Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም አንቀፅ: (3) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۙ
2.3. அவர்கள் மறுமைநாள் போன்ற தங்களின் புலனுணர்வுகளால் உணரமுடியாத, தங்களை விட்டும் மறைவாக இருக்கின்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மறைவானவற்றை நம்புகிறார்கள். தொழுகையை, அல்லாஹ் ஏற்படுத்திய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் அதன் சுன்னத்துகளோடு நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவனது திருப்தியை நாடி, கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ கடமையாக்கப்படாத உபரியான தர்மமாகவோ செலவு செய்கிறார்கள். தூதரே! அவர்கள் உங்கள்மீது இறக்கப்பட்ட வஹ்யியையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் பாகுபாடின்றி நம்புகிறார்கள். மறுமையின் மீதும் அங்கு வழங்கப்படும் கூலி மற்றும் தண்டனையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الثقة المطلقة في نفي الرَّيب دليل على أنه من عند الله؛ إذ لا يمكن لمخلوق أن يدعي ذلك في كلامه.
1. முழு நம்பிக்கையுடன் குர்ஆனில் சந்தேகமில்லை என மறுத்திருப்பது, அது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமே என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், எந்தவொரு படைப்பினமும் தனது வார்த்தையில் இந்தளவு நம்பகத்தன்மையை வாதிட முடியாது.

• لا ينتفع بما في القرآن الكريم من الهدايات العظيمة إلا المتقون لله تعالى المعظِّمون له.
2. அல்லாஹ்வுக்குப் பயந்து அவனைக் கண்ணியப்படுத்துவோர் மட்டுமே குர்ஆன் கூறக்கூடிய மகத்தான போதனைகளிலிருந்து பலனடைவார்கள்.

• من أعظم مراتب الإيمانِ الإيمانُ بالغيب؛ لأنه يتضمن التسليم لله تعالى في كل ما تفرد بعلمه من الغيب، ولرسوله بما أخبر عنه سبحانه.
3. அல்லாஹ் அறிவித்த மறைவான விஷயங்களை நம்புவது ஈமானின் மிக உயர்ந்த படித்தரங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான விஷயங்கள் அனைத்திலும் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அத்துடன், அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர் அறிவித்த மறைவான விஷயங்களில் அவருக்குக் கட்டுப்படுவதாகவும் அமையும்.

• كثيرًا ما يقرن الله تعالى بين الصلاة والزكاة؛ لأنَّ الصلاة إخلاص للمعبود، والزكاة إحسان للعبيد، وهما عنوان السعادة والنجاة.
4. பெரும்பாலும் அல்லாஹ் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்தே கூறுகின்றான். ஏனெனில், தொழுகை வணக்கத்திற்குரியவனுக்கு மனத்தூய்மையுடன் நடப்பதாகும்; ஸகாத் அடியார்களுக்கு உபகாரம் செய்வதாகும். இந்த இரண்டுமே ஈடேற்றம் மற்றும் பாதுகாப்பின் காரணிகளாகும்.

• الإيمان بالله تعالى وعمل الصالحات يورثان الهداية والتوفيق في الدنيا، والفوز والفلاح في الأُخرى.
5. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்கள் புரிவதும் இவ்வுலகில் நேர்வழியையும் பாக்கியத்தையும் வழங்குகின்றன. அத்துடன், மறுமையில் ஈடேற்றத்தையும் வெற்றியையும் பெற்றுத் தருகின்றன.

 
የመልዕክት ትርጉም አንቀፅ: (3) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት