Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Verse: (17) Surah: Al-Kahf
وَتَرَی الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْیَمِیْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِیْ فَجْوَةٍ مِّنْهُ ؕ— ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ ؕ— مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ— وَمَنْ یُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِیًّا مُّرْشِدًا ۟۠
18.17. அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செயல்படுத்தினார்கள். அல்லாஹ் அவர்களை தூங்க வைத்தான். எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தான். -அவர்களை பார்க்கக்கூடியவரே!- சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது அது அவர்களின் குகையைவிட்டு அதிலே நுழைபவருக்கு வலப்பக்கமாகச் சாய்வதையும் அது மறையும்போது அவர்கள் மீது விழாமல் இடப்பக்கமாகச் சாய்வதையும் காண்பீர். அவர்கள் நிரந்தர நிழலில் இருந்தார்கள். சூரிய வெப்பம் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் குகையில் அவர்களுக்குத் தேவையான காற்றுக் கிடைக்குமளவு விசாலமான இடத்தில் இருந்தார்கள். குகையில் அவர்கள் தஞ்சமடைந்தது, அங்கு அவர்கள் மீது தூக்கம் சாட்டப்பட்டது, சூரியன் அவர்கள் மீது விழாமல் இருந்தது, விசாலமான இடத்தைப் பெற்றது, தங்கள் சமூகத்தவரிடமிருந்து தப்பித்தது ஆகியவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆச்சரியமான சான்றுகளாகும். அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவராவார். அவன் யாரைக் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேரான வழியைக்காட்டும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். ஏனெனில் நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது வேறு எவரிடத்திலும் இல்லை.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• من حكمة الله وقدرته أن قَلَّبهم على جنوبهم يمينًا وشمالًا بقدر ما لا تفسد الأرض أجسامهم، وهذا تعليم من الله لعباده.
1. அல்லாஹ்வின் ஞானத்திலும் அவனது வல்லமையிலும் உள்ளதுதான் பூமி அவர்களின் உடல்களைக் கெடுத்துவிடாமலிருக்கும் அளவுக்கு அவன் வலதுபுறமும் இடதுபுறமும் அவர்களின் உடல்களை புரட்டிக்கொண்டே இருந்தான். இது அல்லாஹ் தன் அடியார்களுக்குக் கற்பிக்கும் போதனையாகும்.

• جواز اتخاذ الكلاب للحاجة والصيد والحراسة.
2. தேவைக்காகவும், வேட்டையாடுவதற்காகவும், பாதுகாப்புப் பணிக்காகவும் நாய்களைப் பயன்படுத்தலாம்.

• انتفاع الإنسان بصحبة الأخيار ومخالطة الصالحين حتى لو كان أقل منهم منزلة، فقد حفظ ذكر الكلب لأنه صاحَبَ أهل الفضل.
3. மனிதன் நல்லவர்களின் தொடர்பால், அவர்களோடு சேர்ந்து இருப்பதால் பயனடைகிறான். அவர்களை விட அவன் அந்தஸ்தில் குறைவானவனாக இருந்தாலும் சரியே. எனவேதான் நல்லவர்களுடன் இருந்த நாயைப் பற்றிய குறிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

• دلت الآيات على مشروعية الوكالة، وعلى حسن السياسة والتلطف في التعامل مع الناس.
4. பொறுப்பாளராக நியமித்தல் சட்டபூர்வமானது, மக்களுடன் நல்லமுறையிலும் மிருதுவாகவும் நடந்துகொள்ளவேண்டும் என்பவற்றுக்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

 
Translation of the Meanings Verse: (17) Surah: Al-Kahf
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close