Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አን ነምል   አንቀፅ:
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟
27.45. நாம் ஸமூத் சமூகத்தின்பால் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். (அவர் அவர்களிடம்), “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள்” (என்று கூறினார்). ஆனால் அவருடைய அழைப்பிற்குப்பின்னர் அவர்களோ இரு பிரிவினராகி விட்டார்கள். ஒரு பிரிவினர் நம்பிக்கையாளர்கள். மற்றொரு பிரிவினர் நிராகரிப்பாளர்கள். இரு பிரிவினரில் யார் சத்தியத்தில் இருக்கிறார்கள் என்று அவர்கள் தர்க்கிக்கலானார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
قَالَ یٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۚ— لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
27.46. ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அருளுக்கு முன்னர் ஏன் வேதனையை வேண்டுகிறீர்கள்? அல்லாஹ் உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு நீங்கள் செய்த பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக்கோர வேண்டாமா?”
ዓረብኛ ተፍሲሮች:
قَالُوا اطَّیَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ ؕ— قَالَ طٰٓىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ ۟
27.47. அவருடைய சமூகத்தார் அவரிடம் சத்தியத்தை விட்டுவிட்டு பிடிவாதத்துடன் கூறினார்கள்: “உம்மையும் உம்முடன் இருக்கும் நம்பிக்கையாளர்களையும் நாங்கள் துர்ச்சகுனமாகக் கருதுகிறோம்.” ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “உங்களுக்குத் நேரும் தீங்குகளுக்காக நீங்கள் விரட்டும் பறவை பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. மாறாக உங்களுக்கு வழங்கப்படும் நன்மை மற்றும் உங்களுக்கு நேரும் தீமையைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَكَانَ فِی الْمَدِیْنَةِ تِسْعَةُ رَهْطٍ یُّفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
27.48. ஹிஜ்ர் என்ற அந்த நகரத்திலே ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் பூமியில் குழப்பம் செய்து கொண்டிருந்தார்கள். நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து அவர்கள் சீர்திருத்தம் செய்யவில்லை.
ዓረብኛ ተፍሲሮች:
قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
27.49. அவர்களில் சிலர் சிலரிடம் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கொள்ளுங்கள். நாம் இரவில் சென்று அவரையும் அவருடன் அவருடை குடும்பத்தையும் கொன்றுவிடலாம். பின்னர் அவருடைய பொறுப்பாளரிடம் சென்று, “நாங்கள் ஸாலிஹையும் அவரைப் பின்பற்றியவர்களையும் கொல்லவில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்” என்று கூறுவோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
27.50. அவர்கள் ஸாலிஹையும் அவரைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களையும் கொலை செய்வதற்கு இரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் காப்பாற்றி அவரின் சமூகத்தின் நிராகரிப்பாளர்களை அழித்துவிட நாம் திட்டம் தீட்டினோம். அவர்கள் இதனைக்குறித்து அறியாமல் இருந்தார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ ۙ— اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِیْنَ ۟
27.51. -தூதரே!- அவர்களின் சூழ்ச்சி என்ன விளைவை ஏற்படுத்தியது? என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக நாம் அவர்கள் அனைவரையும் எங்களின் வேதனையைக்கொண்டு அடியோடு அழித்துவிட்டோம்.
ዓረብኛ ተፍሲሮች:
فَتِلْكَ بُیُوْتُهُمْ خَاوِیَةً بِمَا ظَلَمُوْا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
27.52. இதோ அவர்களின் வீடுகள். அவர்கள் செய்த அக்கிரமத்தினால் ஆளரவமின்றி அடியோடு வீழ்ந்து கிடக்கின்றன. நிச்சயமாக அவர்களின் அநீதியினால் அவர்களுக்கு ஏற்பட்ட வேதனையில் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்கள்தாம் சான்றுகளைக்கொண்டு படிப்பினை பெறுவார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاَنْجَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟
27.53. ஸாலிஹின் சமூகத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றினோம். அவர்கள் அவனுடைய கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வை அஞ்சக்கூடிய மக்களாக இருந்தார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
27.54. -தூதரே!- லூத்தையும் நினைவுகூர்வீராக. அவர் தம் சமூகத்தினரைக் கண்டித்தவராகக் கூறிய பொழுது: “நீங்கள் உங்களின் அவைகளிலேயே வெளிப்படையாக ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டே மோசமான காரியத்தில் -ஓரினச் சேர்க்கையில்- ஈடுபடுகிறீர்களே!?
ዓረብኛ ተፍሲሮች:
اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ— بَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
27.55. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடமா உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்கிறீர்கள்? ஒழுக்கத்தையோ, குழந்தையையோ நீங்கள் விரும்பவில்லையா?மிருக இச்சையைத் தணித்துக் கொள்வதையே விரும்புகிறீர்கள். மாறாக நீங்கள் உங்கள் மீது கடமையான ஈமானையும் தூய்மையையும் பாவத்தை விட்டு விலகியிருத்தலையும் அறியாத கூட்டமாகவே உள்ளீர்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الاستغفار من المعاصي سبب لرحمة الله.
1. பாவங்களிலிருந்து மன்னிப்புக் கோருவது அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகிறது.

• التشاؤم بالأشخاص والأشياء ليس من صفات المؤمنين.
2. மனிதர்களையும் பொருட்களையும் துர்ச்சகுனமாகக் கருதுவது நம்பிக்கையாளர்களின் பண்பு அல்ல.

• عاقبة التمالؤ على الشر والمكر بأهل الحق سيئة.
3. சத்தியவாதிகளுக்கு தீங்கு மற்றும் சூழ்ச்சி செய்ய திட்டமிட்டுவதன் விளைவு மோசமானதாகும்.

• إعلان المنكر أقبح من الاستتار به.
4. கெட்டவற்றை மறைப்பதைவிட பகிரங்கப்படுத்துவது மோசமானதாகும்.

• الإنكار على أهل الفسوق والفجور واجب.
5.பாவிகளைத் தடுப்பது கடமையாகும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አን ነምል
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት