمَّ یَتُوْبُ اللّٰهُ مِنْ بَعْدِ ذٰلِكَ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
9.27. அத்தண்டனைக்குப் பின்னர் நிராகரிப்பு, வழிகேட்டிலிருந்து மீள்வோரை அல்லாஹ் மன்னிப்பான். அவனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் நிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபட்ட பிறகும் அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا یَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚ— وَاِنْ خِفْتُمْ عَیْلَةً فَسَوْفَ یُغْنِیْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
9.28. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களே! இணைவைப்பாளர்களிடம் நிராகரிப்பு, அநியாயம், தீய குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் காணப்படுவதால் அவர்கள் அசுத்தமானவர்களாவர். எனவே -மஸ்ஜிதுல் ஹராமை உள்ளடக்கிய- மக்காவின் புனித எல்லைக்குள் அவர்கள் ஹஜ் செய்யக்கூடியவர்களாக, உம்ரா செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் இந்த வருடமான ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டுக்குப் பிறகு நுழையக் கூடாது. -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் எடுத்து வந்துகொண்டிருந்த உணவுகள் பல்வேறு வியாபாரங்கள் தடைபடுவதால் நீங்கள் வறுமையை அஞ்சினால், நிச்சயமாக அல்லாஹ் நாடினால் தன் அருளை உங்களுக்கு வழங்கப் போதுமானவன். உங்களின் நிலைகளைப் பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களுக்காக திட்டமிடக் கூடியவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.
ዓረብኛ ተፍሲሮች:
قَاتِلُوا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ وَلَا یُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَلَا یَدِیْنُوْنَ دِیْنَ الْحَقِّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حَتّٰی یُعْطُوا الْجِزْیَةَ عَنْ یَّدٍ وَّهُمْ صٰغِرُوْنَ ۟۠
9.29. -நம்பிக்கையாளர்களே!- யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் அல்லாஹ்வை இணையற்ற இறைவனாக ஏற்றுக் கொள்ளாத, மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாத, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவைகளான இறந்தவை, பன்றி இறைச்சி, மதுபானம், வட்டி ஆகியவற்றைத் தவிர்ந்து கொள்ளாத, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அடிபணியாத நிராகரிப்போருடன், அவர்கள் அடிபணிந்து தங்கள் கைகளால் ஜிஸ்யா வரி தரும் வரை போரிடுங்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقَالَتِ الْیَهُوْدُ عُزَیْرُ ١بْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَی الْمَسِیْحُ ابْنُ اللّٰهِ ؕ— ذٰلِكَ قَوْلُهُمْ بِاَفْوَاهِهِمْ ۚ— یُضَاهِـُٔوْنَ قَوْلَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ— قَاتَلَهُمُ اللّٰهُ ۚ— اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
9.30. அனைத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் இணைவைப்பாளர்களே. யூதர்கள் உசைரை அல்லாஹ்வின் மகன் என்று கூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். கிருஸ்தவர்கள் மஸீஹ் ஈசாவை அல்லாஹ்வின் மகன் என்றுகூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். அவர்களது இந்த அவதூறு எவ்வித ஆதாரமுமின்றி அவர்களின் வாயினால் கூறிய ஒரு கூற்றே. அவர்கள் தமது இந்தக் கூற்றில் “வானவர்கள் அல்லாஹ்வின் மகள்களாவர் என்று” கூறிய அவர்களுக்கு முன்னிருந்த இணைவைப்பாளர்களின் கூற்றுக்கே ஒப்பாகின்றனர். இதனை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். இவ்வளவு தெளிவான சத்தியத்தை விட்டு அசத்தியத்தை நோக்கி எவ்வாறுதான் அவர்கள் திசைதிருப்பப்படுகிறார்களோ?!
ዓረብኛ ተፍሲሮች:
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ ۚ— وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— سُبْحٰنَهٗ عَمَّا یُشْرِكُوْنَ ۟
9.31. யூதர்கள் தங்களின் அறிஞர்களையும் கிறிஸ்தவர்கள் தங்களின் சந்நியாசிகளையும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ் தடைசெய்ததை அவர்களுக்கு அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்ததை அவர்கள் மீது தடைசெய்கிறார்கள். கிருஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா மஸீஹை அல்லாஹ்வுடன் இறைவனாக்கிக் கொண்டார்கள். யூத அறிஞர்களுக்கும் கிருஸ்தவ துறவிகளுக்கும் உசைருக்கும் மர்யமின் மகன் ஈஸாவுக்கும் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குமாறு அவன் கட்டளையிட்டான். அல்லாஹ்வே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன். இணைவைப்பாளர்கள் கூறுவது போல அவனுக்கு இணைகள் இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• في الآيات دليل على أن تعلق القلب بأسباب الرزق جائز، ولا ينافي التوكل.
1. வாழ்வாதாரத்தின் காரணிகளோடு உள்ளம் சம்பந்தப்படுவது ஆகுமானதே, இது அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பதற்கு எதிரானதுமல்ல என்பதற்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாகும்.

• في الآيات دليل على أن الرزق ليس بالاجتهاد، وإنما هو فضل من الله تعالى تولى قسمته.
2. வாழ்வாதாரம் நம்முடைய முயற்சியைக் கொண்டு கிடைப்பதல்ல. அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவனே அதனைப் பங்கிடுகிறான் என்பதற்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாகும்.

• الجزية واحد من خيارات ثلاثة يعرضها الإسلام على الأعداء، يقصد منها أن يكون الأمر كله للمسلمين بنزع شوكة الكافرين.
3. எதிரிகளுக்கு முன்னால் வைக்கப்படும் மூன்று விஷயங்களில் ஜிஸ்யாவும் ஒன்றாகும். இதன் நோக்கம் நிராகரிப்பாளர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு அதிகாரம் முழுவதும் முஸ்லிம்களிடமே இருக்கின்றது என்ற விஷயம் உறுதிப்படுத்தப்படுகிறது.

• في اليهود من الخبث والشر ما أوصلهم إلى أن تجرؤوا على الله، وتنقَّصوا من عظمته سبحانه.
4. யூதர்களிடமுள்ள தீயகுணம், அல்லாஹ்வின் மீதே துணிவு கொண்டு அவனது மகிமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுமளவுக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አት-ተውባህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት