Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም አንቀፅ: (274) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ؔ
2.274. இரவிலும் பகலிலும், வெளிப்படையாகவும் மறைவாகவும் வெளிப்பகட்டிற்காக அன்றி அல்லாஹ்வின் திருப்திக்காக செலவு செய்பவர்களுக்கு மறுமைநாளில் அவர்களின் இறைவனிடம் நன்மை இருக்கின்றது. எதிர்காலத்தில் நிகழக்கூடியதை எண்ணி அவர்கள் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளும் கிருபையும் ஆகும்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• إذا أخلص المؤمن في نفقاته وصدقاته فلا حرج عليه في إظهارها وإخفائها بحسب المصلحة، وإن كان الإخفاء أعظم أجرًا وثوابًا لأنها أقرب للإخلاص.
1. நம்பிக்கையாளன் தான் செய்யும் தர்மங்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே ஆக்கிக் கொண்டால் பொதுநலவைக்கருத்திற்கொண்டு அவற்றை வெளிப்படையாகச் செய்வதிலோ மறைமுகமாகச் செய்வதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆயினும் தர்மங்களை மறைவாகச் செய்வது அதிக நன்மையையும் கூலியையும் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் அதுவே மனத்தூய்மைக்கு நெருக்கமானதாகும்.

• دعوة المؤمنين إلى الالتفات والعناية بالمحتاجين الذين تمنعهم العفة من إظهار حالهم وسؤال الناس.
2. தன்மானத்தால் மக்களிடம் கையேந்தாமல் தவிர்ந்திருக்கும் ஏழைகளின்பக்கம் கவனம் செலுத்தும்படி நம்பிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

• مشروعية الإنفاق في سبيل الله تعالى في كل وقت وحين، وعظم ثوابها، حيث وعد تعالى عليها بعظيم الأجر في الدنيا والآخرة.
3. அனைத்து நிலமைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப்பெரும் நன்மைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

 
የመልዕክት ትርጉም አንቀፅ: (274) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት