Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-ማኢዳህ   አንቀፅ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ— وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ— وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ— مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
5.6. நம்பிக்கை கொண்டவர்களே! சிறுதொடக்கு உள்ள நிலையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்ற எழுந்தால் உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை கைகளையும் கழுவி, தலைகளை தடவி இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவி வுழூ செய்துகொள்ளுங்கள். உங்கள் மீது குளிப்பு அவசியமாகிவிட்டால் குளித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளிகளாக இருந்து நோய் அதிகமாகிவிடும் என்றோ அல்லது நிவாரணம் தாமதமடையும் என்றோ அஞ்சினால் அல்லது ஆரோக்கியமாக நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவது போன்றவற்றின் மூலம் சிறுதொடக்கு உள்ள நிலமையில் இருந்து அல்லது உங்கள் மனைவியருடன் உடலுறவு கொண்டு பெருந்தொடக்கு உடையவராக இருந்து சுத்தம் செய்வதற்காக தண்ணீரைத் தேடியும் கிடைக்காத பட்சத்தில், பூமியின் மேல் உங்கள் இருகைகளால் அடித்து உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். பாதிப்பு ஏற்பட்டாலும் தண்ணீரை கண்டிப்பாக பயன்படுத்தியே தீர வேண்டும் என்று அல்லாஹ் தன் சட்டங்களில் சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. தண்ணீர் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத சமயத்தில் அல்லாஹ் அதற்கான பதிலீட்டை அனுமதித்துள்ளான். இது அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை முழுமைப்படுத்துவதற்காகவும் அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை மறுக்காது நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காகவும்தான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَكُمْ بِهٖۤ ۙ— اِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ؗ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
5.7. இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டி அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். “மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் நாங்கள் நீர் கூறும் விஷயத்தை செவியுறுவோம், உம் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம்” என்று நீங்கள் தூதரிடம் உடன்படிக்கை செய்து கூறிய சமயத்தில் அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.
ዓረብኛ ተፍሲሮች:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ ؗ— وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰۤی اَلَّا تَعْدِلُوْا ؕ— اِعْدِلُوْا ۫— هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰی ؗ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
5.8. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தியவர்களே! அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக அவன் உங்கள் மீது விதித்த கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும், அநீதியின்றி நீதமாகவே சாட்சி கூறக்கூடியவர்களாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமூகத்தின் மீதுள்ள பகைமை அவர்கள் மீது நீதி தவற வைத்துவிட வேண்டாம். நண்பர்கள், எதிரிகள் என அனைவருடனும் நீதி கடைபிடிக்கப்படுவது அவசியமாகும். எனவே இரு சாராருடனும் நீதமாக நடந்துகொள்ளுங்கள். நீதி செலுத்துதல் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அநீதி இழைத்தல் இறைவனுக்கு எதிரான செயல்பாடாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ— لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟
5.9. தான் அளித்த வாக்குறுதிக்கு மாறுசெய்யாத அல்லாஹ் தன் மீதும் தன் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்டு நற்காரியம் புரிந்தவர்களின் பாவங்களை மன்னித்துவிடுவதாகவும் அவர்களுக்கு சுவனம் என்னும் மகத்தான கூலியைத் தருவதாகவும் வாக்களிக்கிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الأصل في الطهارة هو استعمال الماء بالوضوء من الحدث الأصغر، والغسل من الحدث الأكبر.
1. சிறு தொடக்கிலிருந்து உளூ செய்யவும் பெருந் தொடக்கிலிருந்து குளிக்கவும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுவான விதியாகும்.

• في حال تعذر الحصول على الماء، أو تعذّر استعماله لمرض مانع أو برد قارس، يشرع التيمم (بالتراب) لرفع حكم الحدث (الأصغر أو الأكبر).
2. தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நோய் அல்லது குளிரின் போது சிறு தொடக்கு பெருந் தொடக்கு ஆகியவற்றுக்காக மண்ணின் மூலம் தயம்மும் செய்துகொள்ளலாம்.

• الأمر بتوخي العدل واجتناب الجور حتى في معاملة المخالفين.
3. எதிரிகளாக இருந்தாலும் அவர்களுடன் அநீதி இழைக்காமல் நியாயமாகவே நடந்துகொள்ள வேண்டும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል-ማኢዳህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት