Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም አንቀፅ: (110) ሱራ (ምዕራፍ): አን-ነሕል
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِیْنَ هَاجَرُوْا مِنْ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا ۙ— اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
16.110. -தூதரே!- இருந்தபோதிலும் உள்ளங்கள் ஈமானைக் கொண்டு திருப்தியடைந்த நிலையில், நிராகரிப்பின் வார்த்தையைக் கூறுமளவுக்கு மக்காவில் இணைவைப்பாளர்களால் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு அவர்களுடைய மார்க்கத்தை சோதித்துப் பார்த்தத பின்னர் மதீனாவை நோக்கி புலம்பெயர்ந்த பலவீனமான நம்பிக்கையாளர்களை நிச்சயமாக உம் இறைவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்யவும் நிராகரித்தோரின் வார்த்தை ஒழிந்து விடவும் போரிட்டார்கள். அதில் ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள். சோதிக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டதனால் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறிய அவர்களை நிச்சயமாக உம் இறைவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். ஏனெனில் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதனால்தான் நிராகரிப்பின் வார்த்தையைக் கூறினார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الترخيص للمُكرَه بالنطق بالكفر ظاهرًا مع اطمئنان القلب بالإيمان.
1. உள்ளம் ஈமானில் உறுதியுடன் இருக்கும் நிலையில் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டால் வெளிப்படையாக நிராகரிப்பின் வார்த்தையைக் கூறுவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

• المرتدون استوجبوا غضب الله وعذابه؛ لأنهم استحبوا الحياة الدنيا على الآخرة، وحرموا من هداية الله، وطبع الله على قلوبهم وسمعهم وأبصارهم، وجعلوا من الغافلين عما يراد بهم من العذاب الشديد يوم القيامة.
2. இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகிவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் மறுமையைவிட இவ்வுலகத்திற்கே முன்னுரிமை வழங்கினார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை இழந்துவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களிலும் செவிகளிலும் பார்வைகளிலும் முத்திரையிட்டு விட்டான். மறுமை நாளில் அவர்களுக்குக் காத்திருக்கும் கடுமையான வேதனையை மறந்தவர்களில் அவர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

• كَتَبَ الله المغفرة والرحمة للذين آمنوا، وهاجروا من بعد ما فتنوا، وصبروا على الجهاد.
3. நம்பிக்கை கொண்டு சோதிக்கப்பட்ட பின் புலம்பெயர்ந்து போரில் பொறுமையாக இருந்தோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், கருணையையும் எழுதியுள்ளான்.

 
የመልዕክት ትርጉም አንቀፅ: (110) ሱራ (ምዕራፍ): አን-ነሕል
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት