Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ሷድ   አንቀፅ:
وَوَهَبْنَا لَهٗۤ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
38.43. நாம் அவரது பிரார்த்தனைக்கு விடையளித்து அவருக்கு ஏற்பட்ட தீங்கினைப் போக்கினோம். அவருக்கு அவரது குடும்பத்தை மீண்டும் வழங்கினோம். அதுபோன்ற இன்னும் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் வழங்கினோம். இது அவர் மீது நாம் கருணை புரிவதற்காகவும், அவரது பொறுமைக்குக் கூலியாகவும், பொறுமையின் முடிவில் விடிவும் கூலியும் உண்டு என்பதை நன்கு அறிவுடையோர் புரிந்துகொள்வதற்காகவுமே இவ்வாறு செய்தோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَخُذْ بِیَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ ؕ— اِنَّا وَجَدْنٰهُ صَابِرًا ؕ— نِّعْمَ الْعَبْدُ ؕ— اِنَّهٗۤ اَوَّابٌ ۟
38.44. அய்யூப் தம் மனைவியின் மீது கோபம் கொண்டபோது அவளை நூறு கசையடி அடிப்பதாக சத்தியம் செய்தார். நாம் அவரிடம் கூறினோம்: -“அய்யூபே- நீர் உம் சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒரு பிடி புல்லை எடுத்து அவளை அடிப்பீராக. நீர் செய்த சத்தியத்தை முறித்து விடாதீர். அவர் ஒரு பிடி புல்லை எடுத்து தம் மனைவியை அடித்தார். நிச்சயமாக நாம் அவருக்கு வழங்கிய சோதனையில் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் திட்டமாக அல்லாஹ்வின்பால் அதிகமாக திரும்பக்கூடியவராகவும் இருந்தார்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ اُولِی الْاَیْدِیْ وَالْاَبْصَارِ ۟
38.45. -தூதரே!- நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட நம் அடியார்கள் மற்றும் நாம் அனுப்பிய தூதர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக. அவர்கள் அல்லாஹ்வை வழிபடுவதில், அவனுடைய திருப்தியைத் தேடுவதில் பலம்மிக்கவர்களாகவும் சத்தியத்தில் உண்மையாகவும் அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
اِنَّاۤ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَی الدَّارِ ۟ۚ
38.46. நிச்சயமாக நாம் அவர்களுக்கு தனித்துவமான அருட்கொடைகளை வழங்கினோம். அதுதான் மறுமையின் நினைவூட்டலைக் கொண்டு அவர்களின் உள்ளங்களை வளப்படுத்துவதும், நற்செயல்களில் ஈடுபட்டு மறுமைக்காக தயாராவதும், அதற்காக நற்காரியங்களில் ஈடுபடுமாறு மக்களை அழைப்பதுமாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَیْنَ الْاَخْیَارِ ۟ؕ
38.47. நிச்சயமாக அவர்கள் நம்மிடத்தில், நம்மை வணங்கி வழிபடுவதற்கும், நம் தூதைச் சுமந்து, மக்களிடம் அதனை எடுத்துரைப்பதற்காக நாம் தேர்ந்தெடுத்த அடியார்களில் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاذْكُرْ اِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَذَا الْكِفْلِ ؕ— وَكُلٌّ مِّنَ الْاَخْیَارِ ۟ؕ
38.48. -நபியே!- இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம், அல்யஸவு, துல்கிஃப்லு ஆகியோரையும் நினைவு கூர்வீராக. நல்ல முறையில் அவர்களைப் புகழ்வீராக. அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள். இவர்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே.
ዓረብኛ ተፍሲሮች:
هٰذَا ذِكْرٌ ؕ— وَاِنَّ لِلْمُتَّقِیْنَ لَحُسْنَ مَاٰبٍ ۟ۙ
38.49. இது குர்ஆனில் இவர்களின் அழகிய புகழை குறிப்பிடுவதாகும். நிச்சயமாக அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் அழகிய திரும்புமிடம் இருக்கின்றது.
ዓረብኛ ተፍሲሮች:
جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ ۟ۚ
38.50. அழகிய இந்த திரும்புமிடம் அது நிலையான சுவனங்களாகும். அவற்றில் மறுமை நாளில் அவர்கள் நுழைவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக அவற்றின் கதவுகள் அவர்களுக்காக திறக்கப்படும்.
ዓረብኛ ተፍሲሮች:
مُتَّكِـِٕیْنَ فِیْهَا یَدْعُوْنَ فِیْهَا بِفَاكِهَةٍ كَثِیْرَةٍ وَّشَرَابٍ ۟
38.51. அவர்களுக்கென்று அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். அங்குள்ள அவர்களின் பணியாளர்களிடம் அவர்களுக்கென்று தயார் செய்யப்பட அவர்கள் விரும்பும் பல வகையான பழங்களையும் மதுபானம் மற்றும் இன்னோரன்ன பானங்களையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ ۟
38.52. அவர்களிடத்தில் தங்கள் கணவர்களை தவிர ஏனையவர்களை ஏறெடுத்துப் பார்க்காத சம வயதுடைய மங்கையர்கள் இருப்பார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِیَوْمِ الْحِسَابِ ۟
38.53. -இறையச்சமுடையவர்களே!- இதுதான் உலகில் நீங்கள் செய்துகொண்டிருந்த நற்செயல்களுக்கு மறுமை நாளில் வழங்கப்படுவதாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அழகிய கூலியாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّفَادٍ ۟ۚۖ
38.54. நிச்சயமாக நாம் உங்களுக்குக் குறிப்பிட்ட இந்த கூலி மறுமை நாளில் இறையச்சமுடையோருக்கு வழங்கும் கொடையாகும். அது என்றும் துண்டிக்கப்படாத, முடிவடையாத நிரந்தரமான கொடையாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
هٰذَا ؕ— وَاِنَّ لِلطّٰغِیْنَ لَشَرَّ مَاٰبٍ ۟ۙ
38.55. நாம் குறிப்பிட்ட இதுதான் இறையச்சமுடையோருக்கான கூலியாகும். நிச்சயமாக நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கு இறையச்சமுடையோருக்கு கிடைக்கும் கூலியை விட மாற்றமான கூலி வழங்கப்படும். அவர்களுக்கு மறுமை நாளில் மோசமான திரும்புமிடம்தான் உண்டு.
ዓረብኛ ተፍሲሮች:
جَهَنَّمَ ۚ— یَصْلَوْنَهَا ۚ— فَبِئْسَ الْمِهَادُ ۟
38.56. அந்தக் கூலி அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் நரகமாகும். அதன் வெப்பத்தை, தீச்சுவாலையை அவர்கள் அனுபவிப்பார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு படுக்கை விரிப்பு அளிக்கப்படும். அது அவர்களின் படுக்கை விரிப்புகளில் மிகவும் மோசமான படுக்கை விரிப்பாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
هٰذَا ۙ— فَلْیَذُوْقُوْهُ حَمِیْمٌ وَّغَسَّاقٌ ۟ۙ
38.57. இந்த வேதனை நன்கு கொதித்த நீரும் அதில் வேதனைக்குள்ளாக்கப்படும் நரகவாசிகளின் உடல்களிலிருந்து வழியும் சீழுமாகும். அவர்கள் அதனை அருந்தட்டும். அது தாகம் தீர்க்காத அவர்களது பானமாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖۤ اَزْوَاجٌ ۟ؕ
38.58. அவர்களுக்கு இந்த வகையான இன்னுமொரு வேதனையும் உண்டு. அவர்களுக்கு இன்னும் பல வகையான வேதனைகளும் உண்டு. மறுமையில் அவற்றினால் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ ۚ— لَا مَرْحَبًا بِهِمْ ؕ— اِنَّهُمْ صَالُوا النَّارِ ۟
38.59. நரகவாசிகள் நரகில் நுழைந்தவுடன், சண்டையில் ஈடுபடுவோருக்கிடையே நிகழும் ஏச்சுப் பேச்சுக்கள் அவர்களிடையே நிகழும். அவர்களில் சிலர் சிலரை விட்டுவிட்டு நீங்கிவிடுவார்கள். அவர்களில் சிலர் கூறுவார்கள்: “இவர்கள் உங்களுடன் நரகத்தில் நுழையும் கூட்டத்தினராவர்.” அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “அவர்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. நாம் அனுபவிக்கும் நரக வேதனையை அவர்களும் அனுபவிக்கப் போகிறார்கள்.”
ዓረብኛ ተፍሲሮች:
قَالُوْا بَلْ اَنْتُمْ ۫— لَا مَرْحَبًا بِكُمْ ؕ— اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَا ۚ— فَبِئْسَ الْقَرَارُ ۟
38.60. தலைவர்களைப் பின்பற்றிய ஒரு கூட்டத்தினர் பின்பற்றப்பட்ட அந்த தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “- பின்பற்றப்பட்ட தலைவர்களே!- என்றாலும் உங்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. நீங்கள் எம்மை ஏமாற்றி, வழிகெடுத்ததனால் நாங்கள் அனுபவிக்கும் இந்த நோவினையான வேதனைக்கு நீங்கள்தான் காரணம். இது தங்குமிடம் மோசமான தங்குமிடமாகும். நரக நெருப்பே அனைவருக்குமான தங்குமிடமாகும்.”
ዓረብኛ ተፍሲሮች:
قَالُوْا رَبَّنَا مَنْ قَدَّمَ لَنَا هٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِی النَّارِ ۟
38.61. பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நேர்வழி எங்களிடம் வந்த பின்னரும் அதனைவிட்டு எங்களைக் வழிகெடுத்தவர்களை நரகத்தில் வேதனையில் பலமடங்கு வேதனைக்கு உள்ளாக்குவாயாக.”
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• من صبر على الضر فالله تعالى يثيبه ثوابًا عاجلًا وآجلًا، ويستجيب دعاءه إذا دعاه.
1. தனக்கு ஏற்பட்ட துன்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்பவருக்கு அல்லாஹ் விரைவாகவும் தாமதமாகவும் கூலி அளிப்பான். அவர் பிரார்த்தனை செய்தால் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்.

• في الآيات دليل على أن للزوج أن يضرب امرأته تأديبًا ضربًا غير مبرح؛ فأيوب عليه السلام حلف على ضرب امرأته ففعل.
2. நிச்சயமாக கணவன் மனைவியைத் திருத்தும் நோக்கில் அடிக்கும் போது காயமேற்படாமல் அடிக்கலாம் என்பதற்கு இவ்வசனங்களில் ஆதாரம் உள்ளது. எனவேதான் அய்யூப் (அலை) அவர்கள் தனது மனைவியை அடிப்பதாக சத்தியம் செய்து அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ሷድ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት