Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ኣሊ-ኢምራን   አንቀፅ:
وَیُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِیْنَ ۟
3.46. பேசும் பருவத்தை அடையாத சிறுகுழந்தையாக இருக்கும்போதே அவர் மக்களிடம் பேசுவார். முழுமையான பலத்தையும் ஆண்மையையும் பெற்று அவர் பெரியவரான பிறகும் மக்களிடம் பேசுவார். அவர்களின் உலக மற்றும் மார்க்க விஷயங்களில் நன்மையானவற்றை அவர்களுக்குக் கூறுவார். சொல்லிலும் செயலிலும் நல்லவராகவும் இருப்பார்.
ዓረብኛ ተፍሲሮች:
قَالَتْ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ وَلَدٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ ؕ— قَالَ كَذٰلِكِ اللّٰهُ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ— اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
3.47. கணவனின்றி தனக்கு குழந்தை பிறப்பதை ஆச்சர்யமாகக் கருதிய மர்யம் கேட்டார்: “எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? என்னை எந்த ஆணும் முறையாகவோ தவறாகவோ நெருங்கியதில்லையே?” வானவர் கூறினார்: “தந்தையின்றி உங்களுக்கு குழந்தையை அவன் தந்தது போன்றே தான் ஏற்படுத்திய வழக்கத்திற்கு மாறாக தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகிவிடு’ என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். அவனை எதுவும் தடுக்க முடியாது.
ዓረብኛ ተፍሲሮች:
وَیُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۚ
3.48. அவன் அவருக்கு எழுத்தையும், சொல்லிலும் செயலிலும் நேர்த்தியையும் கற்றுக் கொடுப்பான். மூசா மீது இறக்கிய தவ்ராத்தையும், அவர்மீது இறக்கப்போகின்ற இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَرَسُوْلًا اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— اَنِّیْ قَدْ جِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ— اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًا بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْیِ الْمَوْتٰی بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙ— فِیْ بُیُوْتِكُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
3.49. அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு தூதராகவும் ஆக்குவான். அவர் அவர்களிடம் கூறுவார்: “நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். என் தூதுத்துவத்தை உண்மை என நிருபிக்கக்கூடிய சான்றுகளையும் நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். அவை, நான் களிமண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப் போல் உண்டாக்குவேன். நான் அதில் ஊதியதும் அது அல்லாஹ்வின் அனுமதியால் உயிருள்ள பறவையாகிவிடும். பிறவிக்குருடனைக் குணமாக்குவேன், அவன் பார்வைபெற்றுவிடுவான். தொழுநோயாளியையும் நான் குணப்படுத்துவேன். அவரது தோல் ஆரோக்கியம் பெற்றுவிடும். மரணித்தவர்களை உயிர்த்தெழச் செய்வேன். இவையனைத்தும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டே நடக்கும். நீங்கள் உண்ணும் உணவையும், வீட்டில் மறைத்துவைத்த உணவுப்பொருளையும் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன். நான் குறிப்பிட்டவைகள் மனிதர்களால் செய்ய முடியாத பெரும் காரியங்களாகும். நீங்கள் ஈமானை விரும்பக்கூடியவர்களாக இருந்தால், சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்களாக இருந்தால் இவையனைத்தும் நான் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கான தெளிவான சான்றுகளாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
وَمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِیْ حُرِّمَ عَلَیْكُمْ وَجِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۫— فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
3.50. அதேபோன்று எனக்கு முன்னால் இறங்கிய தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியவனாகவும், உங்கள் சிரமத்தை நீக்குவதற்காக உங்கள் மீது இதற்கு முன் தடைசெய்யப்பட்ட சிலவற்றை ஆகுமாக்கி வைப்பதற்காகவும் நான் வந்துள்ளேன். நான் கூறும் விஷயத்திற்கு தெளிவான சான்றுகளைக் கொண்டு நான் உங்களிடம் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நான் உங்களை அழைக்கும் விஷயத்தில் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
اِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
3.51. இது ஏனெனில் அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். அவன்தான் கீழ்ப்படிவதற்கும் அஞ்சுவதற்கும் தகுதியானவன். எனவே அவனை மட்டுமே வணங்குங்கள். அல்லாஹ்வை வணங்குதல்,அவனை அஞ்சுதல் ஆகிய நான் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளே எவ்வித கோணலுமற்ற நேரான பாதையாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ— قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ— اٰمَنَّا بِاللّٰهِ ۚ— وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
3.52. அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருப்பதை ஈசா கண்டபோது இஸ்ராயீலின் மக்களிடம் கூறினார்: அல்லாஹ்வின்பால் அழைப்பதற்கு எனக்கு உதவிசெய்பவர் யார்? அவரைப் பின்பற்றியவர்களில் தூய்மையானவர்கள் கூறினார்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவியாளர்களாக இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு உம்மை நாங்கள் பின்பற்றினோம். எனவே ஈசாவே! நாங்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• شرف الكتابة والخط وعلو منزلتهما، حيث بدأ الله تعالى بذكرهما قبل غيرهما.
1. எழுத்தறிவு சிறப்புக்குரியதாகும். அதனால்தான் அல்லாஹ் ஏனைய பாக்கியங்களைக் குறிப்பிட முன் அதனைக் குறிப்பிட்டுள்ளான்.

• من سنن الله تعالى أن يؤيد رسله بالآيات الدالة على صدقهم، مما لا يقدر عليه البشر.
2. அல்லாஹ் தன் தூதர்களுக்கு, அவர்களின் தூதுத்துவத்தை உண்மை என அறிவிக்கக்கூடிய மனிதனால் நிகழ்த்த முடியாத அற்புதங்களை அளித்து உதவிசெய்வது அவனது வழிமுறையாகும்.

• جاء عيسى بالتخفيف على بني إسرائيل فيما شُدِّد عليهم في بعض شرائع التوراة، وفي هذا دلالة على وقوع النسخ بين الشرائع.
3. தவ்ராத்தின் சில சட்டதிட்டங்களில் இருந்த கடினத்தை பனூ இஸ்ரவேலர்களின் மீது இலகுபடுத்தும் சட்டங்களை ஈஸா (அலை) அவர்கள் கொண்டுவந்தார்கள். மார்க்கங்களுக்கிடையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ኣሊ-ኢምራን
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት