Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

XML CSV Excel API
Please review the Terms and Policies

പരിഭാഷ അദ്ധ്യായം: സ്സുമർ   ആയത്ത്:
وَنُفِخَ فِی الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ— ثُمَّ نُفِخَ فِیْهِ اُخْرٰی فَاِذَا هُمْ قِیَامٌ یَّنْظُرُوْنَ ۟
சூரில் ஊதப்படும். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِایْٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
(மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மட்டார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا یَفْعَلُوْنَ ۟۠
ஒவ்வோர் ஆன்மாவும் தாம் செய்தவற்றுக்கு முழுமையாக கூலி வழங்கப்படும். அவன் அவர்கள் செய்கின்ற அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.
അറബി തഫ്സീറുകൾ:
وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ— قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟
நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அதற்கு (-அந்த நரகத்திற்கு அருகில்) வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும். இன்னும், அதன் காவலாளிகள் அவர்களுக்குக் கூறுவார்கள்: “உங்களில் இருந்தே உங்களுக்கு தூதர்கள் வரவில்லையா? அவர்கள் உங்களுக்கு உங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டினார்களே. நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி உங்களை எச்சரித்தார்களே.” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டது.”
അറബി തഫ്സീറുകൾ:
قِیْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
(அவர்களுக்கு) கூறப்படும்: நீங்கள் நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள். பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
അറബി തഫ്സീറുകൾ:
وَسِیْقَ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَی الْجَنَّةِ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَیْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِیْنَ ۟
தங்கள் இறைவனை அஞ்சியவர்களை கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் நிரந்தரமானவர்களாக நுழைந்து விடுங்கள்!
അറബി തഫ്സീറുകൾ:
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَیْثُ نَشَآءُ ۚ— فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟
அவர்கள் கூறுவார்கள்: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன்தான் தனது வாக்கை எங்களுக்கு உண்மையாக்கினான். இன்னும் இந்த (சொர்க்க) பூமியை எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். இந்த சொர்க்கத்தில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் தங்குவோம். நல்லமல் செய்வோரின் கூலி மிகச் சிறந்ததாகும்.
അറബി തഫ്സീറുകൾ:
 
പരിഭാഷ അദ്ധ്യായം: സ്സുമർ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

അവസാനിപ്പിക്കുക