Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል ኢስራዕ   አንቀፅ:
عَسٰی رَبُّكُمْ اَنْ یَّرْحَمَكُمْ ۚ— وَاِنْ عُدْتُّمْ عُدْنَا ۘ— وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِیْنَ حَصِیْرًا ۟
17.8. -இஸ்ராயீலின் மக்களே!- இவ்வளவு கடுமையான தண்டனைக்குப் பிறகும் நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பி உங்களின் செயல்களைச் சீர்படுத்திக் கொண்டால் அவன் உங்கள் மீது கருணை காட்டலாம். நீங்கள் மூன்றாவது முறையும் அல்லது அதற்குப் பிறகும் குழப்பத்தில் ஈடுபட்டால் நாம் மீண்டும் உங்களைத் தண்டிப்போம். நாம் அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக (தங்கும் இடமாக) ஆக்கியுள்ளோம். அவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது.
ዓረብኛ ተፍሲሮች:
اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَهْدِیْ لِلَّتِیْ هِیَ اَقْوَمُ وَیُبَشِّرُ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِیْرًا ۟ۙ
17.9. நிச்சயமாக முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்தக் குர்ஆன் இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டுகிறது. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களுக்கு அவர்கள் சந்தோசப்படுமளவு அல்லாஹ்விடம் நிச்சயமாக மகத்தான கூலி உண்டு என்றும் கூறுகிறது.
ዓረብኛ ተፍሲሮች:
وَّاَنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠
17.10. நிச்சயமாக மறுமையில் நாம் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்ற அவர்களுக்கு கவலை ஏற்படுத்தும் செய்தியையும் மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களுக்கு அது கூறுகிறது.
ዓረብኛ ተፍሲሮች:
وَیَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَیْرِ ؕ— وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا ۟
17.11. மனிதன் நன்மையைத் தேடி பிரார்த்தனை செய்வதுபோல அறியாமையினால் கோபத்தில் தனக்கெதிராக, தன் பிள்ளைகளுக்கும் செல்வங்களுக்கும் எதிராக கெடுதியைக்கொண்டு பிரார்த்தனை செய்கிறான். நாம் அவனுடைய பிரார்த்தனைக்கு பதிலளித்தால் அவன் அழிந்து விடுவான்; அவனுடைய பிள்ளைகளும் செல்வங்களும் அழிந்து விடும். மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். நிச்சயமாக தனக்கு தீங்கு தரக்கூடியதற்கு அவசரப்படுகிறான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَجَعَلْنَا الَّیْلَ وَالنَّهَارَ اٰیَتَیْنِ فَمَحَوْنَاۤ اٰیَةَ الَّیْلِ وَجَعَلْنَاۤ اٰیَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ— وَكُلَّ شَیْءٍ فَصَّلْنٰهُ تَفْصِیْلًا ۟
17.12. நாம் இரவையும் பகலையும், அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய இரு சான்றுகளாகப் படைத்துள்ளோம். ஏனெனில் அவற்றில் நீளமும் சுருக்கமும் வெப்பமும் குளிரும் மாறிமாறி வருகின்றன. மக்கள் ஓய்வெடுப்பதற்காகவும் உறங்குவதற்காகவும் இரவை இருட்டாகவும் அவர்கள் பார்ப்பதற்காக, தனது அருளினால் உங்களுக்காக நிர்ணயம் செய்த வாழ்வாதாரத்தை நீங்கள் தேடிப்பெற்றுக்கொள்வதற்காக பகலைப் பிரகாசமானதாகவும் அமைத்துள்ளோம். இன்னும் அந்த இரண்டும் மாறிமாறி வருவதைக்கொண்டு நீங்கள் வருடங்களின் எண்ணிக்கையையும் உங்களுக்கு தேவையான மாதங்கள், நாட்கள் மற்றும் நேரங்களை கணக்கிட்டு அறிந்துகொள்வதற்காகத்தான். விடயங்களைப் பிரிந்து விளங்கவும் அசத்தியவாதி யார் சத்தியவாதி யார் என்பது தெளிவாகவும் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரித்து விட்டோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰٓىِٕرَهٗ فِیْ عُنُقِهٖ ؕ— وَنُخْرِجُ لَهٗ یَوْمَ الْقِیٰمَةِ كِتٰبًا یَّلْقٰىهُ مَنْشُوْرًا ۟
17.13. ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்களை கழுத்தில் மாலை ஒட்டியிருப்பது போன்று அவனுடனேயே சேர்த்து வைத்துள்ளோம். அவனிடம் விசாரணை செய்யப்படும் வரை அது அவனை விட்டு பிரியாது. நாம் மறுமை நாளில் அவன் செய்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்ட ஒரு புத்தகத்தை அவனிடம் காட்டுவோம். அவன் தனக்கு முன்னால் அது விரிக்கப்பட்டிருப்பதைக் காண்பான்.
ዓረብኛ ተፍሲሮች:
اِقْرَاْ كِتٰبَكَ ؕ— كَفٰی بِنَفْسِكَ الْیَوْمَ عَلَیْكَ حَسِیْبًا ۟ؕ
17.14. நாம் அப்போது அவனுக்கு கூறுவோம்: -மனிதனே!- உன் புத்தகத்தைப் படித்துப் பார். உன் செயல்களைக் கணக்கிடும் பொறுப்பை நீயே ஏற்றுக்கொள். மறுமை நாளில் உன் செயல்களைக் கணக்கிடுவதற்கு நீயே போதுமானவன்.
ዓረብኛ ተፍሲሮች:
مَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ؕ— وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ— وَمَا كُنَّا مُعَذِّبِیْنَ حَتّٰی نَبْعَثَ رَسُوْلًا ۟
17.15. நம்பிக்கை கொள்ள நேர்வழி பெற்றவரது நேர்வழிக்கான கூலி அவருக்கே கிடைக்கும். வழிதவறியவரின் வழிகேட்டின் தண்டனையை அவரே பெறுவார். ஒருவரின் பாவங்களை மற்றவர் சுமக்க முடியாது. நாம் தூதர்களை அனுப்பி ஒரு சமூகத்தின் மீது ஆதாரத்தை நிலைநாட்டாதவரை அந்த மக்களைத் தண்டிக்க மாட்டோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْیَةً اَمَرْنَا مُتْرَفِیْهَا فَفَسَقُوْا فِیْهَا فَحَقَّ عَلَیْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِیْرًا ۟
17.16. நாம் ஒரு ஊரை அங்குள்ளவர்கள் செய்த அநியாயத்தினால் அழிக்க விரும்பினால் அருட்கொடைகள் யாரை கர்வத்தில் ஆழ்த்திவிட்டதோ அவர்களைக் கீழ்ப்படியுமாறு கட்டளையிடுவோம். அவர்கள் அவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் மாறாகச் செயற்படுவார்கள். அப்போது அவர்கள்மீது அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள் என்ற வாக்கு உறுதியாகிவிடும். எனவே நாம் அவர்களை அடியோடு அழித்து விடுவோம்.
ዓረብኛ ተፍሲሮች:
وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْ بَعْدِ نُوْحٍ ؕ— وَكَفٰی بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
17.17. நூஹுக்குப் பின் நாம் அழித்த ஆத், ஸமூத் போன்ற எத்தனையோ பொய்பித்த சமூகங்கள் உள்ளன! -தூதரே!- தன் அடியார்களின் பாவங்களை அறிவதற்கும் பார்ப்பதற்கும் உம் இறைவன் போதுமானவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• من اهتدى بهدي القرآن كان أكمل الناس وأقومهم وأهداهم في جميع أموره.
1. குர்ஆனின் வழிகாட்டுதலைக்கொண்டு நேர்வழிபெற்றவரே தம்முடைய எல்லா விவகாரங்களிலும் மனிதர்களில் முழுமையானவர், நேர்த்தியானவர், நேர்வழிபெற்றவர்.

• التحذير من الدعوة على النفس والأولاد بالشر.
2. மனிதன் தனக்கோ தன் குழந்தைகளுக்கோ தீங்கு ஏற்பட வேண்டும் என பிரார்த்தனை செய்வதை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

• اختلاف الليل والنهار بالزيادة والنقص وتعاقبهما، وضوء النهار وظلمة الليل، كل ذلك دليل على وحدانية الله ووجوده وكمال علمه وقدرته.
3. இரவு, பகல் கூடுதல் மற்றும் குறைவோடு மாறிமாறி, அடுத்தடுத்து வருவதும் பகலின் வெளிச்சமும் இரவின் இருட்டும், இவையனைத்தும் அல்லாஹ் இருக்கிறான், அவன் ஒருவன், அவனது அறிவும் ஆற்றலும் பரிபூரணமானது என அறிவிக்கும் சான்றுகளாகும்.

• تقرر الآيات مبدأ المسؤولية الشخصية، عدلًا من الله ورحمة بعباده.
4. தனிமனிதப் பொறுப்புணர்ச்சி என்ற அடிப்படையை மேற்கூறிய வசனங்கள் குறிப்பிடுகின்றன. இது தனது அடியார்களுக்கு அல்லாஹ் செலுத்தும் நீதியும் கருணையுமாகும்.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አል ኢስራዕ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት