Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም አንቀፅ: (15) ሱራ (ምዕራፍ): አል-ማኢዳህ
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ كَثِیْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ؕ۬— قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِیْنٌ ۟ۙ
5.15. தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களே! நம்முடைய தூதர் முஹம்மது உங்களிடம் வந்துள்ளார்; நீங்கள் மறைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களிலுள்ள பெரும்பாலான விஷயங்களை அவர் தெளிவுபடுத்துகிறார்; உங்களை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லாத பல விஷயங்களை அவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்; அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் என்னும் வேதம் உங்களிடம் வந்துள்ளது. அது ஒளிரும் பிரகாசமாகவும் மக்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக விவகாரங்களுக்குத் தேவையானவற்றைத் தெளிவுபடுத்தும் வேதமாகவும் இருக்கின்றது.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• تَرْك العمل بمواثيق الله وعهوده قد يوجب وقوع العداوة وإشاعة البغضاء والتنافر والتقاتل بين المخالفين لأمر الله تعالى.
1. அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தங்களின்படி செயல்படாமல் இருப்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் சண்டையையும் சிலவேளை ஏற்படுத்திவிடுகின்றன.

• الرد على النصارى القائلين بأن الله تعالى تجسد في المسيح عليه السلام، وبيان كفرهم وضلال قولهم.
2. ‘ஈஸாவின் உருவில் இறைவனே இருக்கின்றான்’ என்று கூறும் கிறிஸ்தவர்களின் தீய கொள்கை மறுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிராகரிப்பும் வழிகேடும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى إن أراد أن يهلك المسيح وأمه عليهما السلام وجميع أهل الأرض فلن يستطيع أحد رده، وهذا يثبت تفرده سبحانه بالأمر وأنه لا إله غيره.
3. அல்லாஹ் ஈஸாவையும் அவரது தாயாரையும் உலகிலுள்ள அனைவரையும் அழிக்க விரும்பினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்பது ஈஸா இறைவனல்ல என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும். இது அவன் தனித்தே காரியமாற்றுகிறான் என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதையும் நிரூபிக்கின்றது.

• من أدلة بطلان ألوهية المسيح أن الله تعالى يُذَكِّر بكونه تعالى ﴿ يَخْلُقُ مَا يَشَاءُ﴾ (المائدة: 17)، فهو يخلق من الأبوين، ويخلق من أم بلا أب كعيسى عليه السلام، ويخلق من الجماد كحية موسى عليه السلام، ويخلق من رجل بلا أنثى كحواء من آدم عليهما السلام.
4. மஸீஹ் இறைவனல்ல என்பற்கான ஆதாரங்களில் ஒன்றுதான் “தான் நாடியதைப் படைப்பதாக அல்லாஹ் நினைவூட்டுவதாகும்.” அவன் தாய் தந்தையிலிருந்தும் படைப்பான். ஈஸாவைப் போன்று தந்தையின்றி தாயிலிருந்து மாத்திரமும் படைப்பான். மூஸா (அலை) அவர்களது பாம்பைப் போன்று உயிரற்ற ஜடப்பொருளிலிருந்தும் படைப்பான். ஹவ்வா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்களிலிருந்து படைத்ததைப் போன்று பெண் துணையின்றி ஆணிலிருந்து மாத்திரமும் படைப்பான்.

 
የመልዕክት ትርጉም አንቀፅ: (15) ሱራ (ምዕራፍ): አል-ማኢዳህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት