Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም አንቀፅ: (197) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ— فَمَنْ فَرَضَ فِیْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ وَلَا جِدَالَ فِی الْحَجِّ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ یَّعْلَمْهُ اللّٰهُ ؔؕ— وَتَزَوَّدُوْا فَاِنَّ خَیْرَ الزَّادِ التَّقْوٰی ؗ— وَاتَّقُوْنِ یٰۤاُولِی الْاَلْبَابِ ۟
2.197. ஹஜ்ஜுடைய காலம் குறிப்பிட்ட மாதங்களாகும். அது ஷவ்வால் மாதத்தில் தொடங்கி துல்ஹஜ் பத்தில் நிறைவடைகிறது. யார் இந்த மாதங்களில் ஹஜ் செய்வதை தன்மீது கடமையாக்கி, நிய்யத் வைத்து அதில் நுழைந்துவிட்டாரோ அவர்மீது உடலுறவு கொள்வதோ அதற்கு முன்னோட்டமான செயல்களில் ஈடுபடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோன்று அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் பாவமான காரியங்களில் ஈடுபடுவதும் தடையாகும். ஏனெனில் இது புனிதமான காலமும் புனிதமான இடமுமாகும். கோபத்தையும் வெறுப்பையும் உண்டுபண்ணும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் செய்யக்கூடிய நற்செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். ஹஜ்ஜின் காலங்களில் உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுங்கள். உங்கள் அனைத்துக் காரியங்களிலும் நீங்கள் செய்யும் ஏற்பாடுகளில் மிகச் சிறந்தது "தக்வா" என்னும் இறையச்சம்தான். அறிவுடையோரே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி, நான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி என்னையே அஞ்சிக் கொள்ளுங்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• يجب على المؤمن التزود في سفر الدنيا وسفر الآخرة، ولذلك ذكر الله أن خير الزاد هو التقوى.
1.ஒரு முஃமின் உலகப்பயணத்திலும் மறுமைக்கான பயணத்திலும் தயாரிப்புடன் செல்வது கட்டாயமாகும். எனவே தான் தயாரிப்பில் சிறந்தது இறையச்சமே எனக் குறிப்பிடுகிறான்.

• مشروعية الإكثار من ذكر الله تعالى عند إتمام نسك الحج.
2. ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவுபடுத்தும் தருணத்தில் அல்லாஹ்வை மேலதிகமாக நினைவுகூர வேண்டும்.

• اختلاف مقاصد الناس؛ فمنهم من جعل همّه الدنيا، فلا يسأل ربه غيرها، ومنهم من يسأله خير الدنيا والآخرة، وهذا هو الموفَّق.
3. மனிதர்களது நோக்கங்கள் வித்தியாசமானவை. அவர்களில் சிலர் உலகைத் தனது இலக்காகக் கொண்டு தனது இறைவனிடம் அதனை மாத்திரம் கேட்கின்றனர். அவர்களில் இம்மை மறுமையின் நலவுகளைக் கேட்போரும் உள்ளனர். அவர்தான் பாக்கியம் பெற்றவன்.

 
የመልዕክት ትርጉም አንቀፅ: (197) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት