Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም አንቀፅ: (189) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ؕ— قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ— وَلَیْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُیُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰی ۚ— وَاْتُوا الْبُیُوْتَ مِنْ اَبْوَابِهَا ۪— وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
2.189. தூதரே! பிறை உருவாகுவதைப் பற்றியும் அதனுடைய நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக, :அது மக்களுக்கு காலங்காட்டியாகும். அதன்மூலம் அவர்கள் நோன்பு, ஹஜ் ஆகியவற்றின் மாதங்கள், ஸகாத்தின் வருடப் பூர்த்தி போன்ற தமது வணக்க வழிபாடுகளின் நேரங்களை அறிந்துகொள்கிறார்கள். மேலும் இழப்பீடு, கடன் தவணைகளை தீர்மானிப்பது போன்ற கொடுக்கல்வாங்கல்களின் நேரங்களையும் அதன் மூலம் அறிந்துகொள்கின்றனர். நீங்கள் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலகட்டத்தில் செய்துவந்ததுபோன்று ஹஜ் அல்லது உம்ரா செய்ய இஹ்ராமில் நுழைந்த பின் வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக நுழைவதில் நன்மை இல்லை. மாறாக உள்ரங்கத்திலும் வெளிரங்கத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்வதே உண்மையான நற்செயலாகும். வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே நுழைவதே உங்களுக்கு இலகுவானது. அல்லாஹ் உங்கள்மீது சிரமமான விஷயங்களை விதிக்கவில்லை. நற்செயல்களால் உங்களுக்கும் அல்லாஹ்வின் வேதனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் விரும்பும் விஷயங்களைப் பெற்று, அஞ்சும் விஷயங்களிலிருந்து தப்பித்து வெற்றியடையலாம்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• مشروعية الاعتكاف، وهو لزوم المسجد للعبادة؛ ولهذا يُنهى عن كل ما يعارض مقصود الاعتكاف، ومنه مباشرة المرأة.
1. இஃதிகாஃப் ஒரு வணக்கமாகும். வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாயிலில் தங்குவதற்கு இஃதிகாப் எனப்படும். எனவேதான் அதன் நோக்கத்திற்கு மாறான மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற அனைத்துவிஷயங்களும் இஃதிகாஃபில் தடுக்கப்பட்டுள்ளன.

• النهي عن أكل أموال الناس بالباطل، وتحريم كل الوسائل والأساليب التي تقود لذلك، ومنها الرشوة.
2. மனிதர்களது சொத்துக்களை அநியாயமான முறையில் உண்ணுவது தடுக்கப்பட்டதாகும். எனவேதான் இலஞ்சம் போன்ற அதற்கு இட்டுச் செல்லும் அனைத்து வழிகளும் தடைசெய்யப்பட்டுள்ளது.

• تحريم الاعتداء والنهي عنه؛ لأن هذا الدين قائم على العدل والإحسان.
3. வரம்புமீறுவது வன்மையாகத் தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் இந்த மார்க்கம் நீதி, உபகாரம் புரிதல் ஆகியவற்றின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

 
የመልዕክት ትርጉም አንቀፅ: (189) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት