Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ዩሱፍ   አንቀፅ:
قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَیْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰۤی اَخِیْهِ مِنْ قَبْلُ ؕ— فَاللّٰهُ خَیْرٌ حٰفِظًا ۪— وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
12.64. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “இதற்கு முன்னால் இவரது சகோதரர் யூஸுஃபின் விஷயத்தில் உங்களை நம்பியதைப் போன்றல்லாது இவர் விஷயத்தில் உங்களை நான் நம்ப வேண்டுமா? அவர் விடயத்தில் உங்களை நான் நம்பினேன். நீங்கள் அவரைப் பாதுகாப்பதாக எனக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் உங்களின் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றவில்லை. எனவே இவரைப் பாதுகாப்பதாக நீங்கள் அளிக்கும் வாக்குறுயில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் அல்லாஹ்வையே நம்புகிறேன். அவனே தான் பாதுகாக்க நாடியவர்களை சிறந்த முறையில் பாதுகாக்கக் கூடியவன்; தான் நாடியவர்களுக்கு கருணை காட்டுவதில் மிகச் சிறந்தவன்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَیْهِمْ ؕ— قَالُوْا یٰۤاَبَانَا مَا نَبْغِیْ ؕ— هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَیْنَا ۚ— وَنَمِیْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَیْلَ بَعِیْرٍ ؕ— ذٰلِكَ كَیْلٌ یَّسِیْرٌ ۟
12.65. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த தங்களின் உணவுப் பையை திறந்த போது அதற்கான விலைப் பொருட்கள் தங்களிடமே திருப்பி அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்கள்: “இந்த அளவு கண்ணியம் அளித்த பிறகு இந்த அரசரிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும்? உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக நாம் அளித்த விலையை அரசர் நம்மீது கொண்ட அருளினால் நமக்குத் திருப்பித் தந்துள்ளார். நாங்கள் எங்கள் குடும்பத்தாருக்கும் உணவு கொண்டு வருவோம். நீங்கள் அஞ்சும் விஷயத்திலிருந்து எங்களின் சகோதரரையும் பாதுகாப்போம். அவர் எங்களுடன் வருவதால் ஓர் ஓட்டகம் அளவு தானியத்தையும் அதிகமாகப் பெறுவோம். ஓர் ஒட்டகம் அளவு அதிகமாக தானியம் வழங்குவது அரசருக்கு மிகவும் இலகுவானதுதான்.”
ዓረብኛ ተፍሲሮች:
قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰی تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَاْتُنَّنِیْ بِهٖۤ اِلَّاۤ اَنْ یُّحَاطَ بِكُمْ ۚ— فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟
12.66. அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “உங்களால் தவிர்க்க முடியாதளவு ஆபத்து ஏற்பட்டு உங்களில் எவரையும் விட்டுவைக்காமல் நீங்கள் அழிந்தாலே தவிர நீங்கள் அவரை என்னிடம் திரும்ப அழைத்து வருவீர்கள் என்பதற்கு அல்லாஹ்வின் பெயரால் உறுதியான வாக்குறுதி வழங்காதவரை நான் அவரை உங்களுடன் அனுப்ப மாட்டேன். அவர்கள் அல்லாஹ்வின் பெயரால் உறுதியான வாக்குறுதி அளித்த போது அவர் கூறினார்: “நாங்கள் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளனாவான். அவனுடைய சாட்சியமே எங்களுக்குப் போதுமானது.”
ዓረብኛ ተፍሲሮች:
وَقَالَ یٰبَنِیَّ لَا تَدْخُلُوْا مِنْ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ ؕ— وَمَاۤ اُغْنِیْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ ۚ— وَعَلَیْهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟
12.67. அவர்களுக்கு அறிவுரை வழங்கியவாறு அவர்களின் தந்தை கூறினார்: “எகிப்தில் நீங்கள் அனைவரும் ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள். ஆனால் பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். இதுதான் யாரேனும் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் நீங்கள் அனைவரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உகந்ததாகும். அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் உங்களை விட்டும் அதனைத் தடுப்பதற்காகவோ அல்லது அவன் உங்களுக்கு நன்மையளிக்க விரும்பவில்லையெனில் நான் உங்களுக்கு நன்மையளிப்பதற்காகவோ இவ்வாறு கூறவில்லை. அல்லாஹ் விதித்ததே நடக்கும். அவனது நாட்டமே நிறைவேறும். நான் என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவன் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். சார்ந்திருப்பவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருக்க வேண்டும்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَمَّا دَخَلُوْا مِنْ حَیْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕ— مَا كَانَ یُغْنِیْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ اِلَّا حَاجَةً فِیْ نَفْسِ یَعْقُوْبَ قَضٰىهَا ؕ— وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
12.68. அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் அவர்களின் சகோதரரும் இருந்தார். அவர்களின் தந்தை கட்டளையிட்டவாறு அவர்கள் பல்வேறு வாயில்கள் வழியாக நுழைந்த போது அது அல்லாஹ் விதித்ததில் எதையும் அவர்களை விட்டும் தடுக்கவில்லை. அது யஃகூப் தம் பிள்ளைகளின் மீது காட்டிய பாசமும் அதனால் வழங்கிய அறிவுரையுமே அது. அல்லாஹ் விதித்ததே நிறைவேறும் என்பதை அவர் அறிந்தேயிருந்தார். விதியின் மீது நம்பிக்கை மற்றும் காரண காரியங்களைக் கடைப்பிடித்தல் தொடர்பாக நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தவற்றை அவர் அறிந்தவராவார். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அதனை அறியமாட்டார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَخَاهُ قَالَ اِنِّیْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
12.69. யூஸுஃபின் சகோதரர்கள் அவரது உடன் பிறந்த சகோதரனுடன் அவரிடம் நுழைந்த போது. யூஸுஃப் அவரைத் தம்மோடு சேர்த்துக் கொண்டார். அவரிடம் இரகசியமாகக் கூறினார்: “நான்தான் உம்முடைய உடன் பிறந்த சகோதரன் யூஸுஃப். எனவே உம் சகோதரர்கள் செய்த நோவினை, காட்டிய குரோதம், என்னை கிணற்றில் எறிந்தது ஆகிவற்றை எண்ணி கவலைப்படாதீர்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الأمر بالاحتياط والحذر ممن أُثِرَ عنه غدرٌ، وقد ورد في الحديث الصحيح: ((لَا يُلْدَغُ المُؤْمِنٌ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ))، [أخرجه البخاري ومسلم].
துரோகமிழைத்தவனிடம் எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருக்குமாறு ஏவுதல். ஒரே பொந்தில் விசுவாசி இரு முறைகள் தீண்டப்படமாட்டான் என ஆதாரபூர்வமான ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. ஆதாரம் புகாரி முஸ்லிம்

• من وجوه الاحتياط التأكد بأخذ المواثيق المؤكدة باليمين، وجواز استحلاف المخوف منه على حفظ الودائع والأمانات.
2. சத்தியத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளைப் பெற்று உறுதிப்படுத்திக் கொள்வது, கவனமாக இருப்பதன் ஒரு வகையாகும். அடமானம் அமானிதம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு சந்தேகத்திற்கிடமானவரிடம் சத்தியம் செய்யுமாறு கோரலாம்.

• يجوز لطالب اليمين أن يستثني بعض الأمور التي يرى أنها ليست في مقدور من يحلف اليمين.
3. சத்தியம் செய்யுமாறு வேண்டுபவர் சத்தியம் செய்பவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகக் கருதும் சில விஷயங்களை விதிவிலக்குச் செய்யலாம்.

• من الأخذ بالأسباب الاحتياط من المهالك.
4. அழிவு ஏற்படுத்துபவைகளை விட்டும் கவனமாக இருப்பது காரண காரியங்களைச் செய்வதில் உள்ளதே.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): ዩሱፍ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት