Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ጋፊር   አንቀፅ:
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ یُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُیُوْخًا ۚ— وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
40.67. அவன்தான் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அவருக்குப் பிறகு உங்களை விந்திலிருந்தும் பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து உங்களை சிறிய குழந்தைகளாக வெளிப்படுத்துகிறான். பின்னர் நீங்கள் உங்களின் பரிபூரண பலத்தை அடைகிறீர்கள். பின்னர் நீங்கள் பெரியவர்களாகி வயது முதிர்ந்தவர்களாகி விடுகிறீர்கள். உங்களில் இக்கட்டங்களுக்கு முன்னரே மரணிப்போரும் இருக்கின்றனர். நீங்கள் அல்லாஹ்வின் அறிவிலுள்ள குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள். அதை விட்டும் நீங்கள் அதிகரிக்கப்படுவதுமில்லை, குறைக்கப்படுவதுமில்லை. நீங்கள் இந்த ஆதாரங்களைக்கொண்டு அவன் வல்லமையையும் அவனது ஏகத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக (அவன் இவற்றையெல்லாம் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்).
ዓረብኛ ተፍሲሮች:
هُوَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۚ— فَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟۠
40.68. அவன் கைவசமே வாழ்வும் மரணமும் உள்ளது. அவன் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய தீர்மானித்துவிட்டால் அந்த விடயத்துக்கு ஆகு என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும்.
ዓረብኛ ተፍሲሮች:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ ؕ— اَنّٰی یُصْرَفُوْنَ ۟ۙۛ
40.69. -தூதரே!- அல்லாஹ்வின் சான்றுகள் தெளிவாக இருந்தும் பொய்ப்பித்தவர்களாக அவற்றில் தர்க்கம் புரிபவர்களை நீர் பார்க்கவில்லையா? தெளிவான சத்தியத்தை அவர்கள் புறக்கணிக்கும் நிலையைப் பார்த்து நீர் ஆச்சரியப்படுவீர்.
ዓረብኛ ተፍሲሮች:
الَّذِیْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ۫— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟ۙ
40.70. குர்ஆனையும் எமது தூதர்களுக்கு கொடுத்தனுப்பிய சத்தியத்தையும் பொய்ப்பிக்கும் இவர்கள் தங்களின் பொய்ப்பிப்பினால் ஏற்படும் விளைவை விரைவில் அறிந்துகொள்வார்கள். தீய முடிவையும் காண்பார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
اِذِ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُ ؕ— یُسْحَبُوْنَ ۟ۙ
40.71. அவர்களின் கழுத்துகளில் விலங்கிடப்பட்டு கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு வேதனை செய்யக்கூடிய வானவர்கள் அவர்களை இழுத்துச் செல்லும்போது அவர்கள் அதன் விளைவை அறிந்துகொள்வார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
فِی الْحَمِیْمِ ۙ۬— ثُمَّ فِی النَّارِ یُسْجَرُوْنَ ۟ۚ
40.72. கடுமையாக கொதிக்கின்ற நீரில் அவர்களை இழுத்துவருவார்கள். பின்னர் நரகத்தில் எரிக்கப்படுவார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
ثُمَّ قِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَ ۟ۙ
40.73. பின்னர் அவர்களைப் பழிக்கும் விதமாக அவர்களிடம் கேட்கப்படும்: “நீங்கள் இறைவனாக நினைத்து வணங்கி இணைவைத்துக் கொண்டிருந்த கடவுள்கள் எங்கே?” என்று.
ዓረብኛ ተፍሲሮች:
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَیْـًٔا ؕ— كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ الْكٰفِرِیْنَ ۟
40.74. அல்லாஹ்வை விடுத்து பயனளிக்கவோ, தீங்கிளைக்கவோ முடியாத உங்களின் சிலைகள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் மறைந்துவிட்டன. நாங்கள் அவற்றைக் காணவில்லை. மாறாக நாங்கள் உலகில் வணக்கத்திற்குத் தகுதியான எதையும் வணங்கிக் கொண்டிருக்கவில்லை. இவர்களை வழிகெடுத்ததைப் போன்றே அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நிராகரிப்பாளர்களை சத்தியத்தை விட்டும் வழிகெடுக்கிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
ذٰلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُوْنَ ۟ۚ
40.75. அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர்களாக நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததனாலும் அந்தப் பெருமையில் வரம்பு மீறியதனாலாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
40.76. நரகத்தின் வாயில்களில் நிரந்தரமாக நுழைந்துவிடுங்கள். சத்தியத்தை விட்டும் கர்வம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ— فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟
40.77. -தூதரே!- உம் சமூகத்தினர் அளிக்கும் துன்பங்களையும் அவர்களின் பொய்ப்பிப்பையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவி செய்வதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகம் இல்லாத உண்மையானதாகும். நாம் அவர்களுக்கு எச்சரித்த வேதனைகளில் சிலவற்றை -பத்ர் போரில் நிகழ்ந்தது போன்று- உமக்குக் காட்டுவோம் அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிடுவோம். மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்கிடுவோம். அவர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்திடுவோம். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்துகிடப்பார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• التدرج في الخلق سُنَّة إلهية يتعلم منها الناس التدرج في حياتهم.
1. படிப்படியாக படைப்பது இறைவனின் நியதியாகும். அதிலிருந்து மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை படிப்படியாக செயல்படுத்தும் முறையைக் கற்றுக் கொள்கிறார்கள்.

• قبح الفرح بالباطل.
2. அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைவது மிகவும் மோசமானது.

• أهمية الصبر في حياة الناس، وبخاصة الدعاة منهم.
3. மனித வாழ்வில் பொறுமையின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அவர்களிலும் அழைப்பாளர்களுக்கு பொறுமை இன்றியமையாத ஒன்றாகும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ጋፊር
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት