Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

XML CSV Excel API
Please review the Terms and Policies

പരിഭാഷ അദ്ധ്യായം: ന്നഹ്ൽ   ആയത്ത്:
وَتَحْمِلُ اَثْقَالَكُمْ اِلٰی بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِیْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ ؕ— اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ
மிகுந்த சிரமத்துடனே தவிர நீங்கள் சென்று அடைய முடியாத ஊருக்கு அவை (உங்களையும்) உங்கள் சுமைகளையும் சுமக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.
അറബി തഫ്സീറുകൾ:
وَّالْخَیْلَ وَالْبِغَالَ وَالْحَمِیْرَ لِتَرْكَبُوْهَا وَزِیْنَةً ؕ— وَیَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
குதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகனிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அவற்றை அல்லாஹ் படைத்தான்). இன்னும் நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன்) படைப்பான்.
അറബി തഫ്സീറുകൾ:
وَعَلَی اللّٰهِ قَصْدُ السَّبِیْلِ وَمِنْهَا جَآىِٕرٌ ؕ— وَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟۠
நேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். வழிகளில் (சில) கோணலானதும் உள்ளது. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான்.
അറബി തഫ്സീറുകൾ:
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً لَّكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِیْهِ تُسِیْمُوْنَ ۟
அவன்தான் மேகத்திலிருந்து மழை நீரை இறக்குபவன். அதில் உங்களுக்கு குடிநீர் இருக்கிறது; அதிலிருந்து மரங்கள் (செடி கொடிகள், புற்பூண்டுகள்) முளைக்கின்றன. அவற்றில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
یُنْۢبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّیْتُوْنَ وَالنَّخِیْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
அதைக் கொண்டு பயிர்களையும், ஸைத்தூன், பேரீச்சை மரம், திராட்சைகள் இன்னும் எல்லா கனிவர்க்கங்களி(ன் மரங்களி)லிருந்தும் அவன் உங்களுக்கு முளைக்க வைக்கிறான். நிச்சயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு இவற்றில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
അറബി തഫ്സീറുകൾ:
وَسَخَّرَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ ۙ— وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ— وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌ بِاَمْرِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟ۙ
அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தினான். நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளையைக் கொண்டு (உங்களுக்கு) வசப்படுத்தப்பட்டவையாகும். நிச்சயமாக சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இவற்றில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
അറബി തഫ്സീറുകൾ:
وَمَا ذَرَاَ لَكُمْ فِی الْاَرْضِ مُخْتَلِفًا اَلْوَانُهٗ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّذَّكَّرُوْنَ ۟
இன்னும் எதை பூமியில் உங்களுக்காக மாறுபட்ட நிறங்களையுடையதாகப் படைத்தானோ (அதையும் உங்களுக்கு வசப்படுத்தினான்). நல்லுபதேசம் பெறுகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
അറബി തഫ്സീറുകൾ:
وَهُوَ الَّذِیْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ— وَتَرَی الْفُلْكَ مَوَاخِرَ فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
கடலிலிருந்து பசுமையான (மென்மையான) மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காகவும், நீங்கள் அணிகிற ஆபரணங்களை அதிலிருந்து நீங்கள் வெளியெடுப்பதற்காகவும், அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும், (இவற்றை எல்லாம் பெற்றதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் வசப்படுத்தியவன் அவன்தான். இன்னும் அதில் (கடலை) பிளந்து செல்பவையாக கப்பல்களைப் பார்க்கிறீர்.
അറബി തഫ്സീറുകൾ:
 
പരിഭാഷ അദ്ധ്യായം: ന്നഹ്ൽ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

അവസാനിപ്പിക്കുക